Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label சோகம். Show all posts
Showing posts with label சோகம். Show all posts

அளுத்கமை மக்களின் அழுகை துடைப்போம்

அன்ஸாரிகளின் உதவிக்கரங்கள் அளுத்கமை மக்களுக்கு நீளட்டுமாக!

வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து துன்பப்படும் எம் அன்பர்களின் துயர் துடைக்க உங்கள் ரமழான் கால ஜகாத் மற்றும் ஸதகாக்களை அள்ளித்தாருங்கள் - 0094779481767

இவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு உங்கள் ஸகாத் மற்றும் ஸதகா உதவிகளை பணமாக வைப்பிலிடவேண்டிய வங்கிக் கணக்கு

Sri Lanka Thawheed Jamath
Hatton National Bank
Maradana Branch
Acc.No: 108010104971
Telephone Number : 0094779481767

உங்கள் பண உதவிகளை எமது கணக்கிலக்கத்தில் வைப்பிலிட்டவர்கள் வைப்பிலிட்ட தொகை, திகதி, உங்கள் தொடர்பிலக்கம், உங்கள் ஈமெயில் முகவரி என்பவற்றை 0094779481767 எனும் இலக்கத்திற்கு உடன் அறிவிக்கவும். உங்களுக்கான பற்றுச் சீட்டு ஜமாஅத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்படும், இன்ஷா அல்லாஹ்

0 comments

மனதை உருக்கும் அளுத்கம, பேருவலை காட்சிகள் - SLTJ யின் இரண்டாம் கட்ட நிவாரணப் பணி (காட்சிகள்)


************************************************************
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களின் உச்சகட்டமாக கடந்த 14ம் திகதி அளுத்கம, பேருவலை, தர்கா நகர் உள்ளிட்ட பகுதி வாழ் முஸ்லிம்கள் மீது பொது பல சேனாவின் தூண்டுதலில் பயங்கர இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 08 சகோதரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 02 பேர் மரணித்து 90க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். சுமார் 1500 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்கள் சூரையாடப்பட்டு, 300க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண சேகரிப்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இறங்கியது. முதல் கட்டமாக உலர் உணவுப் பொருட்களை விநியோகம் செய்த ஜமாத். தனது இரண்டாம் கட்ட நிவாரணப் பணியில் நேற்று (26.06.2014) ஈடுபட்டது.

இரண்டாம் கட்ட நிவாரணப் பணியில்……….
*****************************************
# துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்த 02 சகோதரர்களின் 05 பிள்ளைகளுக்குமான கல்வி உதவியாக மாதாந்தம் ஒரு பிள்ளைக்கு தலா 2500 வீதம் மாதாந்தம் ஜமாத் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தது.



# துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 08 சகோதரர்களுக்கும் ஒருவருக்கு தலா 50000 (ஐம்பதாயிரம்) ரூபா வீதம் உதவித் தொகை வழங்கப்பட்டது.








# சுமார் 500 குடும்பங்களுக்கு 3000 (மூவாயிரம்) ரூபா பெருமதியான நோன்புக்குறிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.






# சுமார் 300 குடும்பங்களுக்கு நோன்புக்குத் தேவையான உளர் உணவுப் பொருட்களுடன் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித் தொகை 5000 (ஐந்தாயிரம்) ரூபா பணமும் வழங்கப்பட்டது.
















இலங்கை முஸ்லிம்கள் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தின் மூலம் இவ்வுதவி செய்யப்பட்டது.

இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம பகுதி மக்களுக்கான ஜமாத்தின் பணிகள் மேலும் தொடர வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்பதுடன், அந்த சகோதரர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் ஜமாத்தை தொடர்பு கொண்டு தமது உதவிகளை வழங்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக மூன்றாம் கட்டப் பணியாக வீடு மற்றும் வியாபர ஸ்தலங்கள் மீள் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட வுள்ளதால் பாரிய நிதி உதவி அனைத்து அன்பர்களிடம் இருந்தும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.





இவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு உங்கள் ஸகாத் மற்றும் ஸதகா உதவிகளை பணமாக வைப்பிலிடவேண்டிய வங்கிக் கணக்கு

Sri Lanka Thawheed Jamath
Hatton National Bank
Maradana Branch
Acc.No: 108010104971
Telephone Number : 0094779481767

உங்கள் பண உதவிகளை எமது கணக்கிலக்கத்தில் வைப்பிலிட்டவர்கள் வைப்பிலிட்ட தொகை, திகதி, உங்கள் தொடர்பிலக்கம், உங்கள் ஈமெயில் முகவரி என்பவற்றை  0094779481767 எனும் இலக்கத்திற்கு உடன் அறிவிக்கவும். உங்களுக்கான பற்றுச் சீட்டு ஜமாஅத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்படும், இன்ஷா அல்லாஹ்


0 comments

இனவாதத் தீயில் கருகிப் போன தர்கா நகர் மற்றும் பேருவளை மக்களின் வாழ்விடங்களை புணர் நிர்மானம் செய்து கண்ணீர் துடைக்க உதவிக் கரம் நீட்டிடுவீர்!



இனவாதக் காடையர்களின் காடைத் தனமான தாக்குதல்களினால்பல 300 க்கும் அதிகமான வீடுகளும் 100 க்கும் மேற்பட்ட வியாபாரத்தளங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.

இதில் பலரது வீடுகளும், வியாபார நிலையங்களும் முற்றாகஇனவாதத் தீயில் கருகி சாம்பலாகி விட்டன. குறிப்பிட்ட ஊர்களில்நிவாரணப் பணிகள் நடந்த போதிலும்  அவை பெரும் பாலும்உணவுத் தேவையை நிவர்த்திக்கும் முகமாகவே அமைந்துள்ளன.பாதிக்கப் பட்ட மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை அடுத்துஎங்கு தங்குவது? எரிந்த வீடுகளை எவ்வாறு மீளக் கட்டுவது?வீட்டுக்குரிய அத்தியவசிய தளபாடங்களை எப்படி கொள்வனவுசெய்வது? அழிந்து போன வியாபார நிலையங்களை புணர் நிர்மானம்செய்து மீண்டும் எப்படி வாழ்வில் கரை சேர்வது? என்பதாகத் தான்அமைந்துள்ளது.

புனித ரமழான் எம்மை எதிர் நோக்கும் இச் சந்தர்ப்பத்தில்நிம்மதியாய் தங்கி நோன்பு நோற்கும் நிலை அற்றவர்களாய் நம்தொப்புல் கொடி உறவுகள் கண்ணீருடன் உள்ளனர்.

ஒரு முஸ்லிமின் துன்பங்களில் ஒன்றை நீக்குபவனது மறுமைதுன்பங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்குகிறான் என்பது நபிகளாரின்வாக்கல்லவா?

கண்ணீருடனும், உள்ளம் நிறைந்த சோகத்துடனும், எதிர் காலம்என்னவாகுமோ என்ற ஏக்கப் பெரு மூச்சுடனும் வாழ்வை கழிக்கும்எம் அளுத்கமை மற்றும் பேருவளை மக்களின் துயர் துடைத்து,அவர்களின் எரிந்து போன வீடுகளை புணர்நிர்மானம் செய்து. கருகியவியாபார தளங்களை புதிதாக கட்டுவிக்கும் நற்பணிக்கு பல நூறுகோடிகள் அவசியப் படுகின்றன.

கண்தடைப்புக்காய் அரசு செய்யும் போலி வாக்குறுதிகளை நம்பி நம்சொந்தங்களை நடுத்தெருவில் விடலாமா?  ஆதலால், யாருக்குஅல்லாஹ் பொருளாதாரம் எனும் அருளை அள்ளிவழங்கியுள்ளானோ அவர்கள் பாதிக்கப் பட்டு நடுத்தெருவில்அல்லாஹ்வின் உதவியை அடுத்து எம் உதவியை எதிர் பார்த்துநிற்கும் அன்பர்களின் வீடுகளையும் வியாபார ஸ்தலங்களையும்புணர் நிர்மானம் செய்யும் நற்பணிக்கு தாராளமாக அள்ளிவழங்குமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்விடுக்கிறது.

உங்களுடைய ஸகாத் மற்றும் ஸதகாக்களை பாதிக்கப்பட்டஅப்பாவிகளின் துயர் துடைக்கும் நற்பணிக்கு செலவிடுமாறுவினயமாய் கேட்கிறோம்.

பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கான நிரந்தர வதிவிட வாழ்வாதாரஉதவிகளை ஆற்றும் பணியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முழுவீச்சாக களம் இறங்கியுள்ளது. உங்கள் ஸகாத் ஸதகா உதவிகளைஎமக்கு தாராளமாக தந்துதவினால் தேவையுடையவர்களுக்கு அதுசென்றடையும் என்பதை உத்தரவாதப் படுத்துகின்றோம்.

உங்கள் ஸகாத் மற்றும் ஸதகா உதவிகளை பணமாக வைப்பிலிடவேண்டிய வங்கிக் கணக்கு

Sri Lanka Thawheed Jamath

Hatton National Bank

Maradana Branch

Acc.No: 108010104971

Telephone Number : 0779481767

என்ற வங்கிக் கணக்கில் இன்றே வைப்புச் செய்ய முடியும். பணம் 

வைப்பிலிட்டவர்கள் 0779481767 என்ற கையடக்க தொலை பேசியுடன்

தொடர்பை ஏற்படுத்தி எவ்வளவு தொகை, எத்தனையாம் திகதி 

வைப்பிலிடப்பட்டது, வைப்புலிட்டவரின் மின்னஞ்சல் அல்லது வீட்டு 

முகவரி என்பவற்றை தவறாது குறிப்பிடவும். நீங்கள் தந்த பணம் எம்

 கரம் சேர்ந்தது என்பதனை உறுதிப்படுத்தி பணத்தை பெற்றுக் 

கொண்டதற்கான ஜமாஅத்தின் உத்தியோக பூர்வ பற்றுச் சீட்டு உங்கள் 

முகவரிக்கு இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கப்படும்.
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger