சற்று முன்னர் மாவத்தகம சாமபோதி விகாரையில் பூஜை
வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனாவின் காலீன
தர்ம தேஷனா ஒன்றுகூடல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஒருசில பிரச்சினைகள்
உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒழுங்கான முறையில் அழைப்பு விடுக்காமையின் காரணமாக இழுக்கேவல மற்றும் போயகொடை விகாரைகளின் விகாராதிபதிகள் இவ்வோப்ருகூடளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தமது ஊரார்களுக்கு ஆலோசனை
வழம்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சற்றுமுன்னர் ஆரம்பமான இவர்களது பூஜை வழிபாடுகள் சுமுகமான முறையில்
இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள சாமபோதி
விகாரையின் பின்புறமாக மேடை அமைக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது
அத்துடன் நூற்றுக்கும் குறைவானவர்கள் அதிலும் வயோதிப பெண்கள் அதிகளவில் அங்கு ஒன்றுகூடியிருப்பதையும்
காணமுடிந்தது.
எனினும் மாவத்தகம நகரின் வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறுவதும்
குறிப்பிடத்தக்கது அத்துடன் முழுமையான போலிஸ் பாதுகாப்பு பிரதேசத்திற்கும்
அண்மித்த பரகஹதெனிய உட்பட ஏனைய கிராமங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இரண்டு பஸ்வண்டிகளில் போலிசார் மவத்தகம
பிரதேசத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது அது தவிர தீயணைப்பு வண்டிகளும்
வரவழைக்கப்பட்டு இருந்தது.
“காலீன தர்ம தேசனாவ” நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வருகைதந்த ஞானசாரரின் உரை
சுமார் 40 நிமிடங்கள் இடம்பெற்றதுடன் எவ்வித ஆவேசமும் இன்றி
மிகவும் சாந்தமான முறையில் “ஞானசார தேரரா இவர் ?என கேட்கும் அளவுக்கு அக்மார்க் தர்ம தேசனா
உரை ஒன்றை நிகழ்த்தினார் . இவரின் உரை நிறைவுற்றதும் தான் வருகைதந்த பென்ஸ்
வண்டியில் defendar வகானத்தின் பாதுகாப்புடன் 7:45 மணியளவில்
விடைபெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment