Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label சர்வதேசம். Show all posts
Showing posts with label சர்வதேசம். Show all posts

காஸாவில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் - இஸ்ரேல் சுற்றுலாத் துறை அமைச்சர்


இஸ்ரேல் காஸாவுக்கெதிரான போரில் தோல்வியடைந்து விட்டது என இஸ்ரேல் சுற்றுலாத்துறை அமைச்சர் Uzi Landau கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

"இஸ்ரேல் பாரியளவான எதிர்பார்ப்புக்களுடன் காஸா மீது தாக்குதல்களை ஆரம்பித்தது. எனினும் இஸ்ரேல் அதன் எந்த குறிக்கோலையும் இந்த தாக்குதல்கள் மூலம் அடைய முடியவில்லை. குறைந்த பட்சம் ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கூட நிறுத்த முடியாமல் போய்விட்டது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கொள்கைகளால் இன்று நாம் உலகின் முன் தலை குனிந்து நிற்கின்றோம். உலக நாடுகளில் இஸ்ரேலுக்கிருந்த ஆதரவும் குன்றி விட்டது." எனக்கூறியுள்ளார்.

அத்துடன் ஹமாஸின் சுரங்கப்பாதைகளை தகர்க்கும் இஸ்ரெலின் முயற்சியும் படு தோல்வியில் முடிந்துள்ளதாக கூறிய அவர் இஸ்ரேல் இராணுவத்தைக் கடுமையாக சாடியுள்ளார்.

25 நாட்களாக காஸா மீது நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 65 பேரே கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் கூறினாலும் அந்த எண்ணிக்கை 150 ஐயும் தாண்டி விட்டது என ஹமாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments

ஈராக் உள்நாட்டு போர்: 2 எண்ணெய் வயல்களை கைப்பற்றியது குர்திஷ் படை



ஈராக்கில் கிர்குக் அருகே 2 பெரிய எண்ணெய் வயல்களை குர்திஷ் ராணுவமான பெஷ்மெர்கா கைப்பற்றியுள்ளது. ஈராக் நாட்டில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக  ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது.
அந்நாட்டின் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. அத்துடன் தாங்கள் கைப்பற்றிய சிரியா, ஈராக் பகுதிகளை ஒருங்கிணைந்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இதனிடையே ஈராக்கில் குர்திஷ் இன மக்கள் தங்களது பகுதியை தனிநாடாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குர்திஷ் சுயாட்சி மாகாணத்துக்குரிய ராணுவமான பெஷ்மெர்கா, கிர்குக் மற்றும் பாஸ்ஹசன் ஆகிய இடங்களில் உள்ள மிகப்பெரிய எண்ணை வயல்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் குர்திஷ் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 2 எண்ணெய் வயல்களில் இருந்த படைகளை வாபஸ் பெற்று அவற்றை அரசியிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 comments

சுவிஸ் வங்கிகளின் வயிறுகளை நிரப்பும் இந்தியர்களின் கருப்புப் பணம்.. ஒரு “ஜிலீர்” ரிப்போர்ட்!


சென்னை: சுவிஸ் வங்கிகளுக்குப் போட்டியாக பல்வேறு நாடுகளும் கருப்புப் பண சேமிப்புக்கு சொர்க்கமாக வந்து விட்டபோதிலும், சுவிஸ் வங்கிகளுக்கு தொடர்ந்து மவுசு இருக்கத்தான் செய்கிறது. சுவிஸ் வங்கிகள் தொடர்ந்து இந்தியப் பெரும் பணக்காரர்களின் பாதுகாப்புப் பெட்டகமாக இருந்து வருகின்றன. இங்கு சேர்க்கும் பணத்தை அங்கு போய் கொட்டி வருகிறார்கள் இந்தியப் பணக்காரர்கள். இங்கு வைத்தால் ஏகப்பட்ட சட்டச்சிக்கல்கள், நிதிச் சிக்கல்கள் இருப்பதால் எந்தக் கேள்வியையும் கேட்காத சுவிஸ் வங்கிகளை இந்தியர்கள் அதிக அளவில் நாடுகின்றனர்.
2006ல் 41,400 கோடி
கடந்த 2006ம் ஆண்டு கணக்குப்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருந்த பணத்தின் அளவு ரூ. 41,400 கோடியாகும்.
2007ல் பெரும் சரிவு
ஆனால் இது 2007ம் ஆண்டு வெகுவாக சரிந்தது. அதாவது ரூ. 27,500 கோடியாக அது குறைந்து போனது. இங்கு போட்டு வைத்திருந்த பணத்தை வேறு வங்கிகளுக்கு பலரும் மாற்றி விட்டனர் – பாதுகாப்பு கருதி.
2008ல் இன்னும் சரிவு
2008ம் ஆண்டு இது மேலும் சரிந்து ரூ. 15,400 கோடியாக குறைந்தது.
2009ல் ரூ. 12,600 கோடி
இது 2009ம் ஆண்டு இன்னும் குறைந்து ரூ. 12,600 கோடியாக இருந்தது.

2010 நிலவரம் 
2010ம் ஆண்டு இந்தியர்களின் பண இருப்பு ரூ. 12,450 கோடியாக இருந்தது.
2011ல் அதிகரிப்பு
2011ம் ஆண்டு இந்தியர்களின் பணம் ரூ. 14,000 கோடியாக அதிகரித்தது.
2012ல் 9000 கோடி 2012ம் ஆண்டு 9000
கோடியாக இருந்தது இந்தியர்களின் பண நிலவரம்.

கிடுகிடு உயர்வு 2013
இறுதியில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருந்த பணத்தின் அளவு அதிகரித்து ரூ. 14,000 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments

இஸ்ரேலில் வந்து விழும் ஹமாஸின் ஏவுகணைகளும் கறுப்பின யூதர்களும் - தெரியாத வரிகள்!!!




யுத்தம் எதையுமே விட்டு வைப்பதில்லை. அதில் ஆபிரிக்கர்களும் அடங்குவர். வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஆபிரிக்க கண்ட நீக்ரோய்ட்கள், வளமான வாழ்விற்காக ஐரோப்பிய தேசங்களிற்கு உயிரை பணயம் வைத்து கடல் கடந்து செல்வதும் நடுக்கடலில் விபத்துக்களில் சிக்கி இறப்பதும் வழமையான செய்திகள். முன்னர் அல்ஜீரியா, மொராக்கோ போன்ற தேசங்களிற்கு சென்று மத்திய தரைக்கடல் ஊடாக பிரான்ஸிற்கு அசைலம் கோரி சென்ற ஆபிரிக்கர்களிற்கு அது இப்போது முடியாமல் உள்ளது. பிரான்ஸ் மற்றும் வட ஆபிரிக்க நாடுகளின் கரையோர கண்காணிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. 
ஆபிரிக்காவில் இருக்கும் யூதர்களை இனங்கண்டு தன்சானியா, சாட் போன்ற நாடுகளில் இருக்கும் மொஸாட்டின் ஏஜென்ட்கள் தங்களது முகவர்கள் மூலம் “இஸ்ரேலிற்கு சென்றால் செழிப்பான வாழ்க்கை வாழலாம்” எனும் கனவுகளை அவர்கள் மனங்களில் விதைப்பதன் ஊடாக அவர்களை இஸ்ரேலிற்குள் அசைலம் சீக்கர்ஸ் என்ற பெயரில் கடத்திக் கொண்டு வருவது கடந்த ஒரு தசாப்தமாக நிகழ்ந்து வரும் ஆட்கடத்தல் நடைமுறை.

கிழக்கைரோப்பிய யூதர்களையும், இலத்தீன் அமெரிக்க யூதர்களையும் இஸ்ரேலில் (ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன எல்லையோரங்களில்) குடியிருத்துவதற்கு இஸ்ரேல் எவ்வளவு முயன்றும் அது நடைமுறை சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. ஹமாஸின் ஒரு ரொக்கெட் வந்து வீழ்ந்து வெடித்தாலே அவர்கள் மூட்டை முடிச்சுக்களை மீண்டும் தயார் செய்து விடுகின்றனர். அரசு எவ்வளவு தான் இலவச வசதிகளை வழங்கியும் கூட அவர்கள் அதனை விடவும் பலஸ்தீனர்களின் ஒரு குண்டு வெடிப்பிற்கு அச்சம் கொள்கின்றனர். யூத இனம் மரணத்திற்கும் அதன் இழப்புகளிற்கும் மிகவும் பயந்தவர்கள் என்பது உலக வரலாறல்லவா?!!.

இப்போது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறது ஸியோனிஸம். முதலாவது எல்லையோரங்களில் கறுப்பின யூதர்களை குடியிருத்துவதன் மூலம் திட்டமிட்ட அகன்ற இஸ்ரேல் சாம்ராஜ்யத்திற்கான மக்கள் தொகையை அதிகரிப்பதும் பயந்து சொந்த நாடுகளிற்கு செல்லும் வெள்ளையின யூதர்களின் இடைவெளிகளை நிரப்புவதும். இரண்டாவது, இஸ்ரேலில் கூலித்தொழில் செய்ய இப்போது பலஸ்தீனர்கள் பெரிதாக எல்லை கடந்து வருவதில்லை. அவர்களை நம்பவும் முடியாது. அதனால் கறுப்பின யூதர்களிற்கு புகலிடம் வழங்குவதன் ஊடாக அவர்களை உயர் ஜாதி வெள்ளையின் யூதர்களிற்கு சேவகம் செய்யும், இரண்டாம் சமூதாயமாக கறுப்பின யூதர்களை பயன்படுத்துவது. 

பல்லாயிரக்கணக்கான ஆபிரிக்காவின் கறுப்பு யூதர்கள் டெல்-அவிவின் தென்பிரதேசங்களில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம், இடைத்தங்கள் முகாம்கள் என்ற பெயரில் அவர்களிற்கு “ஸியோனிஸம்” பற்றியும், அரபுகளிற்கு எதிரான பயங்கரவாத சிந்தனைகள் பற்றியும் மூளைச்சலவைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் திருப்திகரமானவர்கள், தங்கள் கருத்தை உள்வாங்கியவர்கள் என இனங்காணப்பட்டவர்களிற்கு அரச வசதிகளுடன் செல்டரிங் ஸ்கீமில் வீடுகள் வழங்கப்படுவதுடன் அவர்கள் மேல்தட்டு யூதர்களிடம் சக்கிலியர்களாக தொழில் செய்யும் நிலைமைகள் உருவாக்கப்படுகின்றன. 

கறுப்பர்களை பொருத்தவரை நல்ல சாப்பாடு, இலவச மருத்துவம், நீர் மற்றும் மின்சார விநியோகம், சிறந்த பாதைகள், கல்விக்கூடங்கள் என எல்லாமே கிடைக்கிறது. நல்ல சம்பளத்தில் தொழிலும் கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கன் பேக்கர் பன் கிடைக்கிறது. போதாதா. ஐரோப்பிய கனவுகளை தூக்கி வீசிவிட்டு யூத ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் தம்மையும் விரும்பியோ விரும்பாமலோ இணைத்து கொள்கின்றனர். 

இங்கே தான் வந்தது வினை. ஹமாஸின் கஸ்லாம் படையணியும், அல்-அக்ஸா பிரிக்கேட் என்ற பெயரில் ஹிஸ்புல்லாக்களும் ஏவும் ரொக்கெட்கள் வந்து இஸ்ரேலில் விழ ஆரம்பிக்கும் போது இவர்களிற்கான தற்காப்பு ஒழுங்குகளை இஸ்ரேல் செய்து கொடுக்கவில்லை. சைரன்கள் அலறியவுடன் எங்கு ஓடுவது எங்கு பதுங்குவது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறார்கள் இந்த யூத கறுப்பர்கள். அவர்கள் இதில் படுகாயப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, இஸ்ரேலிய அரசு அதனை இஸ்ரேலிய பொதுமக்களின் இழப்பாக உலகிற்கு காட்டுகிறது. கறுப்பர்கள் வறுமையின் காரணமாக கஸ்டங்களையும் இழப்புக்களையும் தாங்கிக் கொண்டு உணவிற்காகவும், பிற வசதிகளிற்காகவும் வாழவும் சாகவும் தயாரானவர்கள் என்ற மூலதனமே இஸ்ரேலின் இந்த மனித கேடய யுக்தி. 

எம்-75 ரொக்கெட்கள் இப்போது புதிதாக வந்து விழ ஆரம்பித்த போது அவை டெல்-அவீவின் தென்பகுதிகளையே தாக்குகின்றன. அதன் வீச்செல்லை வரை அது வந்து வீழ்கிறது. இப்போது அங்குள்ள கறுப்பர்கள் ஆட்டு மந்தைகள் போல சிதறி ஓடுகிறார்கள். சைரன்கள் எச்சரிக்கை அபாய ஒலிகளை எழுப்பும் போது இவர்களிற்கு புகழிடம், காப்பரண் என்பது பதுங்கு குழிகளே. பொதுப்பதுங்கு குழிகள். பல மணி நேரம் மல சலம் கழிக்க முடியாமல் உயிரை கையில் பிடித்து கொண்டு அவர்கள் மேலே அண்ணாந்து பார்த்தவாறு தங்கள் குழந்தைகளை அணைத்துக்கொண்டு இருக்கும் அவலக்காட்சிகள் இவை. 

இது இஸ்ரேல் காஸா சண்டைகளின் இன்னொரு முகம். ஸியோனிஸ தேசத்தின் சுயநலன்களிற்காக பலியாக்கப்படும் கறுப்பின யூதர்களின் இரத்தம் பற்றியது.....

http://khaibarthalam.blogspot.com/
0 comments

காஸாவில் இஸ்ரேல் என்ன செய்ய முயல்கிறது?...



காஸா மீதான தனது தாக்குதல்களை முழு பலஸ்தீனத்திற்கும் எதிரான தாக்குதல்களாக விஸ்தரிக்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் தங்களது தாக்குதல்கள் ஆனது மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல் நீண்ட காலம் நீடிக்கும் தாக்குதலாக நிகழ்த்தப்படும் என்றும் அது அறிவித்துள்ளது. பலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீது நடாத்தும் ரொக்கெட், மற்றும் மோட்டார் தாக்குதல்களிற்கு ஒரு நிரந்தர தீர்வினை காணாமல் ஓயப்போதவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேல் தாங்கள் செய்த தவறின் வலிகளை பலஸ்தீன பயங்கரவாதிகளும் அவர்களிற்கு ஆதரவளித்தவர்களும் பல தலைமுறைகளிற்கு உணரும் அளவிற்கு தாங்கள் தகுந்த பாடம் புகட்ட உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இதனை அதனது பாதுகாப்பு அமைச்சர் Moshe Yaalon காட்டமான வார்த்தைகளின் ஊடாக தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினமான செவ்வாய்க்கிழமை (08-07-2014) வரை இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் காரணமாக 27 பலஸ்தீனர்கள் மரணமாகியுள்ளதாகவும், 137 பேர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் பலஸ்தீன தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய உளவு ஏஜென்சிகள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் கட்டிடங்கள், வாகனங்கள், வீடுகள் போன்றவற்றை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கி வருகின்றன. ஒரு சிறிய பிரதேசத்தில் 01 மில்லியன் மக்கள் அடர்த்தியாக வாழும் காஸா மீதான தாக்குதல் என்பது அதிக உயிர்ச்சேதங்களை விளைவிக்க வல்லதாக உள்ளன. 

தாங்கள் வான் தாக்குதல்கள் ஊடாக சில அடிப்படை சுத்திகரிப்புக்களை செய்துள்ளதாகவும், கடந்த செய்வாய்க்கிழமை வரை 180 இற்கும் அதிகமான சோட்டீஸ்களை (வான் பறப்பு தாக்குதல்களை) செய்து முடித்துள்ளதாகவும், இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை தாங்கள் அடைந்துள்ளதாகவும், இதன் பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் (IDF) பலஸ்தீன எல்லை நிலங்களை ஊடறுத்து தரை தாக்குதல்களை நிகழ்த்த உள்ளதாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட தாக்குதலிற்கு 40,000 இஸ்ரேலிய படையினர் பலஸ்தீன் நோக்கி நகர்த்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தாங்கள் 50 இற்கும் மேற்பட்ட பலஸ்தீன பயங்கரவாதிகளின் இலக்குகளை குறி வைத்துள்ளதாகவும், இவர்கள் மீது விமானங்கள் மட்டுமல்லாது கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள், ஆட்டிலறி எனும் நீண்ட தூர பீரங்கிகள் மூலமும் சமகாலத்தில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என்றும் இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்முறை தங்கள் முதன்மை இலக்காக இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் படையணியின் முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்கள் எங்கும் செல்ல முடியாத படி ஹீயுமன் சீல் நிலையில் தங்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அழித்தொழிப்பதை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நிகழும் என்றும் தாங்கள் தங்கள் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பதாகவும் இம்முறை இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இஸ்ரேலிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 40,000 இஸ்ரேலிய ரிசேர்வ போர்ஸஸ் இதில் பங்கேற்க உள்ள நிலையில் சுமார் 1500 இஸ்ரேலின் சிறப்பு படையினர்,  IDF's special K-9 யுனிட், Sayeret Maglan யுனிட் 212, Yamam யுனிட் போன்ற தாக்குதல் அணிகளும் முன்னிலைகளை கடந்த நிலையில் பலஸ்தீனில் நுழைய முற்பட்டுள்ளன. 

அல்-குதுஸ் பிரிக்கேட்டின் கொமாண்டர் Hafiz Hamadபெய்த் ஹனூனில் நடைபெற்ற வான் தாக்குதல்களில் ஏலவே மரணித்துள்ளார். 2012-ல் இஸ்ரேலிய ஸியோனிஸ இராணுவம் இது போன்றே காஸாவில் உள்நுழைந்து 08 நாட்கள் சமரிட்டது. ஆனால் ஹமாஸ் போராளிகளின் அர்ப்பணம் நிறைந்த தாக்குதல்களை முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்வாங்கிச் சென்றனர். அப்போது முதலே அவர்கள் காஸா மீதான இன்னொரு இனவழிப்பு தாக்குதலை நிகழ்த்த அவாக்கொண்டிருந்தனர், பத்ரில் தோற்று உஹதை எதிர்பார்திருந்த குறைசிய காபிர்கள் போன்று. 

2012-ல் நடைபெற்ற சண்டைகளில் இஸ்ரேலிய இராணுவத்தின் பெரிய பலமே அவர்களது அல்-மர்க்கபா யுத்த டாங்கிகளாகும். ஆனால் கஸ்ஸாம் போராளிகளின் தாக்குதல்களில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. அவற்றின் இழப்புக்கள் ஆரம்பித்த மறு மணித்தியாலங்களிலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தங்கள் இலக்கை வெற்றிகரமாக செயற்படுத்தி முடித்து விட்டதாக கூறி பின்வாங்க ஆரம்பித்தனர். பலஸ்தீனம் மீதான இப்போதைய தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவம் சின்-பெட்டினால் வழங்கப்பட்டுள்ள துல்லியமான உளவுத்தகவல்களையும், ட்ரோன் விமானங்களையும் பெரிதும் நம்பியுள்ளது. “எமக்கு இழப்புக்கள் அற்ற எதிரிக்கு அதிகபட்டச இழப்புக்களை உருவாக்கும் ஒப்பரேசன் இது” என ஏலவே ஜெரூஸலம் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்ததனை நாம் இங்கு சுட்டுவது பொருத்தமானதாக இருக்கும். 
http://khaibarthalam.blogspot.com/

0 comments

உலகில் முதன் முதலில் உருவாகும் 46 மைல் பரப்பளவில் குளிரூட்டபட்ட வணிக நகரம்




உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா  துபாயில்தான் உள்ளது. இதேபோல் இன்னொரு சாதனையை படைக்கவும் துபாய் தயாராகி வருகிறது. உலகின் முதல் குளிரூடபட்ட நகரம் ஒன்றை அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது

இந்த நகரம் 46 மைல்கள் பரப்பளவில் அமைய உள்ளது. பிரமாண்ட வணிக நகரில்  தியேட்டர்கள், வீடுகள் உடைய தெருக்கள் ,சுகாதார நிலையங்கள் மற்றும் நான்கு மைல் தூரம் உள்ள கடைவீதிகள் ஆகியவை அமையவுள்ளது. இவை அனைத்துமே ஒரே கூரையின் கீழ் முழுவதும் குளிரூட்டபட்ட வசதி செய்யப்பட உள்ளது. 8 மில்லியன் சதுர அடியில் அமையவிருக்கும் இந்த மாலில் பெரும்பாலான வீடுகள், ஓட்டல்கள் ஆகியவை கண்ணாடிகளால் கட்டப்படவுள்ளன. வருடத்திற்கு 180 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த மாபெரும் குளிரூட்டபட்ட நகரில் அமைந்துள்ள இடத்தை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்  தொடக்கவிழாவில் பேசிய ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம், "கலாசாரம், பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் துபாய் நாட்டை மேம்படுத்துவதற்காக இந்த வணிக நகரம் கட்டப்படுகிறது'  என்று கூறினார்.

இத்திட்டத்தை உருவாக்கிய துபாய் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் முகமது அப்துல்லா கூறுகையில், "இந்த நகருகுள்ளேயே அனைத்து வசதிகளும் உருவாக்கப்படுவதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாரம் முழுவதையும் இங்கேயே கழிக்கலாம் வெளியில் எங்கும் செல்லத் தேவையில்லை' என்று கூறினார்.
0 comments

பாலஸ்தீனத்தில் நடந்தேறும் இஸ்ரேலிய அராஜகம் - அமைதிகாக்கும் மனித உரிமை அமைப்புகள் (வீடியோ)


இங்கு இந்த காணொளியில் இருக்கும் இரு காட்சிகளும், போலிஸ்காரர்கள் சாதாரண மக்களை தாக்குவது குறித்த காட்சிகளாகும். இதில் உள்ள முதல் காட்சி இஸ்ரேலிய போலிஸார் சம்பந்தப்பட்டது.
கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட பாலத்தீனச் சிறுவனின் ஒன்று விட்ட சகோதரனை இஸ்ரேலிய போலிஸார் தாக்குவதாக இந்த காணொளியில் காட்டப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான 15 வயதான தாரிக் காதிர் ஃபுளோரிடாவில் இருந்து வந்தவராவார்.

இந்தக் காணொளி குறித்து இஸ்ரேலிய போலிஸார் இப்போது புலனாய்வு செய்கிறார்கள்.




இரண்டாவது காணொளி அமெரிக்க போலிஸார் சம்பந்தப்பட்டது.
இதில் கீழே விழுந்து கிடக்கும் பெண்ணை போலிஸார் திரும்பத் திரும்ப தாக்குகிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மேற்கே நடு வீதியால் நடந்து, அந்தப் பெண் தனக்கும் கார்களை ஓட்டி வருபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதாக போலிஸார் கூறுகிறார்கள்.

0 comments

பாக்தாத்தில் வந்து இறங்கிய போர் விமானங்கள்: எங்கிருந்து வந்தன இவை?


ராக்கில் நடக்கும் யுத்தத்தில் ராணுவ ரீதியாக ISIS இயக்கத்தின். கை ஓங்கியுள்ள நிலையில், ஈராக்கிய அரசு அவசர அவசரமாக போர் விமானங்களை தமது விமானப் படைக்காக கொண்டு வந்து இறக்குகிறது. முதல் கட்டமாக ரஷ்யா ஐந்து சுகோய் Su-25 ரக போர் விமானங்களை கொடுத்தது. அதன்பின் வேறு 3 போர் விமானங்கள் பாக்தாத் வந்து இறங்கின. இவையும் சுகோய் Su-25 ரக போர் விமானங்கள்தான்.
அமெரிக்கா அனுப்பிய ராணுவ ஆலோசகர்கள் பாக்தாத் வந்து இறங்கிய பின்னர், இந்த 3 விமானங்களும் வந்து இறங்கின.

இந்த விமானங்கள் வந்தபோது ஈராக்கிய விமானப்படை தளபதி உட்பட, முக்கிய அதிகாரிகள் விமானத் தளத்துக்கு வந்து இந்த விமானங்களை வரவேற்றார்கள். “இந்த விமானங்களும் ரஷ்யாவால் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்கள்தான். ஒரே டீலில் வாங்கப்பட்ட விமானங்களில் ஒரு பகுதி முதலில் வந்தன. மீதி இப்போது வந்துள்ளன” என ஈராக்கிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

அதுவரைக்கும், யாவரும் நலம்.

“முதல் செட் 5 விமானங்கள் ஈராக் வந்திறங்கியபோது, அவற்றை வரவேற்க யாரும் வரவில்லை. இரண்டாவது செட் 3 விமானங்கள் வந்தபோது மட்டும் வரவேற்பு பலமாக இருந்ததே.. என்ன காரணம்?” என நம்மைப் போல சந்தேகப் பிராணிகள் சிலர் ஆச்சரியப்பட்டார்கள்.
அதன்பின்தான் தெரிந்தது, முதலில் வந்த 5 விமானங்களும், அவற்றின் wingகள், tailகள் எல்லாம் கழட்டப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டு, கார்கோ விமானம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டது என்ற விஷயம். இரண்டாவது செட்டில் வந்த மூன்று விமானங்களும், விமானிகளால் செலுத்தப்பட்டு பறந்து வந்தன.

ஈராக்கிய விமானப்படை புளகாங்கிதம் அடைந்து, அதை வீடியோ எடுத்தும் வெளியிட்டது. வீடியோவை கட்டுரைக்கு கீழேயுள்ள லிங்கில் பார்க்கவும்.
ஒரே கான்ட்ராக்டில் வாங்கப்படும் விமானங்கள் இப்படி வேறு வேறு விதமாக டெலிவரி செய்யப்படுவது வழக்கமில்லையே.. இது என்ன, புதுக் கதையாக உள்ளது என மிலிட்டரி ஏவியேஷன் அனுபவம் உள்ளவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த ஆச்சரியம், இரண்டாவது செட் விமானங்களை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வைத்தது. அந்த ‘டீப் லுக்’, “ஆமா.. இவை நெசமாகவே ரஷ்யாவில் இருந்து வந்த விமானங்கள்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறுதியில், “இவை நிச்சயம் ரஷ்யாவில் இருந்து வந்திறங்கிய விமானங்கள் அல்ல” என்ற முடிவுக்கு வர வைத்தது.
ஆம். இவை நிச்சயம் ஈரானில் இருந்து வந்த விமானங்கள்!
இதை எப்படி சொல்கிறோம்?

ஈரானிய விமானப்படையைப் பொறுத்தவரை இந்த ரக விமானங்கள் அவர்களது விமானப்படையின் விருப்பத்துக்குரிய விமானங்கள் அல்ல. அவர்களிடம் உள்ள மற்ற விமானங்களுடன் சிறிய எண்ணிக்கையிலான Su-25 விமானங்களே உள்ளன (அவற்றையும் அவர்கள் காசு கொடுத்து வாங்கவில்லை).

அந்த விமானங்கள் அனைத்தும் ஒரு குறுகிய அளவில் (narrow range) 6 இலக்க சீரியல் இலக்கங்கள் கொடுக்கப்பட்டவை. அவற்றின் வரிசை இலக்கங்கள் (prefix) எப்படி உள்ளன என்று பார்த்தீர்கள் என்றால், ‘15-245-’ என்ற வரிசையில் உள்ளன. இதில் ‘-’ என்று நாம் குறிப்பிட்டதுதான் ஒவ்வொரு விமானங்களுக்கும் இடையிலான சீரியல் இலக்க வேறுபாடு.
அதாவது ஈரானிய விமானப்படையின் Su-25 விமானங்களின் சீரியல் இலக்கங்கள் 15-2451, 15-2452, 15-2453… என்றுதான் உள்ளன.

தற்போது ஈராக்கில் கொண்டுவந்து இறக்கப்பட்ட விமானங்களின் சீரியல் இலக்கங்களை பாருங்கள். முதல் 4 இலக்கங்களையும் அழித்துவிட்டு, இறுதி இலக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

51, 56, 58 ஆகிய இலக்க விமானங்களே பாக்தாத் வந்து இறங்கின! அவற்றில் ஒரிஜினல் சீரியல் இலக்கங்கள், 15-2451, 15-2456, 15-2458.
இந்த விமானங்கள் ஈரானின் IRGC படைப்பிரிவால் உபயோகிக்கப்பட்ட விமானங்கள்தான்! IRGC என்பது, Iranian Revolutionary Guard Corps.
எதற்காக இந்த ஒழிவு மறைவு?

காரணம், ஈராக்கில், ISIS இயக்கத்தினர் யுத்தத்தில் அடையும் வெற்றி, ஈராக்குக்கு மட்டுமல்ல, ஈரானுக்கும் சிக்கலே.
இந்த சன்னி பிரிவு இயக்கம் நாட்டை கைப்பற்றிவிட கூடாது என்பதற்காக ஷியா பிரிவை சேர்ந்த (முன்னாள் எதிரிகளான) ஈரானிய, ஈராக்கிய அரசுகளும் ஒன்று சேர்ந்துள்ளன. ஈரானுக்கு லோட் லோடாக ஆயுதங்களை அனுப்பி வைக்கும் ஈரான், போர் விமானங்களையும் கொடுத்துள்ளது.

ஆனால், ஈரானிடம் இருந்து யுத்த உபகரணங்களை யாரும் இறக்குமதி செய்யக்கூடாது என ஐ.நா.வின் சர்வதேச தடை அமலில் உள்ளது.
அதுவும், பாக்தாத்தில் அமெரிக்க ‘ராணுவ திட்டமிடலாளர்கள்’ வந்திறங்கி உள்ள நிலையில், “ஆமா.. ஈரானில் இருந்து விமானங்களை பெற்றுக்கொண்டோம்” என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா? அதுதான், “ரஷ்யாவில் இருந்து வந்த விமானங்கள்” என்று அந்த திசையில் கையை காட்டி விட்டார்கள்.

இந்த விஷயம் அங்கிள் சாமுக்கு (அமெரிக்கா) தெரியாதா? அவர்களுக்கு தெரியாமல் நீங்கள் உங்கள் கிச்சனில் கிச்சடிகூட செய்ய முடியாது!
அவர்களே இப்படியொரு ஐடியா (“ரஷ்யாவில் இருந்து வந்த விமானங்கள்”) கொடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதுதாங்க ராஜதந்திரம்! தமக்குள் ஒரு கதை, பொதுமக்களுக்கு ஒரு கதை! தமக்கு தேவையென்றால், ஐ.நா தடையாவது, ஒன்னாவது.. எல்லாவற்றையும் ஒழித்து மறைக்க ஆயிரம் வழிகள் உள்ளன!!
முழுசாக வந்து இறங்கிய விமானங்களின் பாயின்ட்-ஆஃப்-ஒரிஜினையே மறைத்து விட்டார்களே!


http://khaibarthalam.blogspot.com/

0 comments

இராணுவ வெற்றிகளில் கட்டியெழுப்பப்படும் “அல்-கிலாபா” - சில மயக்கங்கள்...!!

by:Abu Maslama


ரு அமைப்பு திடீரென தன்னை இஸ்லாமிய சாம்ராஜியத்தின் காவலர்கள் என பிரகடனம் செய்கிறது. அதன் தலைவர் தனக்கு பையா (சத்தியப்பிரமாணம் ) செய்யுமாறு வேண்டுகிறார். பல கோத்திரத் தலைவர்களும், ஆயுதக்குழுக்களும், உலகின் பல பாகங்களில் போராடும் போராளியமைப்புக்களும் இவர் கட்டளைக்கு கட்டுப்பட்டு பைஅத் செய்கின்றனர். உலக முஸ்லிம் உம்மாவும் இந்த வேண்டுகோளை மானசீகமாக ஆதரிக்கிறது. எல்லாம் சரி மூன்று கேள்விகளைத் தவிர.

முதலாவது, இஸ்லாமிய அரசின் அமீருல் முஃமினீன் என்பவர் மறைந்திருந்து கொண்டு தன்னை முஸ்லிம்களின் தலைவராக வெளிப்படுத்துகிறார். அவரது பழைய இரண்டு மூன்று புகைப்படங்களை மட்டும் வைத்துக்கொண்டு. அவர் பேசிய ஒலிநாடாக்களின் துணையுடன். இது இஸ்லாமிய வரலாற்றில் நிகழாத ஒரு நிகழ்வாகும். நபி தன்னை வெளிப்படுத்திய நிலையிலேயே யத்ரிப்பின் (மதீனா) கிலாபாவை ஒழுங்கமைத்தார். பின் வந்த உத்தம சஹாபாக்களும் அவ்வாறே வெளிப்படையாக செயற்பட்டனர். ஆனால் இங்கோ நிலை தலைகீழாக உள்ளது. உமர் ரழி அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லீம்களின் கருத்து பரிமாறல்கள் இல்லாமல், அவர்களது ஆலோசனையை பெறாமல் ஒரு மனிதருக்கு பைஅத் செய்கிறானோ அவர் தன்னை ஏமாற்றத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்திக் கொண்டார்.

இரண்டாவது, முற்றாக ஈராக்கினை கைப்பற்றாத நிலையில், சிரியாவை அசாத்தின் இராணுவத்திடம் இருந்து பூரணமாக மீட்க முடியாத நிலையில், அது தன்னை இஸ்லாமிய கிலாபா என்கிறது. அது மட்டுமல்ல அவசர அவசரமாக ஜோர்தான் நோக்கியும், சவுதி அரேபியா நோக்கியும் அதன் அணிகளை நகர்த்துகிறது. வட ஆபிரிக்காவையும், மேற்காசியாவையும், தெற்காசியாவையும், கிழக்காசியாவையும், அவுஸ்திரேலியாவையும் இஸ்லாமிய ஆளுகைக்குள் கொண்டு வருவோம் என சூளுரைக்கிறது. அதற்கான வரைபடங்களை வெளியிடுகிறது. இராணுவவியலில் இது முட்டாள்தனமான செயற்பாடு என்பதனை விட ஒரு பொய்யான இராணுவ புனைதல் என்றே நோக்க வேண்டியுள்ளது. ஒரு கெரில்லாக் குழு மரபு இராணுவமாக பரிணமித்த நிலையில் அது பேசும் வேடிக்கையான வார்த்தைகள் இவை. 

மூன்றாவது, இந்த ஐ.எஸ். எனும் அமைப்பின் கிலாபா பிரகடனத்தை உலகலாவிய முஸ்லிம் உம்மாவிற்காக போராடும் அல்லது அதற்காக உழைக்கும் ஜிஹாதிய ஆதரவு மார்க்க அறிஞர்கள் வரவேற்காமையாகும். கிலாபாவின் தேவையையும், அமீருல் முஃமினீனின் அவசியத்தையும் வலியுறுத்தும் இவர்கள் I.S. (Islamic State)-ன் வருகையை சில இராணுவ அரசியல் தேவைகளின் அடிப்படையில் அங்கிகரித்த போதிலும் அவர்களது கிலாபா பிரகடனத்தை ஆதரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. I.S. (Islamic State)-ன் பிதா மகனான முஸ்அப் அல்-ஸர்க்கவி (ரஹ்) அவர்களை வழி நடாத்திய அய்மன் ஸவாஹிரி (ரஹ்) அவர்களாகட்டும், சிரியாவினதும் ஈராக்கினதும் இவர்களது போராட்டத்திற்கு போராளிகளை அனுப்பும் சப்ளை பொட்களை வழிநடாத்திய அபூ-கதாதா (ரஹ்) ஆகட்டும், யாருமே இந்த பிரகடனத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரகடனத்தின் தேவையை மறுக்கவில்லை.  

கிலாபாமற்றும் அமீருல் முஃமினீன்”, இந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரு முஸ்லிமின் ஆன்மா, மனம், புத்தி, ஜீவன், உடல் என அனைத்திலும் எழுந்து நிற்கும் தீராத கனவு. இரத்தினங்கல் பட்டை தீட்டும் முன்பு சாதாரன கூலாங்கல் போலவே காட்சி தரும். அது போன்றுதான் ஒரு முஸ்லிமின் கிலாபத் பற்றிய அறிவு. அண்மைய ஈராக்கிய நிகழ்வுகள் இது பற்றி தெரியாத, அறியாத முஸ்லிம்களின் உள்ளங்களையும் தெளிவுபெறச் செய்து தமக்கு எதிராக நிகழ்த்தப்படும் குப்பாரிய வன்கொடுமைகளிற்கு எதிராக பாதுகாப்பளிக்கும் முஸ்லிம் சாம்ராஜியத்தின் எழுச்சியையும் வருகையையும் ஆதரிக்கவும், அதன்பால் அவர்களை மானசீகமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கச் செய்கிறது. 

ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய ஒரு அணி, பின்னர் 2006-ல் I.S.I. (Islamic State of Iraq) என்ற பெயரில் அது இயங்க ஆரம்பிக்கிறது. இஸ்லாமிக் ஸ்டேட் எனவும், அமீர் முஆவியாவின் ஆட்சியை உருவாக்குவது எனவும் பிரகடனம் செய்கிறார்கள். பலூஜாவை தளமாக கொண்டு அது தன்னை மேலும் பல கட்டமைப்புக்கள் கொண்ட அணியாக வடிவமைக்கிறது. சிரியாவில் பஸர் அல்-அஸாதிய அரசிற்கு எதிரான சண்டைகளில் பங்கேற்க இது ஒரு அணியை அனுப்புகிறது. அதில் பிளவு ஏற்பட்டு Jabah al-Nusrah (JN) எனும் அணி தனியாக இயங்குகிறது. அதன் கட்டளை தளபதியாக அஹமட் ஜுலானி செயற்பட ஆரம்பிக்கிறார். அதாவது I.S.I.-யின் பைஅத் எனும் உறுதிப் பிரமாணத்தை உடைத்து கொண்டு. 

பின்னர் இந்த I.S.I. அணியினர் நேரடியாகவே தங்கள் இன்னொரு அணியை சிரியாவில் இறக்குகிறார்கள். சில காலங்களில் அவர்கள் தங்களை I.S.I.S (Islamic State for Iraq & Sham) என பிரகடனம் செய்கிறார்கள். இவர்கள் I.S.I.L. (Islamic Stae for Iraq & Levant) எனவும் அழைக்கப்படுகிறார்கள். பெருமளவில் செச்னியர்களை கொண்ட போராளிக்குழுக்கள் இவர்கள் சார்பாக சிரியாவில் சமரிடுகிறார்கள். பின்னர் குளோபல் ஜிஹாத் எனும் பெயரில் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்த போராளிகள் இவ்வணியில் இணைந்து சண்டையிடுகிறார்கள். ஈராக்கின் பல நகரங்களை வெற்றி கொண்ட இவ்வணியினர் ரமழானில் நல்ல செய்தி ஒன்றை உலக முஸ்லிம்களிற்கு அறிவிப்பதாக கடந்த ஜுன் மாதம் செய்தி வெளியிடுகின்றனர் டிவீட்டரில். பின்னர் சில நாட்களிற்கு முன்னர் இஸ்லாமிய கிலாபாபிரகடனத்தை வெளியிடுகின்றனர். இதன் பின்னர் தங்களை I.S. (Islamic State) என அழைத்து கொள்ள ஆரம்பிக்கின்றனர். 

இப்போது தான் முஸ்லிம் உம்மாவிற்கு இது பற்றிய விழிப்புணர்வு உருவாகின்றது. அவர்களை அவசரமாகவும் ஆரவாரமாகவும் ஆதரிக்கின்றனர். எந்த அளவிற்கு என்றால் இந்தோனசியாவில் ஒன்று திரண்டு ஐ.எஸ். அமைப்பின் பிரதிநிதி முன்பு வீடியோ கொன்ஸ்பிரன்ஸ் மூலம் பைஅத் கொடுக்கும் அளவிற்கு. அவர்கள் பற்றிய கதைகள், காட்சிகள், சித்திரங்கள் என முஸ்லிம் மீடியாக்கள் அமர்களப்படுத்துகின்றன. நியாயமான எண்ணங்களின் தோற்றப்பாடுகள் இவை. 

ஐ.எஸ். எனும் கிலாபாவை பொருப்பேற்றுள்ள அபூபக்கர் அல்-பக்தாதி அவர்களை அமெரிக்காவின் கைக்கூலி என்றோ அவரது அமைப்பினரை இஸ்ரேலின் மேசனரி என்றோ கொச்சைப்படுத்துவது அல்ல இந்த எழுத்துக்களின் நோக்கம். அவர்களின் கிலாபா பிரகடனம் என்பது சில இராணுவ வெற்றிகளை மையப்படுத்தி எழுப்பப்பட்ட மாயையான கோபுரம் எனும் பார்வையை உணர்த்துவதற்காகவும், தமிழ் பேசும் முஸ்லிம் உம்மா இது தொடர்பில் சில புரிதல்களை உள்வாங்குதவன் அவசியம் பற்றியதுமே. 

I.S.
என்ற வார்த்தை பலமானது. அது உண்மையாக இயல்பாக நிகழ வேண்டும். அதன் அமீருல் முஃமினீன் எனும் முஸ்லிம்களின் தலைவர் அன்று காட்டரபிகள் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கையை முத்தமிட்டு நின்றது போல் மக்கள் முன்பாக சாதாரணமாக வெளிப்படல் வேண்டும். உறுதியான இஸ்லாமிய கிலாபாவின் இாஜியத்தை அமைத்ததன் பின்னர் அதன் விரிவாக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.  இது நிகழ்ந்தால் நாமும் I.S.-ன் குடிமகன்கள் என எண்ணி மகிழ்வோம்.

0 comments

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு தடுப்புக் காவல்…..!!

 

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாக இதன் மூலம் சர்கோசி பதிவாகியுள்ளார்.
இவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கவோ அல்லது சிறையில் அடைக்கப்படவோ கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
59 வயதாகும் இவர், கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹொலன்டேயிடம் தோல்வியைத் தழுவினார்.
இவருக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பொருட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments

சிரியா, ஈராக் பகுதிகளை இணைத்து “தனி இஸ்லாமியநாடு” என பிரகடனம் செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.!


மொசூல்: சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து தனி இஸ்லாமிய நாடு என்று பிரகடனம் செய்துள்ளது சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு. இதன் கலிபாவாக (மன்னராக) அபு பக்கர் அல் பக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது. ஷியா முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலக்காகும். இந்த அமைப்பில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் ஏராளாமானோர் உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சர்வதேச நாடுகள் எந்த ஒருநடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வந்தது.
ரஷியா, அமெரிக்கா 
இந்த நிலையில் திடீரென ஈராக்குக்கு ஆதரவாக ரஷியா ஜெட் போர் விமானங்களை அனுப்பி தாக்குதலை நடத்த உதவியது. அமெரிக்காவும் ஆளில்லா போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.
திக்ரித் சண்டை 
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமுள்ள நகரங்களை மீட்க ஈராக் ராணுவம் முயற்சித்துப் பார்த்து வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ள திக்ரித் நகரை மீட்க ஈராக் ராணுவம் போராடிப் பார்த்தது. ஆனால் அது கைகூடவில்லை.
அதிரடி பிரகடனம் 
இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைந்து ‘தனி இஸ்லாமிய நாடு” அமைத்துள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கலிபாவாக பக்தாதி 
அத்துடன் இந்த தனி இஸ்லாமிய தேசத்தின் மன்னராக (கலிபா) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் பெயர் மாற்றம் 
மேலும் தங்களது அமைப்பின் பெயரான ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது இனி “இஸ்லாமிய தேசம்” என மாற்றப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆடியோ ரிக்கார்டிங்கில் 34 நிமிட ‘இஸ்லாமிய தேசம்’ பிரகடனத்தை மேற்கொண்ட இந்த இயக்கத்தின் பிரமுகர் அபு மொஹமெட் அல்-அத்னானி, “தற்போது எமது கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அனைவரும், ‘இஸ்லாமிய தேசத்தின்’ பிரஜைகளாக மாற்றப்படுகின்றனர்.இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் தலைமையை ஏற்று, ‘இஸ்லாமிய தேசத்துக்கும்’ அதன் தலைவருக்கும் விசுவாசமானவர்களாக பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த ‘இஸ்லாமிய தேசம்’ அறிவிப்பு, முக்கியமானது மட்டுமல்ல, பல ராஜதந்திர குழப்பங்களையும் ஏற்படுத்த போகிறது. யுத்தத்தையும் வலுப்படுத்த போகிறது.
ஈராக்கிய ராணுவம் பகுதி கைப்பற்றிய திக்ரித் நகரத்தை மீண்டும் கைப்பற்றியதை அடுத்து, இந்த ‘இஸ்லாமிய நாடு’ அறிவிப்பு வெளியாகியுள்ளதில் இருந்து, இந்த இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச அரசியல் தெரிந்த யாரோ உள்ளார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.
இவர்களது ‘இஸ்லாமிய தேசம்’ அறிவிப்பு இன்றைய தேதியில் வெளியாவதில் என்ன முக்கியத்துவம் தெரியுமா?
அமெரிக்காவால் பயிற்சி கொடுக்கப்பட்ட1 லட்சம் வீரர்கள் கொண்ட  ஈராக்கிய ராணுவத்தை, சம்பிரதாயமான யுத்தத்தில் தோற்கடித்துள்ளது இந்த இயக்கம். இதனால், சன்னி வகுப்பை சேர்ந்த தலைமை உள்ள சில நாடுகள், இந்த ‘இஸ்லாமிய தேசம்’ என்பதை ஏற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உள்ளது.
மற்றொரு விஷயம், ISIS தீவிரவாத இயக்கம் பல வெளிநாட்டவர்களை உறுப்பினர்களாக கொண்ட இயக்கம். ஈராக்கிலும், சிரியாவிலும் இந்த இயக்கத்தின் சார்பில் யுத்தம் புரியும் ஆட்களில் பெரிய சதவீதத்தினர், இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் அல்ல, வெளிநாட்டவர்கள்.
இவர்களது ‘இஸ்லாமிய தேசம்’ அறிவிப்பு, மேலும் பல வெளிநாட்டவர்களை இந்த இயக்கத்தின் பக்கமாக திருப்ப போகிறது.

http://webapps.aljazeera.net/aje/custom/2014/ISILpaththruiraq/index.html

Map: Rebel’s path through Iraq

0 comments

ஈராக்கில் அமெரிக்கர்களின் மூக்கருகே ரகசியமாக(!) வந்து போகும் ஈரானிய விமானங்கள்!


அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள ‘ராணுவ ஆய்வாளர்கள்’ ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் போய் இறங்கிய நேரத்தில், ஈரான் விமானப்படைக்கு சொந்தமான கார்கோ விமானங்கள், பாக்தாத் நகர புறநகரப் பகுதியில் உள்ள விமானத் தளம் ஒன்றுக்கு ஷட்டில் அடித்துக் கொண்டிருந்தன.
ஈராக்குக்குள் நடக்கும் ஈரானிய விமான நடமாட்டங்கள், நிச்சயம் அமெரிக்கர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அமெரிக்கர்கள் அதுபற்றி மூச்சே விடவில்லை.
தற்போது ஈராக்கிலும், சிரியாவிலும் நகரங்களைப் பிடித்தும், ஜோர்தான் மற்றும் சவுதி எல்லைகளை நெருங்கியும் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய எழுச்சியும், கிடைத்துவரும் வெற்றிகளும், மற்ற நாடுகளின் ராஜதந்திர நிலைப்பாடுகளை எல்லாம் தலைகீழாக மாற்றிவிட்டன
முன்பு தமக்கிடையே முறுகிக் கொண்டிருந்த நாடுகளிடையே (உதாரணமாக அமெரிக்காவும், ஈரானும்) ஐ.எஸ்.ஐ.எஸ். பெற்றுவரும் வெற்றிகள் ஒருவித அன்டர்ஸ்டான்டிங்கை ஏற்படுத்தி விட்டன.
இதனால், ஒரே நாட்டுக்குள் (ஈராக்) ஒரே நேரத்தில், அமெரிக்க ராணுவ விமானங்களும், ஈரானிய ராணுவ விமானங்களும் இறங்கி, ஏறுகின்றன.
அமெரிக்க ராணுவ விமானங்கள், ‘ராணுவ ஆலோசகர்களை’ பாக்தத்தில் கொண்டுவந்து இறக்குவதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி. ஈரான் நாட்டு விமானங்களுக்கு அங்கே என்ன சோலி? அவர்கள் ஈராக்குக்குள் ஏதும் செய்வதாக வெளிப்படையான அறிவிப்பு இல்லையே?
அங்குதான் இருக்கிறது, இந்த யுத்தத்தின் திரைமறைவு விளையாட்டு. கடந்த மூன்று தினங்களாக, தினமொன்றுக்கு குறைந்தது இரு ஈரானிய கார்கோ விமானங்களாவது, பாத்தாத் அருகே தரையிறங்குகின்றன. அவை லேன்டிங் செய்தவுடன் ஈராக்கிய ராணுவ ஹெவி ட்ரக்குகள் விமானங்களை சூழ்ந்து கொள்கின்றன.
ஒவ்வொரு விமானத்தில் இருந்தும் சராசரியாக 150 டன் ராணுவ சப்ளைகள் இறக்கப்படுகின்றன. இப்படி, கடந்த 3 தினங்களில் மட்டும் 1,000 டன் ராணுவ சப்ளைகள் ஈரானில் இருந்து வந்து இறங்கியதாக தெரிகிறது.
ஈரான்மீது அமெரிக்க பொருளாதாரத் தடை உள்ளது. ஈரானிய ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா, மற்றும் ஐ.நா. தடை அமலில் உள்ளது.
ஆனால், தற்போது ஈராக்கில் ரகசியமாக நடக்கும் ஈரானிய ராணுவ சப்ளை, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ‘ராணுவ ஆய்வாளர்களின்’ மூக்கருகேதான் நடக்கின்றன. அப்படியிருந்தும் அமெரிக்கா தும்மல் போடுவதில்லை.
யுத்தம் என்று வந்துவிட்டால், ராஜதந்திர விளையாட்டின் விதிமுறைகளே மாறிவிடுகின்றன!
2 comments

ஐ.நா.வல்லுநர் அஸ்மா இலங்கை அரசாங்கத்தின் மீது காட்டம்!



இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார்.

மக்களை எதேச்சதிகாரமாக தடுக்க முயல்வது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார்.ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது என்று தீர்மானம் எடுத்துள்ள இலங்கை அரசாங்கம், அந்த விசாரணைக் குழுவுடன் தொடர்பு கொள்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ள விசாரணைக் குழுவை ஐநா மனித உரிமைகள் பேரவை கடந்த வாரம் அறிவித்தது.

ஃபின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கிர் ஆகிய மூன்று துறைசார் வல்லுநர்கள் இந்த விசாரணையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘எந்தவொரு அரசாங்கமும் விசாரணையாளர்களுடன் தொடர்புகொள்வதை தடுப்பது என்பது மிகவும் சிரமமான விடயமாகத் தான் இருக்கும். அரசாங்கம் எதேச்சாதிகாரத்தை பிரயோகித்து மக்களைத் தடுக்க நினைத்தால், அரசாங்கத்துக்குத் தான் அது பாதகமாக வந்துமுடியும்’ என்றார் அஸ்மா ஜெஹாங்கிர்.

எல்லா தரப்பினரும் புரிந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது விசாரணைக் குழு பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் தடுத்தாலும் மக்கள் தம்மோடு தொடர்புகொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டுகொள்வார்கள் என்றும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் அஸ்மா ஜெஹாங்கிர் கூறினார்.

அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன்னர் தாம் நடத்தியிருப்பதாகவும் விசாரணைக்குழு வல்லுநர் ஜெஹாங்கிர் தெரவித்தார்.

தமக்கு ரகசியமாக தகவல்களை அளிப்போரின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தமது விசாரணைகள் வரும் ஓகஸ்ட் முதல்- இரண்டு வாரங்களில் தொடங்கும் வாய்ப்புள்ளதாகவும் அஸ்மா ஜெஹாங்கிர் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger