நீங்கள் சவூதியில் இருக்கிறீர்களா? இதனைக்கட்டாயம் படியுங்கள்.




ஜப்றாஸ் ஹாஸிம்
வூதி உள்துறை அமைச்சகம் விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது.

அதன் விபரங்கள் வருமாறு:

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
மீறினால்: இக்காமா கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

2. அரசு அதிகாரிகள் இக்
காமாவை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்.
மீறினால்: முதல் முறை - 1000 சவூதி ரியால் அபராதம்; இரண்டாம் முறை - 2000 ரியால் அபராதம்; மூன்றாம் முறை - 3000 ரியால் அபராதம்.

3. எக்சிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்சிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக ரத்து செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை - 1000 சவூதி ரியால் அபராதம்; இரண்டாம் முறை - 2000 ரியால் அபராதம்; மூன்றாம் முறை - 3000 ரியால் அபராதம்.

4. இக்காமா தொலைந்துவிட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்: 1000 சவூதி ரியால் அபராதம்; இரண்டாம் முறை - 2000 ரியால் அபராதம்; மூன்றாம் முறை - 3000 ரியால் அபராதம்.

5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ, பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.
மீறினால்: 1000 சவூதி ரியால் அபராதம்; இரண்டாம் முறை - 2000 ரியால் அபராதம்; மூன்றாம் முறை - 3000 ரியால் அபராதம். மற்றும் யார் பெயரில் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்சிட்டில் அனுப்பப்படுவார்.

6. விசிட், பிசினஸ் அல்லது உம்ரா, ஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறிவிட வேண்டும். மேலும் உம்ரா, ஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களுக்கும் செல்லக் கூடாது.
மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவர். மேலும் யார் பெயரில் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்சிட்டில் அனுப்பப்படுவார்.

7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.
மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவர். அவருக்கு வேலை கொடுத்தவர் ‘வெளிநாட்டவராக' (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்சிட்டில் அனுப்பப்படலாம்.

8. இக்காமா விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது, விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.
மீறினால்: 10,000 ரியால் அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்சிட்டில் அனுப்பப்படுவர்.

9. ஹஜ், உம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.
மீறினால்: உதவியவருக்கு 10,000 ரியால் அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்சிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கக்கூடும்.

10. தன்னுடைய கஃபீல் நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல் நிறுவனம் சொந்த தொழில் செய்வது - பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் ‘கஃபாலத் - ஸ்பான்ஸர்ஷிப்' மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.
ம ...
11. தொழிலாளியின் கஃபீல் நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.
மீறினால்: 5000 ரியால் அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்.

12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.
மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை 5000 ரியால் அபராதம், ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை - 20,000 ரியால் அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை - 50,000 ரிாயல் அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.

13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.
மீறினால்: முதல் முறை - 10,000 ரியால் அபராதம், ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை - 20,000 ரியால் அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை - 30,000 ரியால் அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்சல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவர்.

14. வேலை செய்யாமல் ஓடிவிட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்.
மீறினால்: 5000 ரியால் அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.

15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.
மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு 2000 ரிாயல் அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்சல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதி நபருக்கு முதல் முறை 2000 ரியால் அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை 3000 ரியால் அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை.

16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால், ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.

17. தொடர்ந்து எந்த காரணமும் இன்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல் நிறுவனம் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை - 1000 ரியால் அபராதம்; இரண்டாம் முறை - 2000 ரியால் அபராதம்; மூன்றாம் முறை - 3000 ரியால் அபராதம்.more at: http://www.importmirror.com/2013/04/blog-post_3825.html#sthash.iUXd5NjG.dpuf
Share this article :

+ comments + 1 comments

Anonymous
June 21, 2013 at 10:21 AM

Above all are OLD STORY nothing new and #5 is absolute wrong, family visa holders can work in schools (KSA gov recently announced). Dear editor pls publish with responsible

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger