Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label பொது பல சேனா. Show all posts
Showing posts with label பொது பல சேனா. Show all posts

அளுத்கமை விவகாரம்: முதல் முதலில் யார் கல்லெறிந்தனர்? - வீடியோ


அளுத்கமை விவகாரம்: முதல் முதலில் யார் கல்லெறிந்தனர்? இதனை அதிகமதிகம் பிறருக்கும் பகிரங்கள். குறிப்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு மத்தியில் பகிருங்கள்.


அளுத்கம பிரச்சினைக்கு முஸ்லிம்களே காரணம் என்றும், முஸ்லிம்கள் தான் முதலில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் வந்தோருக்கு கல்லெறிந்ததாகவும் பொது பல சேனாவினால் ஒரு வீடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதை வாசகர்கள் அறிவீர்கள். ஆனால், அவ்வீடியோவில் முஸ்லிம் தரப்பிலிருந்து தான் கல்லெறி வந்தது என்பதற்கோ, கல்லெறிந்தவர் முஸ்லிம் தான் என்பதற்கோ எவ்வித சான்றும் கிடையாது.

இதோ அவர்களின் போலி வீடியோ





ஆனால், அளுத்கமை பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டத்தில் வந்தோரே மூல காரணம் என்பதை தெளிவு படுத்தும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதில் ஆர்ப்பாட்டக் காரர்கள் தான் முதலில் முஸ்லிம் தரப்பை நோக்கி கல்லெறிவதை காணலாம்

0 comments

மாவத்தகம சாமபோதி விகாரையில் ஞானசாரரின் தலைமையில் “காலீன தர்ம தேசனாவ”


சற்று  முன்னர் மாவத்தகம சாமபோதி  விகாரையில் பூஜை வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்ட  பொதுபல சேனாவின் காலீன தர்ம தேஷனா ஒன்றுகூடல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே  ஒருசில பிரச்சினைகள் உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ஒழுங்கான முறையில் அழைப்பு விடுக்காமையின் காரணமாக  இழுக்கேவல  மற்றும் போயகொடை விகாரைகளின்  விகாராதிபதிகள்  இவ்வோப்ருகூடளுக்கு  செல்வதை   தவிர்க்கும்படி தமது  ஊரார்களுக்கு ஆலோசனை வழம்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


அத்துடன் சற்றுமுன்னர் ஆரம்பமான இவர்களது பூஜை வழிபாடுகள் சுமுகமான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன கண்டி குருநாகல் பிரதான வீதியில்   அமைந்துள்ள சாமபோதி விகாரையின் பின்புறமாக மேடை அமைக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது அத்துடன் நூற்றுக்கும் குறைவானவர்கள் அதிலும் வயோதிப பெண்கள் அதிகளவில் அங்கு ஒன்றுகூடியிருப்பதையும் காணமுடிந்தது.


எனினும் மாவத்தகம நகரின் வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது அத்துடன் முழுமையான போலிஸ் பாதுகாப்பு பிரதேசத்திற்கும் அண்மித்த பரகஹதெனிய உட்பட ஏனைய கிராமங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.


இரண்டு பஸ்வண்டிகளில் போலிசார் மவத்தகம பிரதேசத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது அது தவிர  தீயணைப்பு வண்டிகளும் வரவழைக்கப்பட்டு இருந்தது.

 “காலீன தர்ம தேசனாவ” நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வருகைதந்த ஞானசாரரின் உரை சுமார் 40 நிமிடங்கள் இடம்பெற்றதுடன்    எவ்வித ஆவேசமும் இன்றி மிகவும் சாந்தமான முறையில் ஞானசார தேரரா இவர் ?என கேட்கும் அளவுக்கு அக்மார்க் தர்ம தேசனா உரை ஒன்றை நிகழ்த்தினார் . இவரின் உரை நிறைவுற்றதும் தான் வருகைதந்த பென்ஸ் வண்டியில் defendar வகானத்தின் பாதுகாப்புடன் 7:45 மணியளவில் விடைபெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.








0 comments

பொது பல சேனா எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைமைத்துவத்தை கையில் எடுக்கும் - டிலந்த விதானகே



இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படை வாதம் இருக்கின்றது. முஸ்லிம் பயங்கர வாதம் இருக்கின்றது. இந்த இரு குழுவினரும் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். எந்த தலைவர் சொன்னாலும், எங்களை கைது செய்தாலும் நாம் இது குறித்து விவாதிக்கத் தயார். நாம் இது குறித்து சவால் விடுக்கின்றோம் என பொதுபல சேனாவின் செயற்திட்ட அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் 2009 ஆம் ஆண்டு பேருவளை மஸ்ஜிதுர் ரஹ்மான் களவரத்துக்கு எந்த குழு காரணமோ அந்த குழு தான் அளுத்கமை பிரச்சினைக்கும் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

பொதுபல சேனாவின் பிக்குகள் எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைமைத் துவத்தைக் கையில் எடுப்பார்கள். அப்போது இந்த ஹக்கீம் மயப்படுத்தலிலிருந்து இந்த நாட்டின் முஸ்லிம் மக்களைப் எம்மால் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.


0 comments

ஊடக அமைச்சுக்குள் நுழைந்து வாழ் பிடிக்க முனையும் பொதுபலசேனா :


பொது பல சேனா அமைப்பினரும் இன்னும் இலங்கையிலுள்ள பெளத்த அமைப்புக்களின் பிரதி நிதிகளும் தற்பொழுது ஊடக அமைச்சில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

அளுத்கம சம்பவத்தினால் நாரிப் போன பொது பல சேனா அதனை நிவர்த்தி செய்திகொள்ளும் நோக்கில் அங்கு சென்றுள்ளனர். அளுத்கம சம்பவத்தில் ஊடகங்கள் தமது கடமையை சரியாகச் செய்யவில்லை என்றும் ஊடகங்கள் பக்க சார்பாக முஸ்லிம்களின் பக்கமே இருந்தது என்றும் அமைச்சரிடம் முறைப்பட்டுள்ளனர்.


இவர்கள் செய்த அடாவடித்தனங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவியதால் ஆட்டம் கண்டுள்ள பொது பல சேனா தற்பொழுது முழுப்பூசனிக்காயை சோற்றில் மூடி மறைக்க முற்பட்டுக் கொண்டு திணறுகின்றது.





0 comments

அளுத்கமை இன அழிவை அர்த்தப்படுத்திய ஞான சாரவின் “அப சரணய்” உச்சாடனம்




சிங்களத்தில் “அப” (Aba) என்பதன் பொருள் கடுகு என்பதாகும். சமூகத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத, பழைய ஆயுர்வேத மருத்துவத்தைச் செய்யக் கூடியவர்கள் பயன்படுத்திய ஒரு சொல்லாக “அப சரணய்” என்ற சொல் விளங்குகின்றது.

“அப” என்ற சொல்லை நேரடியாக மொழிபெயர்க்க முடியுமாக இருக்கின்ற போதும், “அப சரணய்” என்று எவ்வாறு மொழி பெயர்ப்பது என்று நானும் தலையைப் பீய்த்துக் கொண்டேன். சிங்கள - தமிழ், தமிழ் - சிங்கள, சிங்கள - ஆங்கில, ஆங்கில - சிங்கள பல அகராதிகளையும் புரட்டினேன். ருகுணு பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவரைக் கேட்டேன்.. “அப” என்பதற்குப் பொருளைத்தான் கண்டேனே தவிர “அப சரண” என்பதற்குப் பொருள் தெளிவாகவில்லை.

பிறகு சிங்களம் கற்பிக்கும் இரண்டு, மூன்று ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்கள் அதற்கு “அப” (Apa) என்பது வாய்தவறி அவருக்கு “அப” (Aba) சரணம் என்றாகி இருக்கும் என்றனர். “துன் சரணய்” என்றால் மும்மணிகளின் சரணம் (அபயம்) என்று பொருள். அவ்வாறாயின் “அப சரணய்” என்றால் எங்கள் சரணம் அல்லது நாங்கள்தான் அவர்களுக்கு கதி என்று பொருள் கொள்ளலாம்.

சிங்களத்தில் அரிதாகப் பயன்படுத்தப்படுகின்ற சில சொற்கள் சமூகத்தில் ஓரிருவரால் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் பின்னர் அது புழக்கத்தில் வந்து விடுகின்றது. இந்தவகையில், “அப சரண” என்பதற்கு தெரண “ஜனதா ஹண்ட” விடை கண்டிருக்கின்றது.

ஞானசாரர் பல இடங்களில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். பேருவளை நிகழ்வுக்குப் பின்னர் சர்வ சாதாரணமாக “அப சரண”வைப் பயன்படுத்துகின்றார். ஓரிடத்தில் “அமெரக்காவடத் கியன்ன தியன்னே அப சரணய் கியல” அமெரிக்காவுக்கும் “அப சரணய்” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது என்கிறார்.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிந்திருக்கவில்லை. அவர் இதுதொடர்பில் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிடும்போது,

“அப சரணய் என்பது என்ன? எனக்கு துன் சரணய் என்றால் அல்லது புது சரணய் என்றால் என்னவென்று மட்டுந்தான் தெரியும். யாரேனும் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் கதைத்தாலும் இறுதியில் நான் “புது சரணய்” என்று சொல்வதுதான் வழக்கம். “அப சரணய்” என்று யாரும் எனக்குச் சொல்லவும் இல்லை.

“அப சரணய்” தொடர்பில் “அத தெரண” அதன் வரலாற்றை ஆராய்ந்துள்ளது. கடுகுப் பயிர்ச்செய்கை விவசாயிகளின் எதிர்பார்ப்புடைய ஒரு தொழிலாக இருந்தபோதும், சாதாரண மக்கள் அதனை அழிவுக்குள்ளாக்கும் குறியீடாகவே காண்கின்றனர்.

வலகம்பா காலப்பகுதியில் அநுராதபுர மகா விகாரையை அழித்து அங்கு கடுகு பயிரப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களக் கவிதைகளில் பெரும்பாலும் சிறிய அளவைக் குறிப்பிட கவிஞர்கள் “அப மல் ரேணுவ” கடுகு மலரது மகரந்தம் போல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்த குமார தலுப்பொத்த என்ற ஆய்வாளரிடம் இது பற்றிக் கேட்டபோது, கிராம மக்களுக்கு கைம்மருந்து முறையொன்று உள்ளது. நோய் ஏற்படும்போது, விசேடமாக புழு நோய்கள் (புழுக் கடிகள்) ஏற்படும்போது, வாய்பேசாமல் - யாருக்கும் தெரியாமல் செய்கின்ற புழுக்களை முற்று முழுதாக அழித்தொழிக்கின்ற (“கெம்”) கடுகு மருந்துக்கு “அப சரணய்” என்று சொல்லப்படுகின்றது. அதாவது, ஒன்றை முற்று முழுதாக அழிப்பதற்கு “அப சரணய்” என்று சொல்லலாம்.

“அப சரணய்” என்று ஒருவரைப் பார்த்துச் சொன்னால் அது “அழிந்து போ” என்று சாபமிடுவதா என அவரிடம் கேட்டதற்கு,

“அபசரணய்” என்பது அழிந்து போ எனக் குறிப்பதுதான் எனக் குறிப்பிட்டார். இவ்வாறு பௌத்த மதகுரு ஒருவர் சொல்வது தகுமா? பரவலாகப் பேசப்படுகின்ற இந்தச் சொல் இன்று பௌத்த மத அறிஞர்கள் பலரிடத்தும் பெரும் அதிருப்தியைத் தந்துள்ளது என்பதுவே உண்மை.

இது தொடர்பில் பௌத்த தேரர் ஒருவர் கருத்துரைக்கும்போது,

“பௌத்த தேரர் ஒருவருக்கு நிறையப் பணிகள் உள்ளன. தர்மத்தைப் போதிக்க வேண்டும், நாட்டு மக்கள் - நாடு பற்றி தெளிவுறுத்த வேண்டும், பிறருக்கு தங்களால் எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுவதான் ஒரு பௌத்த துறவியின் செயற்பாடாக இருக்க வேண்டும். அதுதான் சிறந்த வழிமுறை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்சொன்ன ஆய்வாளரினதும், பௌத்த துறவியினதும் கூற்றுக்களை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரரின் “அப சரண”வுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, அவரது “அப சரண” எங்கள் சரணம் என்பதிலிருந்து முற்று முழுதாக விலகி, “அவர்கள் அழிந்து நாசமாகக் கடவது” என்று பொருள் கொள்ளத் தக்கதாக இருக்கின்றது.

இங்கு மற்றொருவிடயம் பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. சிலர் எதனைப் பேசினாலும் சமயோசிதமாகப் பேசி, பின்னர் அவர்கள் பற்றி பிறர் குறை காணும்போது, அதிலிருந்து விலகுவதற்கு அவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கை கொடுக்கின்றது. ஞானசார தேரரும் சிங்கள மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒருவர் என்பதை அவர் பல இடங்களில் கூறியிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கது.



0 comments

இஸ்ரேலின் கர்ப்பிணியைக் கொலை செய்யச் சொன்ன அடிப்படைவாதி தான் யுஸுப் அல் கர்ளாவி – ஞானசார தேரர்


அளுத்கம சம்பவம் தொடர்பில் முக்கியமாக பேசப்படும் ஒருவரான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார அவர்களுடன் ஞாயிறு சிங்கள பத்திரிகையொன்று மேற்கொண்டுள்ள நேர்காணலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். இதில் கூறப்படும் பதில்கள் யாவும் தேரரின் பக்கமிருந்து வரும் அவர் சார்பானவை என்பதை ஞாபகமூட்டிக் கொள்கின்றோம்.
கேள்வி –
அளுத்கம சம்பவத்துக்கு பெரும்பாலானவர்கள் பொதுபல சேனாவையே குற்றம் சாட்டினர். இதனாலா நீங்கள் கடந்த புதன் கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக்கு அழைக்கப்பட்டீர்கள்?
பதில் –
அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் அப்பிரதேசத்திலிருந்த பல அமைப்புக்களிடமும், தேரர்களிடமும் விசாரணைகளை சி.ஐ.டி. யினர் மேற்கொண்டனர். அதில் ஒரு குழுவாகத் தான் எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அளுத்கம சம்பவத்துக்கு நான் ஆற்றிய உரைதான் முக்கிய காரணமாக அமைந்திருந்தது என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும்,  உண்மை அவ்வாறல்ல. நாம் அரசியல் கட்சி நடாத்தவில்லை. முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு பொதுபல சேனாவுக்கு மூளையில் கோளாறு இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் மாவனல்லையில் இதுபோன்ற வன்முறையொன்று ஏற்பட்டது.
அன்று தீப்பற்றிய ஒரு மாடிக் கட்டிடக் கடை இன்று இரண்டு மூன்று மாடிகளாக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவங்களைப் பார்க்கும் போது,  இதன் பின்னணியில் திட்டமிட்ட ரீதியில் செயற்படும் ஒரு அமைப்பு  இயங்குகிறதா என எமக்கு எண்ணத் தோன்றுகிறது. பேருவளையில் ஒரு வியாபாரி தனது கடைக்கு தானே தீவைத்துக் கொண்டு பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ளார். அளுத்கம கூட்டம் முடிந்து அமைதியாக முறையில் சென்று கொண்டிருந்த பௌத்தர்கள் மீது முதலாவது தாக்குதல் மேற்கொண்டது முஸ்லிம் பள்ளிவாயலில் இருந்தவர்கள் தான்.
கேள்வி –
நீங்கள்  ‘அபசரணய்’  என்று கூறினீர்களே. அதன் கருத்து என்ன?
பதில் –
முஸ்லிம்களின் வியாபாரம் சிங்களவர்களினால் தான் பாதுகாக்கப்படுகின்றது. 76 வீதமான வருமானம் சிங்களவர்களினால் தான் முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றது. இதனைத் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால்,  இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அடிப்படைவாத குழுக்கள் உருவாகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.  இது அவர்களது வியாபாரத்தைப் பாதுகாக்க அவசியமானது.
முஸ்லிம்களிம் வியாபாரிகள் லாபமடைவது இந்நாட்டிலுள்ள சிங்களவர்களினால் ஆகும். எனவே,  முஸ்லிம் அடிப்படை வாதிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு. சிங்கள மக்கள் மீதும் பிக்குகள் மீதும் கை வைக்கக் கூடாது என நான் சொன்னேன்.
அவ்வாறு செய்தால், எம்மிடம் இரண்டு வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று,  இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு காணி விற்பதை நிறுத்துவது. மற்றது அவர்களது கடையில் சாமான் வாங்குவதைவிட்டும் சிங்களவர்களைத் தடுப்பது. சிங்கள மக்கள் அளுத்கம,  பேருவளை பிரதேசங்களிலுள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணித்தால், அந்தக் கடைகள் மூடிவேண்டி ஏற்படும். இதனைத்தான் நான் ‘அபசரணய்’ என்று கூறினேன்.
அன்று அளுத்கம சிங்கள மக்கள் ஆவேஷத்துடன் இருந்தனர். அவர்களது ஆவேஷத்தை ஆவேஷத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். இதற்காகவே,  நான் அங்கு இவ்வாறு உரையாற்றினேன். எனது உரையின் போது மக்கள் சப்தம் போட்டனர். கை தட்டினர். எனது ஆவேஷமான உரையினால் அவர்களது ஆவேஷம் கட்டுப்படுத்தப்பட்டது. எனது உரை அன்றைய வன்முறைக்கு காரணமாக அமையவில்லை.
கேள்வி –
எதிர்க் கட்சியினர், பொதுபல சேனாவின் பின்னால் பாதுகாப்புச் செயலாளர் இருப்பதாக தொடர்ந்து கூறிவருகின்றது. இது குறித்து?
பதில்-
இந்த அரசாங்கத்தை வீழ்த்திக் கொள்ள முடியாத எதிர்க் கட்சியும் அதன் தலைவரும் ஒவ்வொரு கதைகளைக் கூறுகிறார்கள். அவர்களுக்கு அரசியல் செய்ய ஒரு பொது எதிரி அவசியம். இதற்காக பொதுபல சேனாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கோட்டாப அவர்களுக்கு பொதுபல சேனாவை செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை. அவருக்கு வேண்டியதைச் செய்ய முப்படையினர் இருக்கிறார்கள். நாம் அவரை ஒரு தடவைதான் சந்தித்துள்ளேன். ஜம்இய்யத்துல் உலமா அமைப்புடனும் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இற்காக வேண்டி,  உலமாக்களின் பின்னால் கோட்டாபய அவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாமா?. தௌஹீத் ஜமாஅத் அமைப்பும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டது. இதற்காக அதற்குப் பின்னால் இருப்பது பாதுகாப்புச் செயலாளரா? அவருக்கும் எமக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
கேள்வி –
உங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டமை சமூகத்தில் முக்கியமாக பேசப்பட்டதுதானே?
பதில் –
மனித உரிமைகள் அமைப்பு எனும் பெயரில் செயற்படும் சில பௌத்த எதிர்ப்பு அமைப்புக்கள் பொதுபல சேனாவை பேய் போன்று சர்வதேசத்துக்கு சித்தரித்துக் காட்ட முயற்சிக்கின்றது. இந்த பௌத்த இனவாத சக்தியை செயலிழக்கச் செய்வதற்கு இந்த அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.
அமைச்சர் ஹகீம்,  ஹஸன் அலி போன்றோர் இந்தப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தப் பார்க்கிறார்கள். சிலர் எம்மை பயங்கரவாதிகள் என பெயரிட்டுள்ளனர். நாம் அகிம்சை அடிப்படையில் செயற்படுகின்றோம். அடிப்படைவாதிகள் பௌத்த கலாசாரத்துக்கு எதிராக செயற்பட முற்படுகின்றபோது நாம் அதற்கு எதிராக செயற்பட்டோம். இதன்போது,  எம்மை பயங்கரவாதிகளாக்குகின்றனர். தமிழ் கிராமங்களை முஸ்லிம் மயப்படுத்தும் போது நாம் அதனை வெளிப்படுத்தினோம். இதனை வெளிப்படுத்தியமை சிலருக்கு தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால்,  அமெரிக்காவுக்கு தவறான தகவல்களை அவர்கள் வழங்குகிறார்கள்.
கேள்வி –
சில ஆங்கில ஊடகங்களில் வெளியா செய்திகளில் பொதுபல சேனாவிலுள்ள தேரர்களின் காவியுடையில் இரத்தக் கறையுள்ளதாக கூறப்பட்டுள்ளதே?
பதில் –
எங்கள் மீது தாக்குதல் நடாத்தும் ஊடகங்கள்,  இந்த நாட்டில் ஐம்பது கோடி ரூபா பெறுமதிமிக்க காலாவதியான மருந்துப் பொருட்களை வைத்திருந்தவர்களுடைய பெயரை வெளியிட்டதா? அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பௌத்தர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இவ்வாறானவற்றின் பின்னால் இருப்பது மாற்று மதத்தவர்கள். பொதுபலயிற்கு அடிப்பவர்கள்,  இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டுவரும் முஸ்லிம்களின் பெயர்களை வெளியிட்டார்களா?
கேள்வி –
நோர்வேயிலிருந்து நிதி பெறும் பொதுபல சேனாவும்,  அரபு நாட்டிலிருந்து நிதி பெறும் முஸ்லிம் அடிப்படை வாதிகளும் அளுத்கமையில் மோதிக் கொண்டார்கள் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். பொதுபலவுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கப் பெறுகிறதா?
பதில் –
சில அமைச்சர்களைப் போன்று எமக்கு இரு நாக்குகள் கிடையாது. எப்படிப் போனாலும் பௌத்த பயங்கரவாதம் என்று ஒன்று இல்லை. இந்த நாட்டில் தலிபான் நிகாய ஒன்று இல்லை. இந்த நாட்டில் இருப்பது விகாரையுடன் கட்டுக் கோப்பான ஒரு சமூகம் மட்டுமே. பிரச்சினையொன்று ஏற்பட்டால் விகாரையின் மணியை அடித்துத் தான் மக்களைக் கூட்டினர். நாம் பார்க்க வேண்டியது விகாரை மணியின் நீள, அகலத்தை அல்ல. அது சொல்லும் கருத்து என்பதையாகும். உண்மையில் நாம் நோர்வேயிலிருந்து ஒரு ரூபாவையாவது பெற்றிருந்தால் அதனை நிரூபியுங்கள் என நாம் சவால் விடுக்கின்றோம்.
கேள்வி –
நீங்கள் கடந்த நாட்களில் மியன்மார் சென்று,  விராது தேரரை சந்தித்தமை குறித்து அதிகமானவர்களினால் பேசப்படுகிறது ..?
பதில் –
விராது தேரர் ஒரு பயங்கரவாதி அல்லர். அவர் அகிம்சைவாத செயற்திட்டமொன்றையே முன்னெடுத்துச் செல்கின்றார். விராது தேரரைப் போன்றே தலை லாமாவை சந்திக்கவும் எமக்கு முடியும். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் கவுன்ஸிலிலுள்ளவர்களும்,  ஷூரா கவுன்ஸிலில் உள்ளவர்களும் கட்டார் நாட்டுக்குச் சென்று அடிப்படைவாத தலைவரான யுஸுப் அல் கர்ளாவி அவர்களை சந்திக்கும் போது, அதுபற்றி பேசியவர்கள் யார்? இவர் இஸ்ரவேலிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கூட வெட்டிக் கொலை செய்ய முடியும் என்று கூறிய ஒருவர். விராது தேரரின் வேலைத்திட்டம் அகிம்சை ரீதியானது. பொதுபல சேனாவும் அப்படியே.
தமிழில் – எம்.எம். முஹிடீன்.
நன்றி – ஞாயிறு திவயின
0 comments

தர்கா நகர் தீவிரவாதத்தின் மத்திய இடம்; அதுவே கலவரத்துக்குக் காரணம் : BBS



இரு தரப்­பி­ன­ருக்­கி­டையே ஏற்­பட்ட சிறிய பிரச்­சி­னை­யினை முழு­நாட்­டிற்கும் பரப்பி சர்­வ­தேச அளவில் முஸ்­லிம்கள் கொண்டு சென்­று­விட்­டனர். பொது­ப­ல­சேனா மீது எவ­ரேனும் கை வைத்தால் முழு­நாடும் கொந்­த­ளிக்கும். எமது தரப்பு நியா­யங்­களை ஜனா­தி­ப­தியும், பாது­காப்புச் செய­லா­ளருமே செவி­ம­டுத்­தனர். வேறு எவரும் அவற்றைக் கண்­டு­கொள்­ள­வில்லை என்று பொது­ப­ல­சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களும் அமைப்பினரும் தர்கா நகரை அமைதியான நகரமாகவே தொடர்ந்தும் சித்திரித்தனர். ஆனால், தர்கா நகர் என்பது தீவிரவாதத்தின் மையப் பூமியாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதவாதத்தையும் அதனூடாக தீவிரவாதத்தினையும் பரப்பி அப்பகுதி மக்களை பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாகவே அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொது­ப­ல­சேனா அமைப்­பினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதேஅவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும்

தெரிவித்ததவாது: ஒரு கிரா­மத்தில் ஏற்­பட்ட சிறிய சண்டை இன்று சர்­வ­தேச மட்­டத்தில் கொண்டு செல்­லப்­பட்­டு­விட்­டது. அளுத்­கம சம்­பவம் ஏற்­பட்­ட­தற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டு­களே காரணம். சிறிய பிரச்­சி­னை­யாக ஆரம்­பித்த விடயம் இறு­தியில் இரு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான கல­வ­ர­மாக மாற்­றப்­பட்­டு­விட்­டது. நடந்த சம்­பவம் ஒரு சிறிய சம்­பவம். அதை பெரி­து­ப­டுத்தி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இல்லை. அது­மட்­டு­மின்றி இந்த பிரச்­சி­னைக்கு சம்­பந்தம் இல்­லாத எம்­மீது இறு­தியில் குற்றம் சுமத்­தி­விட்­டனர்.

இப்­போது ஆளும் தரப்­பி­னரும், எதிர்க்­கட்­சி­யி­னரும் பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ரையே குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். இது வேடிக்­கை­யா­கவும் எமக்கு வேத­னை­யா­கவும் உள்­ளது. உண்­மை­யி­லேயே இந்த சம்­பவம் ஏன் ஏற்­பட்­டது என்­பதை எவரும் கேட்­க­வில்லை. நாம் கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக தெரி­வித்தோம். நாட்டில் முஸ்லிம் மத­வா­தி­களின் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றது என. அதை எவரும் கண்­டு­கொள்­ள­வில்லை. முஸ்லிம் அமைச்­சர்­களும் அமைப்­பு­களும் பேரு­வளை, தர்கா நகரை அமை­தி­யான நக­ர­மா­கவே தொடர்ந்தும் சித்­த­ரித்­தனர். ஆனால் தர்கா நகர் என்­பது தீவி­ர­வா­தத்தின் மையப் பூமி­யாகும்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் மத­வா­தத்­தையும் அத­னூ­டான தீவி­ர­வா­தத்­தி­னையும் பரப்பி அப்­ப­குதி மக்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக மாற்றி வைத்­துள்­ளனர். அதன் விளை­வா­கவே இன்று அப் பகு­தியில் இனக்­க­ல­வரம் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த பொசன் தினத்­திற்கு இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அப்­ப­கு­தியில் பன்­ச­லைக்கு முன்னால் மாடொன்­றினை வெட்டி பெளத்த மதத்தை அவ­ம­திக்கும் வகையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் செயற்­பட்­டி­ருந்­தனர். இது தொடர்பில் ஏன் எவரும் கண்­டனம் தெரி­விக்­க­வில்லை.

நாட்டில் இன்று 30 பெளத்த அமைப்­புகள் உள்­ளன. பெரும்­பான்மை சமூ­கத்தின் எண்­ணிக்­கையில் இது மிகவும் குறைந்த அளவே. ஆயினும் சிறிய தொகை முஸ்­லிம்­க­ளுக்கு இலங்­கையில் 90 முஸ்லிம் அமைப்­புகள் உள்­ளன. இதில் பல அமைப்­புகள் சர்­வ­தேச அளவில் தடை­செய்­யப்­பட்­டவை. இவை தொடர்பில் எந்­த­வொரு முஸ்லிம் அமைச்­சர்­களும் வாய் திறக்­க­வில்லை. நாம் பேசினால் எம்மை இன­வா­திகள் என சித்­த­ரிக்­கின்­றனர். அளுத்­கம சம்­ப­வத்­திற்கு மூல காரணம் நாம் என்றே இன்று அனைத்து முஸ்லிம் தரப்பும், அமைச்­சர்­களும், எதிர்க்­கட்­சி­களும் குறிப்­பி­டு­கின்­றன.

ஆம் இந்த இனக்­க­ல­வ­ரத்­திற்கு நாம்தான் காரணம். அவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பி­னர்தான் காரணம் என்றால் அதற்­காக எம்மை கைது செய்து சட்ட நட­வ­டிக்­கைகள் எடுங்கள். அதேபோல் கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­பாவி சிங்­கள இளை­ஞர்­களை உட­ன­டி­யாக விடு­வித்­து­விட வேண்டும். சம்­ப­வத்தில் ஆயு­த­மேந்­திய முஸ்­லிம்கள் இன்று சுதந்­தி­ர­மாக நட­மா­டு­கின்­றனர். ஆனால், கல­வ­ரத்தை தடுக்க முயன்ற சிங்­கள இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அர­சாங்­கமும், எதிர்க்­கட்­சியும், பொலிஸும் நாட்­டிற்கு உண்­மை­யாக நடக்க வேண்டும். அதை­வி­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பின் மீது எவ­ரேனும் கைவைத்தால் இந்த நாடே கொந்­த­ளிக்கும். பொது­ப­ல­சேனா என்­பது வெறு­மனே ஐந்து உறுப்­பி­னர்­களைக் கொண்ட அமைப்பு அல்ல. பொது­ப­ல­சேனா என்­பது நாட்டில் உள்ள அனைத்து பெளத்த இனத்­தையும் சிங்­கள மக்­க­ளையும் கொண்ட அமைப்பு. எம்மை அழிக்க நினைப்­பது பெளத்த மக்­களை அழிப்­ப­தற்கு சம­மாகும். இதை அனைத்து தரப்­பி­னரும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

மேலும், இந்த நாட்டில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் அனைத்துத் தரப்­பி­ன­ரி­டமும் நாம் எடுத்­துக்­கூ­றினோம். ஆயினும் எவரும் இதை கண்­டு­கொள்­ள­வில்லை. எனினும், எமது முறைப்­பா­டு­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் ஜனா­தி­ப­தியும், பாது­காப்புச் செய­லா­ள­ருமே கவ­னத்தில் எடுத்­துக்­கொண்­டார்கள். பல சந்­தர்ப்­பங்­களில் நாம் குறிப்­பிட்­டதை கவ­னத்­திற்­கொண்டு நாட்­டிற்கு எதி­ராக ஏற்­ப­ட­வி­ருந்த அசம்­பா­வி­தங்­களை தடுத்­தனர். எனினும், இதற்­காக பாது­காப்புச் செய­லா­ள­ருக்கும் எமக்கும் தொடர்­புகள் இருக்­கின்­ற­தென எவரும் குறிப்­பி­டு­வது ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது.

சமில லிய­னகே

இதில் கருத்துத் தெரி­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் உறுப்­பினர் சமில லிய­னகே தெரி­விக்­கையில்;

தமிழ் மக்கள் புத்­தி­சா­லிகள், நேர்­மை­யா­ன­வர்கள் என்று வட மாகாண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். இதனை முழு­மை­யாக நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். தமிழ் மக்கள் நேர்­மை­யா­ன­வர்கள், புத்­தி­சா­லிகள் என்ற நம்­பிக்கை சிங்­க­ள­வர்கள் மத்­தியில் இருந்­ததன் கார­ணத்­தி­னா­லேயே இன்றும் தமி­ழர்­க­ளுடன் ஒன்­றாக வாழ்­கின்­றனர். எனினும் விக்­கி­னேஸ்­வரன் போன்ற பிரி­வி­னை­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளி­னா­லேயே தமிழ் – சிங்­கள சமூ­கத்­தி­டையே பிரி­வினை ஏற்­பட்டு முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்தார்.

டிலந்த விதா­னகே

பொது­ப­ல­சேனா அமைப்பின் ஊடகப் பேச்சாளர் டிலந்த விதானகே இவ் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்;

பாதுகாப்புச் செயலாளர் எமக்கு உதவி செய்ய வேண்டுமென்றோ அல்லது பாதுகாப்புச் செயலாளருக்கு பொதுபலசேனா அமைப்பு உதவ வேண்டுமென்ற அவசியமோ இல்லை. நாட்டில் 30 வருட காலம் இருந்த விடுதலைப்புலிகள் தீவிரவாதத்தை தனியாக அழித்த ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளரினால் இப்போது முஸ்லிம் தீவிரவாதத்தினை அழிக்க எமது உதவி தேவையில்லை. அதேபோல் இனப் பிரச்சினையினை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் செய்யப் பார்க்கின்றனர் இதையும் நாம் முழுமையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

வீரகேசரி
0 comments

பொதுபலசேனாவுடன் தொடர்பென நிரூபித்தால் பதவி விலகத் தயார்! சவால் விடும் கோத்தபாய



பொதுபலசேனாவுடன் தமது எவ்வித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த அவர், அந்த அமைப்புடன் தமக்கு தொடர்பு உள்ளதாக நிரூபிக்கப்பட்டால் தாம் பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனக் கூறினார்.

முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவையாவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும்.

இறுதியில் மக்களே இந்த விடயத்தில் உண்மை எதுவென்பதை தெரிந்து கொள்வார்கள் என்றும் கோத்தபாய குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தாம் அரசியலுக்கு வருவது மாத்திரமல்லாமல், தற்போதைய அரசியல்வாதிகளை காட்டிலும் சிறந்த சேவையை ஆற்றமுடியும் என்று அவர் தெரிவித்தார்.

போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய விடயங்களில் தமக்கு அதிகமான பங்கு உள்ளது. இந்தநிலையில் நாட்டில் ஒன்று வன்முறை ஏற்படுவது நாட்டின் கீர்த்தியை பாதிக்கும் என்பதை தாம் மறுக்கவியலாது. இதனடைப்படையில் தான் தாம் அளுத்கம சம்பவத்தை பார்ப்பதாக கோத்தபாய குறிப்பிட்டார்.

மாத்தறையில் பொது பல சேனாவின் அலுவலகத்தை தாம் திறந்து வைத்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், மரியாதைக்குரிய பிக்குவான க்ராமா விமலஜோதி அழைப்பு விடுத்தமை காரணமாகவே தாம் அதனை திறந்து வைத்ததாக குறிப்பிட்டார்.

விமலஜோதி தேரர் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் உட்பட்ட பலருக்கும் பரிச்சயமானவராவார் என்றும் கோத்தபாய தெரிவித்தார்.

அளுத்கம வன்முறைகளின் போது பொலிஸார் உரியவகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், அனைவரும் பொதுமக்கள் விடயத்தில் பொலிஸார் வேறுபட்ட விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் நாட்டுக்கு எதிராகவும் சமூகங்களுக்கு எதிராகவும் பேசுகிறார். எனினும் யாரும் அவரை கைதுசெய்ய கோருவதில்லை. முஸ்லிம் தலைவர்களும் அதே வழியை பின்பற்றுகின்றனர் என்றும் கோத்தபாய குற்றம் சுமத்தினார்.

வெறுப்பை ஏற்படுத்துபவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்துக்கு கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டாலும், நாளாந்தம் நடக்கும் போராட்டங்களை, அதனைக்கொண்டு தடுக்க முடியாது. எனவே பொலிஸாரை குறை கூறுவது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் வெறுப்பூட்டும் பேரணிகளை தடுக்காமல் விட்டமையானது பாதுகாப்பு குறைபாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

அதேநேரம் அளுத்கமவில் வன்முறைகளுக்கு காரணம் என்று கூறப்படும் பௌத்த பிக்கு தாக்கப்பட்ட சம்பவம் உண்மையானது என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ அறிக்கையில் குறித்த பௌத்த பிக்கு தாக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த கோத்தபாய, உடல் ரீதியாக சேதங்கள் ஏற்பட்டால் மாத்திரமே மருத்துவ அறிக்கை அதனை காட்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அளுத்கம சம்பவம் திட்டமிடப்பட்ட சம்பவம் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமையானது தரமற்ற அரசியல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments

நான் பொது பல சேனாவில் இருந்து விலகுவதை பெளத்த சங்கத் தலைவர்களும் பாராட்டினர் - விமலஜோதி தேரர்



பொது பல சேனா அமைப்பு சிங்கள மக்களால் மாத்திரமன்றி பொளத்த சங்கத்தாலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என அவ்வமைப்பின் தலைவர் கிரமஜோதி விமல தேரர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தகவல் வெளியிடுகையில்,

நான் பல வருடங்கள் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு வந்து இவ் அமைப்பில் இணைந்ததன் பின்னர் தன்னைப் பார்ப்பதையும் தான் பங்குபற்றும் நிகழ்ச்சிகளிலும் கூட பலர் கலந்து கொள்வதை தவிர்த்து வருவதாகவும், தன்னோடு நெருக்கமாக இருந்த பல துறவிகள் பலர் தன்னை ஒதுக்கி வைக்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நான் பொது பல சேனா அமைப்பில் இருந்து விலகுவது பற்றி அறிவித்ததும் என்னை விட்டு ஒதுங்கியிருந்தவர்கள் மாத்திரமன்றி பெளத்த தலைமைப்பீடங்களும் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க இன்றும் கூட பொதுபல சேனா அமைப்பு ஒரு பாரிய சக்தியாக இருப்பதற்கு இலகுவில் வன்முறையை தூண்டக்கூடிய சக்தியாக இருப்பதற்கும், அவ்வமைப்புக்காக அரச ஆதரவும் அனுசரணையுமே காரணம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments

ஞானசார தேரருக்கான அமெரிக்க வீசா ரத்து

.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு 2011ஆம் ஆண்டு தொடக்கம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் அமெரிக்காவுக்கான வீசா வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி கடந்த 2013ஆம் ஆண்டில் சமய நடவடிக்கைகளுக்காக தேரர் பல பமுறை அமெரிக்காவுக்கு சென்று வந்ததாக டிலன்த விதானகேகுறிப்பிட்டார்.

எனினும் இவரது வீசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அத தெரணவிற்கு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது



0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger