Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label குற்றங்கள். Show all posts
Showing posts with label குற்றங்கள். Show all posts

ஆறு மாத காலத்திற்குள் 30 ஆயிரம் கோடி ரூபா ஊழல்!



இலங்கை அரச நிறுவனங்களில் 2013 அக்டோபர் துவக்கம் 2014 ஏப்ரல் வரைக்கும் 30,000 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை ஊழல் செய்யப்பட்டிருப்பதாக கோப் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
பாராளுமன்ற பொது நடவடிக்கை தொடர்பிலான கோப் குழுவினர் தயாரித்திருக்கும் இவ்வறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப் படவுள்ளது.
கோப் குழுவினர் இவ் ஊழல் தொடர்பில் அடிக்கடி அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்து வந்தும் ,எதுவித மாற்றங்களும் ஏற்படாத நிலையில்,இம்முறை அவர்கள் குறித்த ஊழல் விபரங்களை எழுத்து மூலம் அறிவிக்க இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
மின்சார சபை,பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,காப்புறுதிக் கூட்டுத்தபனம்,போக்குவரத்துச் சபை,சுங்கம்,இறைவரித் திணைக்களம்,புகையிரதத் திணைக்களங்களிலேயே அதிக ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2013 இல் மட்டும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 23,600 கோடி ரூபாவில் நஷ்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க அதேநேரம்,உலகில் நஷ்டத்தில் இயங்கிய ஒரே பெற்றோலிய நிறுவனம் இதுதான் என விமர்சனங்களும் எழுந்திருந்தமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கதே.
1 comments

30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் : சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை



தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைய கண்காணிப்பு பிரிவினால் 30 பாலியல் குற்றவாளிகளும் அந்த குற்றங்களுடன் தொடர்புடைய 300 பேரும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், சமூக வலையமைப்புகளின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரசபை இந்த குற்றங்கள் தொடர்பில் 7 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
0 comments

சந்தேக நபரைத் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த சிலாபம் பொலிஸார்



பொலிஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் தனது வலது கை செயலிழந்துள்ளதாக மாதம்பைப் பகுதியில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூறியுள்ளார். 28 வயதான சஞ்ஜீவ எதிரிசிங்ஹ என்பவரே இவ்வாறு பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.

மாதம்பை செம்புக்கட்டி பிரதேசத்தில் கடை ஒன்றை உடைத்து பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு மே மாதம் 9ம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் மே மாதம் 16ம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதுவரையான காலப்பகுதியில் தன்னை தெரியாத இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கியது மட்டுமல்லாது முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்குச் செய்த அநியாயங்களை குறித்த நபர் விவரிக்கும் வீடியோவினை கீழே பார்க்கலாம்.

1 comments

10வருடங்களாக இலங்கை சிறுவர்களை துஷ்­பி­ர­யோகம் செய்து வந்த பிரான்ஸ் நாட்டவர் இலங்­கைக்கு வந்­த பிரான்ஸின் விசேட பொலிஸ் குழு­வினால் அம்­ப­ல­மான கதை..



கடந்த மாதம் ஆரம்­பத்தில் பிரான்ஸின் விசேட பொலிஸ் குழு­வொன்று இலங்­கைக்கு வந்­தி­ருந்­தது. பிரான்ஸின் பொலிஸ் ஆணை­யாளர் ஒரு­வரும் இரு பொலிஸ் பரி­சோ­த­கர்­களும் அடங்­கிய அந்த குழு சுமார் இரு வாரங்­க­ளுக்கு மேலாக இலங்­கையில் தங்­கி­யி­ருந்து மிக முக்­கி­ய­மான ஒரு குற்­ற­வாளி தொடர்­பி­லான சாட்­சி­யங்­களை சேக­ரிக்­க­லா­னது.

இலங்கை வந்த அந்த பொலிஸ் குழு முதலில் சந்­தித்­தது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்க கோனை­யாகும். தாம் இலங்­கைக்கு வரு­வ­தற்­கான நோக்­கத்­தையும் திட்­ட­த்தையும் இலங்­கையின் வெளி விவ­கார அமைச்சின் ஊடாக சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கும் பொலிஸ் திணைக்­க­ளத்­துக்கும் அந்த பொலிஸ் குழு அறி­வித்­தி­ருந்­ததாலும் சம்­பி­ர­தாய பூர்­வ­மாக பொலிஸ் மா அதி­பரை சந்­தித்து தாம் வந்த நோக்­கத்தை அந்த பொலிஸ் குழு விளக்கத்தவறவில்லை.
பிரான்ஸில் கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்ட பிர­ப­ல­மான சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­ற­வாளி ஒருவர் தொடர்பில் சாட்­சி­யங்­களை தேடியே தாம் இலங்கை வந்­தி­ருப்­பதை பொலிஸ் மா அதி­ப­ரிடம் அந்த பிரான்ஸ் பொலிஸ் குழு விளக்­கி­யது.
இதனை அடுத்து பிரான்ஸ் பொலிஸ் குழுவை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­ச­பையின் தலைவர் திரு­மதி அனோமா திஸாநாயக்காவிடம் அனுப்பி வைக்­கின்றார்.
அங்கு சென்ற அந்த பிரான்ஸ் பொலிஸ் குழு திரு­மதி அனோமா திஸா­நா­யக்­கவை சந்­தித்து ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொண்டு சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் அனு­பவம் வாய்ந்த பொலிஸ் பரி­சோ­தகர் பந்து ஜீவ போபிட்­டி­கொட தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­ன­ருடன் இணைந்து விசா­ர­ணை­களை தொடர்ந்து சாட்­சி­யங்­களை திரட்­ட­லா­னது.
பிரான்ஸின் பொலிஸ் குழு­வொன்று இவ்­வாறு எமது நாட்­டுக்கு வந்து குற்­ற­வாளி ஒருவர் தொடர்பில் சாட்­சி­யங்­களை திரட்­டு­வது இதுவே முதல் முறை­யாகும். எனினும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் ஒன்று தொடர்பில் வெளிநாட்டு பொலிஸ் குழு­வொன்று இலங்­கைக்கு வந்து விசா­ரணை செய்யும் இரண்­டா­வது சந்­தர்ப்­ப­மா­கவே இதனை நாம் கண்­கின்றோம்.
இதற்கு முன்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய தொலைக்­காட்சி நடிகர் ஒருவர் தொடர்­பி­லான சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டை அடுத்து சாட்­சி­யங்­களை தேடி ஸ்கொட்­லன்ட்யாட் பொலிஸார் இங்கு வருகை தந்­தி­ருந்­தமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. அது தொடர்பில் விரி­வாக பார்க்க முன்னர் நாம் இப்­போது பிரான்ஸ் சம்­பவம் குறித்து நோக்­கலாம்.
அலெக்ஸ் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) ஒரு செல்­வந்த வர்த்­தகர். தற்­போது 52 வய­தாகும் இந்த பிரஞ்சுப் பிரஜை கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இலங்­கைக்கு அடிக்­கடி சுற்­றுலா விஸா பெற்று இங்கு வந்து சென்ற ஒரு சுற்­றுலா பயணி. இறு­தி­யாக இவர் இலங்­கைக்கு வந்து சென்­றமை கடந்த 2012 ஆம் ஆண்­டாகும்.
இந் நிலையில் அலெக்ஸ் தொடர்பில் பிரான்ஸ் பொலி­ஸா­ருக்கு சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டொன்று கடந்த 2012 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்­றுள்­ளது. இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த அந் நாட்டு பொலிஸார் விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மாக அலெக்ஸின் வீட்டை சுற்­றி­வ­ளைத்து தேடுதல் மேற்­கொள்­வது என தீர்­மா­னித்­தனர்.
இந் நிலையில் அலெக்ஸ் இறு­தி­யாக இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டு­விட்டு பிரான்ஸ் திரும்­பி­யி­ருந்த சிறிது நாட்­க­ளுக்குள் அவரின் வீடு திட்­ட­மிட்ட படி பிரான்ஸ் பொலி­ஸாரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது. அதா­வது பிரான்ஸ் பிரஜை ஒருவர் வழங்­கிய முறைப்­பாட்டின் ஓர் அங்­க­மாக இந்த சுற்­றி­வ­ளைப்பு இடம்­பெற்­றது என்று கூட கூறலாம்.
இதன் போது வீட்டை அதி­ர­டி­யாக சோதனை செய்த பொலிஸார் அலெக்ஸின் மடிக்­க­ணி­னி­யையும் சோத­னை­யி­டத்­த­வ­ற­வில்லை. அலெக்ஸின் மடிக்­க­ணி­னியை சோதனை செய்த போது பொலி­ஸாரின் அனு­மா­னத்தை மிஞ்­சிய, அலெக்ஸின் குற்­றச்­சாட்­டுக்­களை வலு­வூட்­டக்­கூ­டிய தட­யங்கள் பிரான்ஸ் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளன.
தெளி­வாக சொல்­வ­தென்றால் இலங்கை சிறு­வர்­களை அதுவும் ஆண் சிறு­வர்­களை பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தும் புகைப்­ப­டங்­களும் காணொ­ளி­க­ளுமே அந்த தட­யங்கள். காணொ­ளிகள் அனைத்தும் ஓரினச் சேர்க்­கை­யையை அதுவும் சிறு­வர்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக எடுக்­கப்­பட்ட தனி நீலப் படங்­க­ளாக வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தன.
திரு­மதி அனோமா திஸாநாயக்க

இது பிரான்ஸ் பொலி­ஸாரை அதிர்ச்­சியின் உச்­சத்­துக்கே கொண்டு சென்­றுள்­ளது.
உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸார் அலெக்ஸை கைது செய்­தனர். சிறுவர்­களை பாலியல் ரீதி­யாக கொடுமை படுத்­தி­யமை, துஷ்பி­ர­யோகம் செய்­தமை, நீலப்­படம் தயா­ரித்­தமை உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டுக்­களை பிரான்ஸ் பொலிஸார் அலெக்ஸ் மீது சுமத்தி நீதி­மன்றில் ஆஜர் படுத்­தினர்.
இந் நிலையில் பிரான்ஸ் நீதி­மன்றில் தொடரும் இந்த வழக்­கிற்கு மேலும் வலு சேர்க்கும் வித­மாக தட­யங்­க­ளாக கிடைத்த வீடியோ மற்றும் புகைப்­ப­டங்­களின் சாட்­சி­யங்­களை தேடியே பிரான்ஸ் பொலிஸ் குழு கடந்த மாதம் இலங்கை வந்­தது. அந் நாட்டு நீதி­மன்றின் அனு­ம­தி­யுடன் இங்­கு­வந்த அந்த பொலிஸ் குழு சுமார் இரு­வா­ரங்­க­ளுக்கு மேலாக இங்கு தங்­கி­யி­ருந்து விசா­ரணை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.
இந் நிலையில் பல விட­யங்கள் தற்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ள­துடன் பல சாட்­சி­யங்­க­ளுடன் பிரான்ஸ் பொலி­ஸாரும் நாடு திரும்­பி­யுள்­ளனர் எனலாம்.
சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யுடன் இணந்­த­தாக செயற்­படும் விஷேட பொலிஸ் குழு­வி­ன­ருடன் சேர்ந்து தக­வல்­களைப் பரி­மாற்­றிக்­கொண்டு சாட்­சி­யங்­களை தேடிய போது சுமார் 40 சிறு­வர்கள் வரையில் இந்த பிரான்ஸ் பிர­ஜையால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ளனர். என்ற உண்மை முதலில் புலப்­பட்­டது. அது பிரான்ஸ் பொலிஸார் அவர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றிய இலங்கை பொலிஸ் குழு­வி­ன­ருக்கு வழங்­கிய புகைப்­ப­டங்கள் மற்றும் காணொ­ளி­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­தது.
அத்­துடன் 2002 ஆம் ஆண்டு முதல் இந்த பிரஞ்சுப் பிரஜை இலங்­கைக்கு சுற்­றுலா வந்­தி­ருந்­தாலும் அவரின் நோக்கம் சிறு­வர்­களை ஏமாற்றி பாலியல் ரீதி­யாக இன்பம் கண்டு அது தொடர்­பான காணொ­ளி­களை தயா­ரிப்­பதே என்­பதை பொலிஸார் அறிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்­ப­ட­வில்லை.
இதனை அடுத்து மிக விரை­வா­கவும் விவே­க­மா­கவும் செயற்­பட்ட பொலிஸார் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் தலைவர் அனோமா திஸா­நா­யக்­கவின் வழி­காட்­டல்­க­ளுக்கு அமைய துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்ள சிறு­வர்கள் எந்த பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் என்­பதை தேடினர். இதன் விளை­வாக அந்த சிறு­வர்கள் ரத்­கம, ஹிக்­க­டுவை, நீர்­கொ­ழும்பு மற்றும் அனு­ரா­த­புரம் ஆகிய பகு­தி­க­ளுக்கே இந்த பிரான்ஸ்­பி­ரஜை அடிக்­கடி சென்று வந்­துள்­ள­மையை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர்.
இதனால் குறித்த பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்­களும் அதனை அண்­டிய பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­க­ளுமே பெரும்­பாலும் இந்த அலெக்ஸ் என்ற நபரால் துஷ்­பி­ர­யோகத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும் என்ற அனு­மா­னத்தில் விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.
அதன்­படி மேல­திக விசா­ர­ணை­களை பிரான்ஸ் பொலிஸ் குழு­வுடன் இணைந்து இலங்கை பொலிஸார் ரத்­கம பகு­தி­யி­லி­ருந்து ஆரம்­பித்­தனர். இதன் போது பிரான்ஸ் பிர­ஜை­யான அலெக்­ஸி­ட­மி­ருந்து தாம் விசா­ர­ணை­களில் பெற்ற தக­வல்­களை இலங்கைப் பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யி­ருந்­தனர்.
அதில் மிக முக்­கி­ய­மான தகவல் ஒன்று இருந்­தது. அது தான் அலெக்ஸ் இங்கு வந்த போது சந்­தித்த நபர்­களின் பட்­டியல்.
அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு அலெக்ஸ் இலங்கை வந்­தது முதல் பொலிஸார் சந்­தித்­த­வர்கள் தொடர்பில் பொலி­ஸாரின் கவனம் திரும்­பி­யது. இதன் போது 2002 ஆம் ஆண்டு அலெக்ஸ் சிறு­வர்­க­ளுக்கு உத­வு­பவர் போன்றே நாட்டில் சுற்­றித்­தி­ரிந்­துள்­ள­மையை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.
அத்­துடன் சிறு­வர்கள் மீது அதீத காம வெறி பிடித்­தி­ருந்த அலெக்ஸ் டொபி, சொக்­லட்­டுக்கள் உள்­ளிட்ட வெளி நாட்டு இனிப்­புக்­களை வழங்­கியே சிறு­வர்­களை தமது காம­வ­லையில் வீழ்த்­து­வதும் பொலி­ஸா­ருக்கு புல­னா­னது. அத்துடன் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு பின்னர் அவர்­களின் கைகளில் 2000 முதல் சில ஆயிரம் ரூபா நோட்­டுக்­களை திணித்து அதனை சரி­கண்­டுள்­ளதும் பொலி­ஸாரால் அறிய முடி­யு­மான கார­ணி­யாக இருந்­தது.
இந்த விட­யங்கள் அனைத்­தையும் பிரான்ஸ் பொலி­ஸாரின் உத­வி­யு­ட­னேயே இலங்கை பொலிஸ் குழு உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டது.
இதனை தொடர்ந்தே 2002 ஆம் ஆண்டு அலெகஸுக்கு சுற்­றுலா வழி­காட்­டி­யாக செயற்­பட்ட இலங்­கையர் தொடர்பில் பொலி­ஸாரின் அவ­தானம் திரும்­பி­யது. உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸார் அந்த நபரை கைது செய்­தனர். பிரான்ஸ் பொலிஸார் வழங்­கிய தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு விசா­ரணை செய்­ததில் அந்த பிரஞ்சுப் பிர­ஜைக்கு சிறுவர்­களை விநியோகம் செய்­த­தாக கூறப்­படும் நபர் தொடர்­பான தக­வல்கள் வெளி­யா­னது.
அதன் அடிப்­ப­டையில் அவ­ரையும் பொலிஸார் கைது செய்­தனர். கைது செய்­யப்­பட்ட இவ்­விரு இலங்­கை­யர்­களும் 25, 35 வய­து­களை உடை­ய­வர்கள். தற்­போது இவ்­வி­ரு­வரும் நீதி­மன்ற கட்­ட­ளையின் பிர­காரம் விளக்­க­ம­றி­யளில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் ஊடக ஒருங்­கி­ணைப்பு அதி­கா­ரி­யான எதி­ரி­வீர குண­சே­கர குறிப்­பி­டு­கின்றார்.
அவரின் தக­வல்­களின் படி அலெக்ஸால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்ட 40 இற்கும் அதி­க­மான சிறுவர்­களில் பலர் தற்­போது வளர்ந்து பெரி­ய­வர்கள் ஆகி­யுள்­ளனர். இந் நிலையில் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளான 10 சிறு­வர்­களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.
பொலி­ஸாரின் மேல­திக விசா­ர­ணை­களில் சிறு­வர்­களை விநியோகம் செய்து வந்த இவ்­வி­ரு­வ­ருக்கும் அலெக்ஸ் பல்­வேறு உத­வி­களை செய்­துள்­ளமை கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு­வ­ருக்கு போக்­கு­வ­ரத்தின் நிமித்தம் வாகனம் ஒன்றை கொள்­வ­னவு செய்­யவும் இன்­னொ­ரு­வ­ருக்கு தொலை தொடர்பு நிலையம் ஒன்­றை, அமைக்­கவும் இந்த பிரான்ஸ் நாட்­டவர் பண உத­வி­களை செய்­துள்­ள­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.
இதனை விட சுற்­றுலா வழி­காட்­டி­யாக செயற்­பட்ட நபர்ப் 35 வயதை அடைந்­துள்ள போதும் இது­வரை திரு­ம­ண­மா­கா­தவர். பெரும் பாலும் இவ­ரு­டைய வீட்­டி­லேயே அலெக்ஸின் காமக் கூத்­துக்கள் அரங்­கே­றி­யுள்­ளன.
இந் நிலை­யி­லேயே பிரான்ஸ் பொலிஸ் குழு சிறு­வர்கள் அனை­வ­ரையும் கண்­டு­பி­டிக்க முயன்ற போதும் அதில் பலரின் வாக்கு மூலங்­க­ளுடன் அந் நாட்டின் நீதி­மன்ரில் அலெக்­ஸுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை சமர்­பிக்க விரைந்துள்ளனர். இத­னூ­டாக அலெக்­ஸுக்கு மிக உயர்ந்த பட்ச தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க பிரான்ஸ் பொலிஸார் எதிர்­பார்க்­கின்­றனர்.
இத­னி­டையே இவ்­வாறு வெளி நாட்டு பொலிஸ் குழு­வொன்று இலங்கை வரு­வது இரண்­டா­வது தடவை என மேலே குறிப்­பிட்­டி­ருந்தோம். ஆம் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய தொலைக்­காட்சி நடி­க­ரான கெலீ மத்­தியூ என்­பவர் மீது சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தமை ஞாபகம் இருக்கும்.
சிறு­வ­ர்களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்துக்கு உள்­ளாக்­கினார் என்ற சந்­தே­கத்தின் பேரில் பிர­பல பொப் இசை பாடகர் ஜொனதன் கிங் என்­ப­வரை விசா­ரணை செய்­த­போதே கெலீ மெத்­தியூ தொடர்­பான விப­ரங்கள் அம்­ப­ல­மா­ன­தாக கூறப்­பட்­டது. இந் நிலையில் விசா­ர­ணை­களை தொடர்ந்த அந் நாட்டு பொலிஸார் கெலீ மெத்­தி­யூ­வினால் சிறுவர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­ன­மை­யா­னது இலங்­கை­யி­லேயே இடம்­பெற்றுள்­ள­தாக குறிப்­பிட்டு அப்­போது இங்கு வந்­தி­ருந்­தனர். அப்­போது இலங்கை வந்த ஸ்கொடலண்யார்ட் பொலி­ஸா­ருக்கு அது தொடர்பில் பல விட­யங்கள் மற்றும் சாட்­சி­யங்கள் கிடைந்­தி­ருந்­த­தா­கவும் அறிய முடி­கின்­றது.
குறித்த குற்­றச்­சாட்­டுகளின் கீழ் முதலில் கெலீ மெத்­தியூ கைது செய்­யப்­பட்­ட­போதும் சாட்­சிகள் இன்­மையால் விடு­த­லை­யானார்.இதனை தொடர்ந்தே 2003 ஜன­வரி மாதம் ஸ்கொட்லன்யார்ட் பொலிஸார் இலங்கை வந்து விசாரணை­களை முன்­னெ­டுத்துள்ளானர் .
இதனை அடுத்து நீர் கொழும்பில் உள்ள மெத்­தி­யூ­விற்கு சொந்­த­மா­னது எனக் கூறப்­படும் சொகுசு வீடொன்றை சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து சுற்­றி­வ­ளைத்த ஸ்கொட்­லன்ட்யார்ட் பொலிஸார் அந்த வீட்டில் சல்­லடை போட்டு தேடி சாட்­சி­யங்­களை திரட்­டி­யி­ருந்­தனர்.
அப்­போது சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் தலைவ­ராக பேரா­சி­ரியர் மஹேன்ந்­திர சில்வா கட­மை­யாற்­றி­யி­ருந்தார். இந் நிலையில் பல சாட்­சி­யங்­க­ளுடன் இலங்­கை­யி­லி­ருந்து திரும்­பிய ஸ்கொட்­லான்ட்யார்ட் பொலிஸார் கெலீ மெத்­தி­யூ­விற்கு சிறு­வர்­களை விநியோ­கித்த நபர்­க­ளையும் கைது செய்ய உத­வி­யதன் பின்­ன­ரேயே திரும்­பி­யி­ருந்­தனர்.
இது போன்ற சிறுவர் பாலியல் விவ­கா­ரங்­களில் நாட்டம் கொண்ட ஒரு­வ­கை­யான மனப்­பாங்கு கொண்ட சுற்­றுலாப் பயணிகள் இன்னும் இலங்­கைக்கு வந்து செல்­கின்­றனர். பல நாடுகள் ஓரினச் சேர்க்­கைக்கும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள நிலையில் அவ்­வா­றான நாட்­ட­முள்­ள­வர்கள் ஓரினச் சேர்க்கை என்ற போர்­வையில் சிறுவர்­களை துஷ்­பி­ர­யோகம் செய்ய முனை­கின்­றனர்.
இந் நிலையில் இவ்­வா­றான மறை­முக காமு­கர்­களின் பிடி­யி­லி­ருந்து எமது நாட்டின் சிறு­வர்­களை மீட்­க­வேண்­டிய பாரிய கடப்­பாடு சுற்­றுலா துறை அபி­வி­ருத்­தி­ய­டைந்­துள்ள நிலையில் எமது சமூ­கத்­த­வர்­க­ளிடம் உள்­ளது. பிடி­பட்­ட­வர்கள் ஒரே ஒரு அலெக்ஸ் ஆகவும் ஒரே ஒரு மத்­தி­யூ­வா­கவும் இருக்­கலாம். பிடி­ப­டாமல் பல ஆசா­மிகள் இவ்­வாறு நட­மா­டிக்­கொண்டும் இருக்­கலாம். அவர்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­ப­டு­வது மிக அவ­சி­ய­மாகும்.
இலங்­கையை பொறுத்­த­வரை ஒரு நாளைக்கு 5 முதல் 6 சிறு­வர்கள் வரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­விக்­கின்றார். இதன்­படி வரு­டத்­துக்கு 2000 சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­வ­தாக குறிப்­பிடும் அவர் அவர்­களில் 90 வீத­மானோர் 16 வய­துக்கு கீழ் பட்டோர் என குறிப்­பி­டு­கின்றார்.
அதுவும் அவர்­களில் பெரும்­பான்­மை­யானோர் உற­வி­னர்­க­ளா­லேயே துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் பெரும்­பாலும் அவற்­றுக்கு சிறு­வர்­களின் அப்­பா­வித்­தனம் சம்­ம­த­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக்வும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
பொலிஸாரின் தகவல்களின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு 1463 சிறுவர்கள் இலங்கையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தொகையானது 2012 ஆகும் போது 1759 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அது 2000 வரை அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் பாலியல் ரீதியாக சிறுவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களின் பட்டியலே.
பொதுவாக சிறுவர்களுக்கு எதிரான அனைத்து துஷ்பிரயோகங்களையும் எடுத்து நோக்கும் போது இந்த தொகையானது 2012 ஆம் ஆண்டில் 5000 யும் தாண்டுவதாக புள்ளி விபரங்கள் விபரிக்கின்றன. இந் நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான திட்டம் ஒன்று இலங்கைக்கு அவசியமாகின்றது. நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து பொலிஸார் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் நேரடி கட்டுப்பாட்டில் சுமார் 41 சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான விஷேட பொலிஸ் பிரிவின் காரியாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அஜித் ரோஹன
சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்­தினை முற்­றாக கட்­டுப்­ப­டுத்த சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையில் உள்ள பொலிஸ் பிரிவை போன்றே ஏனைய பிராந்­திய பொலிஸ் நிலை­யங்­களில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரி­வூ­டாக விஷேட செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றிப்­பிடும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன குறிப்­பாக பாட­சாலை மாண­வர்கள் கய­வர்­களின் பிடியில் சிக்கிக் கொள்­வதை தவிர்க்கும் முக­மாக பாட­சாலை மட்­டத்தில் அறி­வூட்டும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்பிடுகின்றார்.
எனினும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்தபாடில்லை. உறவுகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றங்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் சமூக மட்டத்தில் இதற்கு தீர்வு தேடினால் மட்டுமே இவ்வாறான துஷ்பிரயோகங்களை முற்றாக ஒழிக்கலாம் என்பது மட்டும் உறுதி.
– எம்.எப்.எம்.ப­ஸீர்–
0 comments

சிறுவர் துஷ்பிரயோகம்: பெளத்த தேரருக்கு 70 வருட சிறைத் தண்டனை


சிறுவர் பாலியர் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரையொன்றைச் சேர்ந்த பௌத்த துறவியொருவருக்கு 70 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி தீர்ப்பளித்துள்ளார் சிலாபம் உயர் நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன.

நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கில் பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 52 வருட கடூழிய சிறைத்தண்டணையுடன் 18 வருட மேலதிக தண்டணையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தலா 402,000 நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டு ஜனவரி முதல் – பெப்ரவரி வரையிலான காலப்பகுதியிலேயே இத்துறவி இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments

14 இலச்சம் ரூபா கொள்ளையிட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மாட்டியது எப்படி??


அது கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை. வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த நேர­மது. வெள்­ள­வத்தை லில்லி அவ­னி­யூவில் நிர்­மாண நிலையம் ஒன்றை நடத்தி வரும் வர்த்­தகர் ஒருவர் தயக்­கத்­துடன் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வரு­கின்றார்.
முறைப்­பா­டொன்றை அளிக்க வேண்டும் என தெரி­வித்து வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு நேர­டி­யாக செல்­கின்றார்.
அங்கு சென்ற அந்த வர்த்­தகர் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்­பதிகாரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­வத்­த­விடம் முறைப்­பாட்­டினை தெரி­விக்கின்றார்.
‘ சேர்…வங்­கிக்கு வைப்­பி­லிட எடுத்துச் செல்­லப்­பட்ட 13 இலட்­சத்து 65 ஆயிரம் ரூபா பணம் அடை­யாளம் தெரி­யா­தோரால் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது’ என முறைப்­பாட்டை ஆரம்­பிக்க பொலிஸார் குறுக்குக் கேள்­வி­களை தொடுத்து முறைப்­பாட்டை நெறிப்­ப­டுத்தி பதிவு செய்­து­கொண்­டுள்­ளனர்.
அதன் படி இந்த கொள்ளை முச்­சக்­கர வண்­டியில் வந்த சீ.ஐ.டி.என தங்­களை அறி­முகம் செய்­து­கொண்ட இரு­வரால், மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தையும் அது கடந்த 21 ஆம் திகதி சனிக்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­மையும் பொலிஸ் முறைப்­பாட்டுப் புத்­த­கத்தில் பதி­வா­னது.
முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்ட அந்த நேரத்தில் கொழும்பு தெற்­குக்குப் பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்சா வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் மேற்­பார்வை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­துள்ளார்.
பொது­வாக முறைப்­பா­டொன்று பதி­வா­னதும் அது தொடர்பில் பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் கவ­னத்­துக்கு கொண்டுவரப்­பட­வேண்டும் என்ற ஒரு நடை­முறை பொலிஸ் திணைக்­க­ளத்தில் பின்­பற்­றப்­ப­டு­கின்­றது.
அதன் படி இந்த விட­ய­மா­னது உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்சா, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­தி­லேயே இருந்­ததால் உட­ன­டி­யாக அவரின் கவ­னத்­துக்கு சென்­றது.
இதனை அடுத்து வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான நாக­வத்­தவை அழைத்த உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்சா, சம்­பவம் தொடர்பில் நட­வ­டிக்­கை­யினை உடன் ஆரம்­பிக்­கு­மாறு கூறி ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.
இதனை அடுத்து குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி நாக­வத்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு சம்­பவம் இடம்­பெற்­ற­தாக முறைப்­பாட்டில் தெரிவிக்கப்­பட்ட  வெள்­ள­வத்தை, லில்லி அவ­னியூ பிர­தே­சத்­துக்கு சென்­றது. அங்கு சென்று ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது.
இந் நிலையில் வர்த்­தகர் தனது முறைப்­பாட்டில் தனது  உத­வி­யா­ளரும்  உற­வி­ன­ரு­மான நபர் முச்­சக்­கர வண்­டி­யி­லேயே கடத்­தப்­பட்­ட­தா­கவும் அவர்களின் கைகளில் துப்­பாக்கி இருந்­த­தா­கவும் கடத்­தப்­பட்­டதும்   கைக­ளுக்கு விலங்­கி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்த நிலையில்  சீ.ஐ.டி.என தங்களை  காட்டிக்­கொண்­ட­தா­கவும்  தெரி­வித்­ததால் அந்த விட­யங்­களை மைய­மாக வைத்தே ஸ்தல விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.
இந்தவேளையில் பொலி­ஸா­ருக்கு அப்­போது முக்­கி­ய­மான தகவல் ஒன்று கிடைத்­துள்­ளது. லில்லீ அவ­னியூ பிர­தே­சத்தில் இருந்த ஒரு முச்­சக்­கர வண்டிச் சாரதி அந்த துரும்­பினை பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யி­ருந்தார்.
‘ சேர்…தனுக ரால­ஹா­மியும் சஞ்­சீவ ரால­ஹா­மியும் நீங்கள் குறிப்­பிடும் தினம் நண்­பகல் 12.30 அளவில் கஞ்சா சுற்­றி­வ­ளைப்­பொன்றை மேற்­கொள்­ள­வென எனது முச்­சக்­கர வண்­டியை எடுத்துச் சென்­றனர். மாலையில் கொண்­டு­வந்து தந்­தனர்.  தரும் போது எனக்கு 5000 ரூபா பணமும் தந்­தனர்.’ என அந்த முச்­சக்­கர வண்டி சாரதி குறிப்­பிட்டார்.
இந்த தகவல் கிடைக்கும் வரை குற்­ற­வாளி தொடர்பில் அனு­மானம் ஒன்­றுக்கு வந்­தி­ராத வெள்­ள­வத்தை பொலிஸார் அந்த தக­வலை அடுத்து சந்­தேக நபர்கள் அநேக­மாக பொலி­ஸா­ராக தான் இருக்க வேண்டும் என்ற அனு­மா­னத்­துக்கு வந்­தனர்.
வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­துக்கு உட்­பட்டு சேவை மேற்­கொண்­டி­ருந்த பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளான தனிக (84350), சஞ்­சீவ நிலந்த (3228) ஆகியோர் தொடர்பில் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி நாக­வத்த விசா­ரிக்­க­லானார்.
எனினும் அப்­போது அவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் விடு­மு­றையில் இருந்­த­மையால் பொலி­ஸாரின் சந்­தேகம் மேலும் அதி­க­ரித்­தது. கடத்தல் மற்றும் கொள்ளை இடம்­பெற்ற நேரம், முறைப்­பாட்­டாளர்  குறிப்­பிட்ட கடத்தல் காரரின் அங்க அடை­யாளம், முச்­சக்­க­ர­வண்­டியின் நிறம், முச்­சக்­க­ர­வண்டி சாரதியின் உறு­திப்­ப­டுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை கருத்தில் கொண்ட பொலிஸார் சந்­தேக நபர்கள் இந்த கான்ஸ்­ட­பிள்­க­ளா­கவே இருக்க வேண்டும் என்ற முடி­வுக்கு வந்­தனர்.
இது தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டீ சொய்­சா­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கைது செய்வதற்­கான ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.
இந் நிலையில் தம்­முடன் இது­வரை ஒன்­றாக கட­மை­யாற்­றிய குறித்த இரு மோசடி கான்ஸ்­ட­பிள்­க­ளையும் வெள்­ள­வத்தை பொலி­ஸாரே கைது செய்­தனர்.
இதனை அடுத்து அவ்­வி­ரு­வ­ரையும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த சில்வா பணி இடை நிறுத்தம் செய்து விசா­ர­ணை­களை மேறகொண்டார். .இதன் போது தான் நடந்­தது என்ன என்­பது வெளிச்­சத்­துக்கு வந்­தது.
யோகா, தெஹி­வளை, வெள்­ள­வத்தை பகு­தியை சேர்ந்த ஒரு வர்த்­தகர். இவ­ருக்கும் கான்ஸ்­ட­பிள்­க­ளான தனுக,சஞ்­சீவ ஆகி­யோ­ருக்கு இடையில் நல்ல பிணைப்பு இருந்து வந்­துள்­ளது.
‘ நீங்கள் வெள்­ள­வத்தை தானே… அந்த பகு­தியில் உண்­டியல் முறை மூலம் சட்ட விரோ­த­மாக பண பறி­மாற்று வேலையில் ஈடு­படும் ஒருவர் இருக்கின்றார். அவர் பணத்தை கொண்டு செல்லும் போது நான் உங்­க­ளுக்கு கூறு­கின்றேன்.
நீங்கள் அதனை கைப்­பற்­றுங்கள். நாங்கள் அதனை பிரித்­தெ­டுக்­கலாம்’ என யோகா அவ்­விரு கான்ஸ்­ட­பிள்­க­ளுக்கும் ஆலோ­ச­னை­யினை முன்­வைக்க அந்த திட்­டமே செய­லுரு பெற்­றுள்­ளது என்­பதை கான்ஸ்­ட­பிள்­களை விசா­ரணை செய்த பொலிஸார் தெரிந்­து­கொண்­டனர்.
இதனை அடுத்து உடன் செயற்­பட்ட பொலிஸார்   யோகாவையும் கைது செய்து மூவ­ரையும் தடுத்து வைத்து விசா­ரணை செய்த போது சம்­பவம் தொடர்பி­லான அனைத்து விட­யங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டனர்.
கடந்த 21 ஆம் திகதி குறித்த நிர்­மாண கடையின் உரி­மை­யாளர், தனது உற­வி­னரும் உத­வி­யா­ள­ரு­மான  யாழ்ப்­பா­ணத்தை சேர்ந்த அருள் ராஜிடன் 13 இலட்­சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்­தி­ருந்தார். பணத்தை கொடுத்­து­விட்டு அவர் பிறி­தொரு வேலை தொடர்பில் திரு­கோ­ண­ம­லைக்கு சென்றுள்ளார்.
இந் நிலை­யி­லேயே அன்­றைய தினம் நண்­பகல் 12.30 மணி­ய­ளவில் ஒரு பையில் பணத்தை போட்­டுக்­கொண்டு தனியார் வங்கி ஒன்றை நோக்கி அருள் ராஜ் சென்­று­கொண்­டி­ருந்த போது முச்­சக்­கர வண்­டியில் வந்த இருவர் அவரை மறித்து தாம் சீ.ஐ.டி.யினர் எனக் கூறி விசா­ர­ணைக்­காக வரு­மாறு பல­வந்­த­மாக ஆட்­டோவில் ஏற்­றி­யுள்­ளனர்.
விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் தகவல் பிர­காரம் இந்த கடத்­தலின் போது யோகாவும் லில்லி அவ­னி­யூ­விற்கு வந்­துள்ளார். அவர் அடை­யாளம் காட்­டிய நப­ரையே பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் இரு­வரும் கடத்­தி­யுள்­ளனர்.
இந் நிலையில் கடத்­தப்­பட்ட அருள்ராஜை, ஆட்­டோ­வுக்குள் ஏற்­றி­யதும் ஒரு பொலிஸ் கான்ஸ்­டபிள் அவரின் கைக­ளுக்கு விலங்­கிட்­டுள்ளார். அத்­துடன் அவரை அப்­ப­டியே மரீன் டிரைவ் பகு­திக்கு அழைத்துச் சென்று ஆட்­டோவில் வைத்தே விசா­ரணை செய்­துள்­ளனர்.
‘ நீங்கள் உண்­டியல் மூலம் பண­மாற்றும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை ஒன்றில் ஈடு­ப­டு­கின்­றீர்கள் தானே’ என அதட்டிக் கேட்ட இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளி­டமும் இப்­ப­ணத்­தொகை தனது முத­லா­ளி­யுடை­யது என்­பதை அப்­பா­வித்­த­ன­மாக அருள் ராஜ் கூறி­யுள்ளார்.
இதனை அடுத்து திரு­கோ­ண­ம­லையில் இருந்த முத­லா­ளிக்கு அருள் ராஜ் மூலம் கான்ஸ்­ட­பிள்கள் தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்த வைத்­துள்­ளனர்.
அழைப்பு இணைக்­கப்­பட்­டதும் தொலை­பே­சியில் மறு முனையில் பேசு­ப­வரின் குரல் எல்­லோ­ருக்கும் கேட்கும் வண்ணம் ‘லவூட்ச் பீக்­க­ரையும் ‘ செயற்­ப­டுத்­தியே உரை­யா­டலை தொட­ரு­மாறு பணித்­துள்­ளனர்.
இந் நிலையில் அருள் ராஜ் தமிழில் நடந்­த­வற்றை கூற முத­லாளியோ முச்­சக்­கர வண்­டியின் இலக்­கத்தை பார்த்துக் கொள்­ளு­மாறு அருள் ராஜிடம் கூறியுள்ளார். இந்த விடயம் பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளுக்கு புரிந்­துள்­ளது.
உட­ன­டி­யாக கான்ஸ்­ட­பிள்கள் தாங்கள் சீ.ஐ.டி.எனவும் உண்­டியல் முறை மூலம் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அருள் ராஜை கைது செய்­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ள­துடன் முத­லா­ளியையும் உடன் கொழும்­புக்கு வந்து சீ.ஐ.டி.தலைமை­ய­கத்­துக்கு வரு­மாறு கூறவே முத­லா­ளியும் சற்று பயந்­துள்ளார்.
ஆரம்­பத்தில் அது உண்­டியல் பணம் அல்­ல­வென மறுத்­துள்ள முத­லாளி பின்னர் சீ.ஐ.டி.யினர் என தம்மை அறி­மு­கப்­ப­டுத்­திய இரு­வரும் அது தொடர்பில் நன்கு அறிந்­தி­ருப்­பதைக் கண்டு ‘ சேர்…அதிலே 10 இலட்சம் ரூபா இருக்கு…. நீங்கள் 5 இலட்சம் எடுத்­துக்­கொண்டு எனக்கு 5 இலட்­சத்தை விட்­டு­விட்டு எனது உத­வி­யா­ளரை அனுப்­பி­விடுங்கள்’ என பேரம் பேசி­யுள்ளர்.இதனை அடுத்து தொலை­பேசி அழைப்­பா­னது துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.
இதன் போது முச்­சக்­க­ர­வண்­டியின் பின் ஆச­னத்தில் இருந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் கைத்­துப்­பாக்கி ஒன்­றையும் காட்டி அருள்ராஜை மிரட்டி பணப் பையை தனது கைக­ளுக்கு எடுத்­துள்­ள­துடன் அதில் உள்ள அனைத்து பணத்­தொ­கை­யி­னையும் எடுத்­துக்­கொண்­டுள்ளார்.
இதனை அடுத்து புறக்­கோட்­டையை நோக்கி முச்­சக்­க­ர­வண்­டியை செலுத்­தி­யுள்ள இவ்­விரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­களும் பம்­ப­லப்­பிட்­டி பிர­தே­சத்தில் உள்ள எரி­பொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரி­பொருள் நிரப்­பி­யுள்­ளனர்.
இதன் போது இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் அந்த முச்­சக்­கர வண்­டியை எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­துக்கு கொண்டு செல்­வது, அதில் அருள் ராஜ் உள்ளே இருக்க எரி­பொருள் நிரப்­ப­ப்ப­டு­வது என அனைத்துக் காட்­சி­களும் எரி­பொருள் நிரப்பு நிலைய சீ.சீ.ரீ.வீ.கம­ராவில் துல்­லி­ய­மாக பதி­வா­கி­யுள்­ளது.
எவ்­வா­றா­யினும் புறக்­கோட்டை பஸ் நிலை­யத்­துக்கு அருள் ராஜை அழைத்து வந்­துள்ள இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் அவரை அங்கு இறக்­கி­விட்டு ‘ இனி மேல் வெள்­ள­வத்தை பக்கம் உன்னை காணவே கூடாது’ என மிரட்டி யாழ் .போகு­மாறு 2000 ரூபா பணத்தை மட்டும் கொடுத்­து­விட்டு மீண்டும் வெள்­ள­வத்தை திரும்­பி­யுள்­ளனர்.
வெள்ளவத்­தைக்கு வந்த இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் முச்­சக்­கர வண்டி சொந்­தக்­கா­ர­ரிடம் 5000 ரூபாவை கொடுத்து வண்­டி­யையும் கைய­ளித்­துள்­ளனர். பொலி­ஸாரின் தக­வலின் படி இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களில் ஒருவர் ரம்­புக்­க­ணையை சேர்ந்­தவர் எனவும் மற்றை­யவர் காலி, அஹங்­க­மவை சேர்ந்­தவர் எனவும் அறிய முடிந்­தது.
அத்­துடன் ரம்­புக்­க­னையை சேர்ந்த கான்ஸ்­டபிள் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் நீண்­ட­கா­ல­மாக பணி புரி­பவர் எனவும் அறிய முடிந்­தது.
இந் நிலையில் கொள்­ளையின் பின்னர் ரம்­புக்­க­ணையை சேர்ந்த கான்ஸ்­டபிள் 6 நாள் விடு­மு­றையில் சென்­றுள்­ள­துடன் மற்­றை­யவர் தனது அம்­மா­வுக்கு சுக­மில்லை என கூறி விடு­முறை எடுத்துச் சென்­றுள்ளார்.
இவ்­வா­றா­ன­தொரு நிலையில் யாழ். போகு­மாறு பணிக்­கப்­பட்ட அருள் ராஜ் அங்கு செல்­ல­வில்லை. மாறாக தனது மாமா­வான முத­லா­ளிக்கு மீண்டும் அழைப்பை ஏற்­ப­டுத்தி நடந்­த­வற்றை குறிப்­பிட்­டுள்ளார். இந் நிலையில் தான் திரு­கோண மலை­யி­லி­ருந்து திரும்­பிய முத­லாளி வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.
பணத்தை கொள்­ளை­யிட்­டுள்ள இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­களும் பணப்­பையை குப்பை கூலம் ஒன்றில் எறிந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.
பணப்­பையை எறிந்­து­விட்டு வெள்­ள­வத்­தையில் வர்த்­தகர் யோகா மற்றும் கான்ஸ்­ட­பிள்கள் இரு­வரும் ஒன்று கூடி பணத்தை பிரித்­தெ­டுத்­துள்­ளனர். யோகா­வுக்கு 5 இலட்சம் ரூபாவை கொடுத்­துள்ள கான்ஸ்­ட­பிள்கள் ஏனை­ய­வற்றை தாம் பிரித்து எடுத்­துக்­கொண்­டுள்­ளனர்.
இந் நிலை­யி­லேயே கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்­தொ­கையில் பெரும்­பா­லான பகுதி மீட்­கப்­பட்­டுள்­ளன. அதா­வது கான்ஸ்­ட­பிள்­களின் உத்­தி­யோக பூர்வ விடு­தியில் கான்ஸ்­டபிள் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான அலுமாரியிலி ருந்தும் 3 இலட்­சத்து 95 ஆயிரம் ரூபாவும் மற்­றைய கான்ஸ்­ட­பிளின் அலுமாரியிலிருந்தும் 3 இலட்சம் ரூபாவும் மீட்­கப்­பட்­டுள்­ளன.
அத்­துடன் வர்த்­த­க­ரான யோகா­வி­ட­மி­ருந்து 5 இலட்சம் ரூபா மீட்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட முச்­சக்­கர வண்­டியும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­துடன் அவ­ருக்கு வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் 5 ஆயிரம் ரூபாவும் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது.
கைது செய்­யப்­பட்­டுள்ள வர்த்­தகர் யோகா கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்­துக்கு சொந்­தக்­கா­ர­ரான முத­லா­ளியின் முன்­னைய நண்­பர்­களில் ஒருவர் என தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் பணத்தை பறி­கொ­டுத்த வர்த்­த­கரும் உண்­டியல் முறை நிதி பரிமாற்றல் நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­டை­யவர் என்­பது விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் அது தொடர்­பிலும் வேறு ஒரு விசா­ர­ணையை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ளனர்.
முறை­பாடு கிடைக்கப் பெற்று 24 மணி நேரத்­துக்குள் தமது பொலிஸ் நிலை­யத்­தி­லேயே கட­மை­யாற்றி மோசடி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட இவ்­விரு கான்ஸ்­ட­பிள்­க­ளையும் வெள்­ள­வத்தை பொலி­ஸாரே கைது செய்­த­மை­யா­னது விஷே­ட­மா­ன­தாகும்.
இந்த சம்­ப­வத்தால் எந்­த­வொரு வர்த்­த­கரும் அச்­சத்­துக்கு உள்­ளாக வேண்­டி­ய­தில்லை என குறிப்­பிட்ட பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர், கப்பம் உள்­ளிட்ட எந்­த­வொரு மோச­டி­யு­ட­னும் தொடர்­பு­டைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் எவ­ரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் தரு­மாறும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்டார்.
அத்­துடன் இவ்­விரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளி­னதும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்புக் கூற­வேண்­டிய அவர்­களை வழி நடத்தும் அல்­லது நெறிப்­ப­டுத்தும், அவர்­களை கண்­கா­ணிக்க வேண்­டிய பொறுப்­பு­வாய்ந்த உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ரா­கவும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.
கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் மூவரும் நேற்று முன்தினம் புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் அவர்கள் எதிர்­வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் குழு சந்தேக நபர்களான கான்ஸ்ட பிள்கள் இதற்கு முன்னர்
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என தேடி வருகின்றது. இதற்காக சந்தேக நபர்களின் தொலைபேசி விபரப்பட்டியல், வங்கிக் கணக்குகளை சோதனையிட நடவடிக்கைகள்முன்னெடுக் கப் பட்டுள்ளன.
சிவில் உடையிலேயே இவ்விரு கான்ஸ்டபிள்களும்இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதுடன்அதற்குபயன்படுத்தப்பட்ட கைத் துப்பாக்கியும் கை விலங்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து களவாடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்த இந்த நடவடிக்கையானது, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்க, கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு தெற்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகல ஆகியோரின் கண்காணிப்பில் ….
கொழும்பு தெற்குக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்சாவின் விஷேட ஆலோசனைக்கு அமைய வெள்ள வத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெட்ரிக் எப்.யூ.வுட்லரின் வழிநடத்தலின் கீழ் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகவத்த, பொலிஸ் பரிசோதகர் கும்புரேகம உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
–எம்.எப்.எம்.பஸீர்–
0 comments

எரிந்து நாசமான நோலிமிட் தொடர்பில் புதிய வீடியோ அம்பலம் (வீடியோ இணைப்பு)


கடந்த வாரம் பாணந்துறை நோலிமிட் எரிந்து நாஷமானது தொடர்பில் ஒரு புதிய காணொளி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது.

பல கோடி பெறுமதியான பாணந்துறை நோலிமிட் கடந்தவாரம் நல்லிரவு எரிந்து முற்றாக நாஷமானது. இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாடையகம் எரிந்து போனதற்கு பிரதான காரணம் மின்னொழுக்கு எனக் கூறப்பட்டு வருகின்றது. எனினும் நாசகார சக்திகளின் கைவரிசையாக இருக்கலாம் என இவ் ஆடையகத்திற்கு பொறுப்பானவர்கள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த வாரம் நோலிமிட் எரிந்த சில மணி நேரங்களில் இக் காணொளி எடுக்கப்பட்டுள்ளது. இக்காணொளியானது நோலிமிட் கட்டிடத்திற்கான பிரதான மின் சாதன அறையை படமாக்கியுள்ளது.

இவ் அறையில் பிரதான மின்னழுத்தி மின்னொழுக்கினால் எரியாமல் இருப்பது இக்காணொளியில் தென்படுகின்றது .



0 comments

வர்த்தக நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டது - மாவனல்லையில் சம்பவம் (VIDEO)


மாவனல்லை, ஹசன் கட்டிடத்தில் அமைந்துள்ள புஹாரி ஸ்டோர்ஸ் இல் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் திருடர்களில் ஒருவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடரபில் மேலும் தெரிய வருவதாவது..

இன்று (இரவு) 1 மணியளவில் மாவனல்லை, ஹசன் கட்டிடத்தில் அமைந்துள்ள புஹாரி ஸ்டோர்ஸ் இன் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் பொதி செய்து எடுத்துச்செல்ல தயாராகி உள்ளனர்.

கடையில் பொருத்தியுள்ள CCTV யை தனது வீட்டில் இருந்தும் தொலைபேசியில் இருந்தும் பார்க்க கூடிய வகையில் கடையின் உரிமையாளர் அமைத்து இருந்ததால், கடையில் நடமாட்டம் ஏற்பட்டதுடன் இவரின் மொபைல் தொலைபேசியில் எச்சரிக்கையுடன் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

அதன்போது கடையில் சிலர் முகத்தை மூடியபடி உலாவிக்கொண்டிருப்பதை கண்டுள்ளார். உடனடியாக போலீசாருக்கும், தெரிந்தவர்களுக்கும் அழைப்பு விடுத்து விட்டு கடைக்கு சென்றுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் போலீசார் கடையின் முன்பக்கம் குவியத் தொடங்கியதும் திருடர்கள் பின் பக்கத்தால் தப்பி ஓடியுள்ளனர். இதன்போது ஒருவர் அங்கிருந்த ஓடையினுள் ஓடி பாலத்தின் அடியில் ஒளிந்துள்ளர். அவரை போலீசார் போலிஸ் நாயுடன் உதவியுடன் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிடிபட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வருகிறது.



0 comments

பிச்சை எடுப்பது இனி ‘கிரிமினல் குற்றம்!’ – நோர்வே அரசு அறிவிப்பு….!!

 

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான நார்வே, பிச்சை எடுப்பதை ஒழிக்க முடிவு செய்துள்ளது. இனி தங்கள் நாட்டில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ளது. நார்வே நகரத் தெருக்களில் ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கையில் ஒரு சிறு டப்பாவை வைத்தபடி பிச்சை எடுப்பதைப் பார்க்கலாம்.
குறிப்பாக தலைநகர் ஆஸ்லோவில். கடந்த சில ஆண்டுகளில் நார்வேயில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் ஆரம்பித்துள்ளதாம். பிச்சைக்காரர்கள் 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நார்வேயில் ஆயிரத்துக்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் இருப்பதாக நோவா ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் இவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே. கருத்துக் கணிப்பு இந்த பிச்சைக்காரர்களை என்ன செய்யலாம் என்று நாடு தழுவிய அளவில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் 60 சதவீதத்தின் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் மாதிரி என கருத்துத் தெரிவித்துள்ளனர். 3 மாத சிறை இனி நார்வேயில் பிச்சை எடுப்பவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனை வழங்கவும் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் அந்நாட்டில் உள்ள நகராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 2015-லிருந்து இது அமலுக்கு வரக் கூடும். எதிர்ப்பு ஆனால் இந்த சட்டத்துக்கு நார்வே நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை இந்தத் தடை குலைத்துவிடும். கருணையற்ற நாடு என்ற பெயர்தான் மிஞ்சும் என அக்கட்சிகள் கூறியுள்ளன. உதவக் கூடாது என்ற எண்ணமே… கிறிஸ்டியன் டெமாக்ரேட்ஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெல் இங்கல்ப் ரோப்ஸ்டட் கூறுகையில், ‘பிச்சையெடுப்பவர்கள் அத்தனை பேரும் கிரிமினல்கள் என்பதை ஏற்க முடியாது.
இயலாதவர்கள்தான் பிச்சையெடுக்கிறார்கள். பிறருக்கு உதவ மனமில்லாதவர்களே, அவர்களை ஒழிக்கக் கேட்கிறார்கள். இந்த தடைச் சட்டம் தவறானது,’ என்றார். இதெல்லாம் ஒரு பிரச்சினையா? நார்வே வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ப்ரோட் சுல்லன்ட் கூறுகையில்,
‘பிச்சைக்காரர்கள் ஒரு பிரச்சினையே அல்ல. ஐரோப்பாவின் எந்த நகரத்தில் பிச்சைக்காரர்கள் இல்லை…! எங்கும் இருக்கிறார்கள். எந்த நாடும் இப்படி தடை போட நினைத்ததில்லை. ஒரு மனிதன், யாரையும் தொந்தரவு செய்யாமல் தனக்கு உதவி கோரி கையேந்த உரிமை இருக்கிறது. இந்தத் தடை தேவையற்றது,’ என்று கூறியுள்ளார்.
 
0 comments

மருதானை டெக்னிக்கல் சந்தியும், வெளிநாடுகளில் இருந்து அவ்விடத்தில் வந்து இறங்குபவர்களும்.


மருதானை டெக்னிக்கல் சந்தியும்,

வெளிநாடுகளில் இருந்து அவ்விடத்தில் வந்து இறங்குபவர்களும்.

(மக்கள் நண்பன் with துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சவுதிகட்டார்டுபாய் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும்நம்மவர்கள் பெரும்பாலும் மருதானை டெக்னிகல் சந்தியில் தரித்து நின்று பஸ்களின் மூலம் தத்தம்ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அவ்வாறு வருபவர்களிடன் நிறைய பணம் இருக்கும்அவர்கள் கைநிறைய சம்பாதித்துக் கொண்டுவருகின்றார்கள் என்று அங்கிருக்கின்றவர்கள் கணக்குப் போட்டு விடுகின்றனர்அதனால் ஆட்டோகாரவர்கள்அதிகமாக நம்மவர்களிடம் பணம் பறிக்கின்றனர்.
லொஜ்களில் நாம் கொண்டு வரும் பெட்டிகளை வைப்பதற்கு கூட நம்பிக்கை இல்லாது இருக்கும்.
ஒரு இடத்திற்கு ஆட்டோவில் செல்ல 150 ரூபாய் என்றால் வெளிநாடுகளில் இருந்து வரும் நம்மவர்களைக்கண்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்பதுஇதனையையே அங்கிருக்கும் ஆட்டோகாரவர்கள்வாடிக்கையாக கொண்டிருக்கின்றார்கள்.
நண்பர்களே...!!!! டெக்னிகல் சந்தியில் நீங்கள் நிற்க வேண்டி ஏற்பட்டால்....
01. எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் பெட்டிகளை தனியாக அவ்விடத்தில் விட்டுச் செல்ல வேண்டாம்.அது நீங்கள் தங்கி இருக்கும் லொஜ் ரூமாக இருந்தாலும் சரியே.
02. நீங்கள் பஸ்ஸில் செல்லும் நேரம் வரும் வரை யாரிடமும் அதிகம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.
03. உங்களிடம் யாராவது வந்து அதிக நேரம் கதைத்துக் கொண்டிருந்தால் கூட அதனையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
04. உங்களை நன்கு தெரிந்தவர்கள் போலவும்நண்பர்கள் போலவும் உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டும் சில பேர் வருவார்கள் அவர்களிடமும் அவதானமாக இருக்கவும்.
05. அங்கிருக்கும் கடைகளில் அவசர தேவை அன்றி வேறு எந்த தேவைகளுக்கும் பொருட்கள் வாங்காதீர்கள்.உங்களைக் கண்டாலே சாதாரண விலையை விட பல மடங்கு பொருட்களின் விலையை உயர்த்துவார்கள்.

ஆகவே...நண்பர்களே...!!! நீங்கள் வெளிநாடுகளில் இருந்து அவ்விடத்தில் வந்திறங்க முற்பட்டால் அந்தஇடம் தொடர்பாகவும்அந்த இடத்தில் இருக்கும் ஒரு சில பகல் கொள்ளையர்கள் தொடர்பாகவும்அவதானமாக இருக்கவும்.


0 comments

பலாத்காரத்துடன் தொடர்புடைய 80பேர் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள்


கடந்த ஆண்டில் இடம்பெற்ற (2013) 586 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கைதான 916 பேரில், 31 பேர் பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடையவர்கள் எனவும், அதில் 17 பேர் சேவையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு பதிவாகியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 2528 பேரில், 80 பேர் பாதுகாப்புப் பிரிவுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் அதே வருடத்தில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 4 பாதுகாப்புப் பிரிவினர் கைதாகியுள்ளதோடு, சேவையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 2012ம் ஆண்டு போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதாக கைதான 51,069 பேரில் அறுவர் பாதுகாப்பு பிரிவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கூறிய ருவன் வணிக சூரிய அதில் இருவர் பதவி விலகிச் சென்றவர்கள் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்டமை தொடர்பில், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 169 பேர் 2011ம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டனர். மேலும் 2012ல், 124 பேரும் 2013ல், 114 பேரும் இது தொடர்பில் கைதானதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவை இவ்வாறு கைதானவர்களின் தொகை குறைவடைந்து வருவதையே காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தரவுகளின் படி நாட்டில் நடக்கும் குற்றச் செயல்களுடன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை நிராகரிப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 comments

பொலநறுவையில் மாணவியை கடத்தி 50 நாட்களாக கற்பழித்த சிங்கள இளைஞன் சரணடைந்தான் !



பள்ளி சென்று திரும்பி வந்த மாணவியை தனது தாயர் உதவியுடன் ஆட்டோ ஒன்றில் கடத்திச் சென்ற சிங்கள இளைஞன், குறித்த மாணவியை 50 நாட்களாக பூட்டிவைத்து கற்பழித்துள்ளான். மேற்படி நெறினி-கம்மன என்னும் பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன், பாடசாலை மாணவியை கடத்திச் சென்று பெலநறுவையில் உள்ள மலைப் பாங்கான இடம் ஒன்றில் தடுத்து வைத்துள்ளார். இக் கடத்தல் சம்பவம் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 50 நாட்களாக அடைத்து வைத்து அம்மாணவியை இவர் கற்பழித்துள்ளார். பொலிசார் பல முயற்சிகளை மேற்கொண்டும் இவர் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது அந்த இளைஞன் தானாக முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அம்மாணவியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளதோடு, குறித்த இளைஞனை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைபெற்றுவரும் மாணவியை பொலிசார் விசாரித்து வருகிறார்கள். இதேவேளை குறித்த இளைஞரின் தாயார் இன்னமும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தலைப்பட்சமாக காதலிப்பதும், தான் காதலிக்கும் பெண் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை என்றால் அவரை கடத்திச் செல்வதும் தற்போது சிங்களப் பகுதிகளில் மிகவும் சகஜமாகிவிட்டது.

முன் நாள் இராணுவச் சிப்பாய்களே இதனை செய்துவருகிறார்கள். அத்தோடு அவர்களின் உறவினர்களும் இதுபோன்ற செயல்களில் சற்றும் பயமில்லாமல் செய்துவருகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
0 comments

புகைத்தலினால் பாதிக்கப்படுபவர்களுக்கு வருடத்துக்கு 450 கோடி ரூபா செலவு- மைத்திரிபால சிறிசேன….!!

 

இலங்கையில் நாளாந்தம் புகைபிடிக்கும் பழக்கத்தினால் சுமார் 65 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்படுவர்களுக்கு அரசாங்கம் வருடாந்தம் சுமார் 450 கோடி ரூபாவை செலவிடப்படுகிறது.
புகைப்பழக்கத்தினால் வருடாந்தம் சுமார் 21 ஆயிரம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயாளர்களில் 60 வீதத்தினருக்கு மேற்பட்டோர் கூடுதலாக புகைப்பிடிப்பவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்
0 comments

களுத்துறையில் 4 மாத காலத்தில் பாடசாலை சிறுமிகள் 27 பேர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கம்….!!

 

இவ்வருடத்தின் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் களுத்துறைப் பகுதியில் பாடசாலை செல்லும் சிறுமிகள் 27 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்விதம் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான சிறுமிகளில் சிலர் கருத்தரித்துள்ளதாகவும் தாய்மார்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுச்செல்லும் போது பிள்ளைகளை உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுச்செல்வதே இதற்கான பிரதான காரணமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கடந்த வாரத்தில் முப்பத்துமூன்று வயதுடைய தன் காதலனுடன் களுத்துறை நகருக்கு வந்த 15 வயதுடைய மாணவியொருவர் அங்கிருந்த மலசலக்கூடத்துக்குள் சென்று தான் அணிந்திருந்த பாடசாலை சீருடையை கழற்றி விட்டு மாற்றுடைகளை அணிந்துகொண்டிருந்த போது களுத்துறை சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் அதிகார சபையினர் கைதுசெய்துள்ளனர்.
அவ்வேளையில் இம்மாணவி ஏழு வார கர்ப்பிணியாக இருந்துள்ளமை வைத்திய பரிசோதனைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger