ஈராக்கில் நடக்கும் யுத்தத்தில் ராணுவ ரீதியாக ISIS இயக்கத்தின். கை ஓங்கியுள்ள நிலையில், ஈராக்கிய அரசு அவசர அவசரமாக போர் விமானங்களை தமது விமானப் படைக்காக கொண்டு வந்து இறக்குகிறது. முதல் கட்டமாக ரஷ்யா ஐந்து சுகோய் Su-25 ரக போர் விமானங்களை கொடுத்தது. அதன்பின் வேறு 3 போர் விமானங்கள் பாக்தாத் வந்து இறங்கின. இவையும் சுகோய் Su-25 ரக போர் விமானங்கள்தான்.
அமெரிக்கா அனுப்பிய ராணுவ ஆலோசகர்கள் பாக்தாத் வந்து இறங்கிய பின்னர், இந்த 3 விமானங்களும் வந்து இறங்கின.
இந்த விமானங்கள் வந்தபோது ஈராக்கிய விமானப்படை தளபதி உட்பட, முக்கிய அதிகாரிகள் விமானத் தளத்துக்கு வந்து இந்த விமானங்களை வரவேற்றார்கள். “இந்த விமானங்களும் ரஷ்யாவால் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்கள்தான். ஒரே டீலில் வாங்கப்பட்ட விமானங்களில் ஒரு பகுதி முதலில் வந்தன. மீதி இப்போது வந்துள்ளன” என ஈராக்கிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
அதுவரைக்கும், யாவரும் நலம்.
“முதல் செட் 5 விமானங்கள் ஈராக் வந்திறங்கியபோது, அவற்றை வரவேற்க யாரும் வரவில்லை. இரண்டாவது செட் 3 விமானங்கள் வந்தபோது மட்டும் வரவேற்பு பலமாக இருந்ததே.. என்ன காரணம்?” என நம்மைப் போல சந்தேகப் பிராணிகள் சிலர் ஆச்சரியப்பட்டார்கள்.
அதன்பின்தான் தெரிந்தது, முதலில் வந்த 5 விமானங்களும், அவற்றின் wingகள், tailகள் எல்லாம் கழட்டப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டு, கார்கோ விமானம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டது என்ற விஷயம். இரண்டாவது செட்டில் வந்த மூன்று விமானங்களும், விமானிகளால் செலுத்தப்பட்டு பறந்து வந்தன.
ஈராக்கிய விமானப்படை புளகாங்கிதம் அடைந்து, அதை வீடியோ எடுத்தும் வெளியிட்டது. வீடியோவை கட்டுரைக்கு கீழேயுள்ள லிங்கில் பார்க்கவும்.
ஒரே கான்ட்ராக்டில் வாங்கப்படும் விமானங்கள் இப்படி வேறு வேறு விதமாக டெலிவரி செய்யப்படுவது வழக்கமில்லையே.. இது என்ன, புதுக் கதையாக உள்ளது என மிலிட்டரி ஏவியேஷன் அனுபவம் உள்ளவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்த ஆச்சரியம், இரண்டாவது செட் விமானங்களை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வைத்தது. அந்த ‘டீப் லுக்’, “ஆமா.. இவை நெசமாகவே ரஷ்யாவில் இருந்து வந்த விமானங்கள்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறுதியில், “இவை நிச்சயம் ரஷ்யாவில் இருந்து வந்திறங்கிய விமானங்கள் அல்ல” என்ற முடிவுக்கு வர வைத்தது.
ஆம். இவை நிச்சயம் ஈரானில் இருந்து வந்த விமானங்கள்!
இதை எப்படி சொல்கிறோம்?
ஈரானிய விமானப்படையைப் பொறுத்தவரை இந்த ரக விமானங்கள் அவர்களது விமானப்படையின் விருப்பத்துக்குரிய விமானங்கள் அல்ல. அவர்களிடம் உள்ள மற்ற விமானங்களுடன் சிறிய எண்ணிக்கையிலான Su-25 விமானங்களே உள்ளன (அவற்றையும் அவர்கள் காசு கொடுத்து வாங்கவில்லை).
அந்த விமானங்கள் அனைத்தும் ஒரு குறுகிய அளவில் (narrow range) 6 இலக்க சீரியல் இலக்கங்கள் கொடுக்கப்பட்டவை. அவற்றின் வரிசை இலக்கங்கள் (prefix) எப்படி உள்ளன என்று பார்த்தீர்கள் என்றால், ‘15-245-’ என்ற வரிசையில் உள்ளன. இதில் ‘-’ என்று நாம் குறிப்பிட்டதுதான் ஒவ்வொரு விமானங்களுக்கும் இடையிலான சீரியல் இலக்க வேறுபாடு.
அதாவது ஈரானிய விமானப்படையின் Su-25 விமானங்களின் சீரியல் இலக்கங்கள் 15-2451, 15-2452, 15-2453… என்றுதான் உள்ளன.
தற்போது ஈராக்கில் கொண்டுவந்து இறக்கப்பட்ட விமானங்களின் சீரியல் இலக்கங்களை பாருங்கள். முதல் 4 இலக்கங்களையும் அழித்துவிட்டு, இறுதி இலக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
51, 56, 58 ஆகிய இலக்க விமானங்களே பாக்தாத் வந்து இறங்கின! அவற்றில் ஒரிஜினல் சீரியல் இலக்கங்கள், 15-2451, 15-2456, 15-2458.
இந்த விமானங்கள் ஈரானின் IRGC படைப்பிரிவால் உபயோகிக்கப்பட்ட விமானங்கள்தான்! IRGC என்பது, Iranian Revolutionary Guard Corps.
எதற்காக இந்த ஒழிவு மறைவு?
காரணம், ஈராக்கில், ISIS இயக்கத்தினர் யுத்தத்தில் அடையும் வெற்றி, ஈராக்குக்கு மட்டுமல்ல, ஈரானுக்கும் சிக்கலே.
இந்த சன்னி பிரிவு இயக்கம் நாட்டை கைப்பற்றிவிட கூடாது என்பதற்காக ஷியா பிரிவை சேர்ந்த (முன்னாள் எதிரிகளான) ஈரானிய, ஈராக்கிய அரசுகளும் ஒன்று சேர்ந்துள்ளன. ஈரானுக்கு லோட் லோடாக ஆயுதங்களை அனுப்பி வைக்கும் ஈரான், போர் விமானங்களையும் கொடுத்துள்ளது.
ஆனால், ஈரானிடம் இருந்து யுத்த உபகரணங்களை யாரும் இறக்குமதி செய்யக்கூடாது என ஐ.நா.வின் சர்வதேச தடை அமலில் உள்ளது.
அதுவும், பாக்தாத்தில் அமெரிக்க ‘ராணுவ திட்டமிடலாளர்கள்’ வந்திறங்கி உள்ள நிலையில், “ஆமா.. ஈரானில் இருந்து விமானங்களை பெற்றுக்கொண்டோம்” என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா? அதுதான், “ரஷ்யாவில் இருந்து வந்த விமானங்கள்” என்று அந்த திசையில் கையை காட்டி விட்டார்கள்.
இந்த விஷயம் அங்கிள் சாமுக்கு (அமெரிக்கா) தெரியாதா? அவர்களுக்கு தெரியாமல் நீங்கள் உங்கள் கிச்சனில் கிச்சடிகூட செய்ய முடியாது!
அவர்களே இப்படியொரு ஐடியா (“ரஷ்யாவில் இருந்து வந்த விமானங்கள்”) கொடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதுதாங்க ராஜதந்திரம்! தமக்குள் ஒரு கதை, பொதுமக்களுக்கு ஒரு கதை! தமக்கு தேவையென்றால், ஐ.நா தடையாவது, ஒன்னாவது.. எல்லாவற்றையும் ஒழித்து மறைக்க ஆயிரம் வழிகள் உள்ளன!!
முழுசாக வந்து இறங்கிய விமானங்களின் பாயின்ட்-ஆஃப்-ஒரிஜினையே மறைத்து விட்டார்களே!
http://khaibarthalam.blogspot.com/
Post a Comment