அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு சமூகவலைத்தள பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
பொதுபல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் ஜயசிங்க தனது சமூக வலைத்தள பதிவு ஒன்றில் புலனாய்வுச்சேவையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகள் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர்.எனக் கூறியுள்ளார்.இந்த பதிவு பொதுபல சேனாவின் ஆதரவாளர்களால் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட சில முஸ்லிம் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் சிங்கள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தும் பொதுபல சேனா தகுந்த ஆதாரங்கள் எதனையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment