Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

டெங்கு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 302 பேருக்கு எதிராக வழக்கு….!!

 

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 302 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
மேலும் 246 பேருக்கு சூழலை சுத்தப்படுத்துமாறு தெரியப்படுத்தியுள்ளதாகவும் மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
0 comments

சளித்தொல்லையை போக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி






துளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு  வாயுவை உள்ளிழுத்து அதிக பிராணவாயுவை வெளியிடுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் இலை, காம்பு என முழுச்செடியும் மருந்தாக பயன்படுகிறது. எய்ட்ஸ் நோயை அழிக்கும் அளவிற்கு இதற்கு சக்தி இருக்கிறது என நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன் கூறுகிறார்.

வெள்ளை துளசியில் இலை பச்சையாக இருக்கும். பூக்கள் கருநீல நிறம். இதற்கு நல்ல மணமும் சிறிது கார சுவையும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ocimum sanctum linn.    கருந்துளசியின் தாவரவியல் பெயர் ocimum sp. இது நந்தவனங்களிலும், கோயில் போன்ற சில இடங்களிலும்தான் காணப்படுகிறது. இதன்  தண்டும் இலையும் கருநீல நிறமாக இருக்கும். இலைகள் கரும் பச்சையாக இருக்கும். காரத்தன்மை கூடுதலாக இருக்கும். 

துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்துவந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி  நீங்குகிறது. பசுமையான இலையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்துவர நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்குகிறது. துளசி இலைச்சாறை 2-3 துளிகள் காதுக்குள் விட்டால் காதுவலி குறைகிறது. 

துளசி இலைச்சாறு சக்தி மிக்க கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.  காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். தினசரி 4 துளசி இலையை பறித்து சாப்பிட்டால் அதன்பலன் தெரியும். கிராமங்களில் இருப்பவர்கள் சளிப்பிடித்தாலோ, மூக்கு ஒழுகினாலோ துளசி இலையின் சாற்றை கொடுப்பார்கள். 

வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது. காய்ச்சலுடன் கூடிய ஆஸ்துமா நோய்க்கு துளசியை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  துளசி சாறு தொண்டை பகுதியிலுள்ள நோய் கிருமிகளை முற்றிலும் அழிக்கும். தோல் அரிப்பு, சொறி, சிரங்கு உள்ளவர்கள் இதன் சாற்றை பூசி வந்தால் விரைவில் குணம் தெரியும். படர்தாமரைக்கும் இச்சாற்றை பயன்படுத்தலாம்.  இதன் இலை மற்றும் குச்சிகளை கொண்டு புகை போட்டால் கொசுக்கள் வராது. 

கருந்துளசி இன்னும் அதிக பலன் தருகிறது. வயிற்றில் குழந்தை இறந்து விட்டால் அதை உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும். இல்லையேல் தாயின் உயிருக்கு மோசம் ஏற்படும். இதற்கு கருந்துளசி நன்கு பயன்படுகிறது. ஒன்பது கருந்துளசி இலையை மென்று தின்று விட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை உடைத்து அதை மெதுவாக மென்று உண்டால்  தேள் விஷம் முறியும். 

கருந்துளசி இலையை சுத்தம் செய்து சாறு பிளிந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அஜீரணம், வயிற்று போக்கு குணமாகும். ஜீரணக்கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி, ஆகியவற்றிற்கு துளசி சிறந்த மருந்தாகும். இரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இப்படி துளசி நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தேவை. கருந்துளசி பெரும்பாலும் வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. வெள்ளை துளசி தரிசு நிலங்கள், வயல் ஓரங்களில் தானாக வளரும். விதைகளை தூவியும் வளர்க்கலாம். 

ஆஸ்துமா, கேன்சர் அண்டாது

ஈஸ்னோபிலியாவும், ஆஸ்துமாவும் வெவ்வேறு காரணங்களால் வரும் நோய்கள் என்றாலும் இரண்டும் சகோதர நோய்கள் என அழைக்கப்படுகிறது. இப்போது இந்நோய்கள் அநேகரிடம் காணப்படுகிறது. இதற்கு துளசி பெரிய நிவாரணி. துளசி கசாயத்தில் மிளகு சேர்த்து குடித்தால் முற்றிலும் குணமாகும். தொடர்ந்து குடித்து வந்தால் இந்த இரு நோய்களும் அண்டாது. 

தினமும் 20 துளசி இலையை உண்டு தண்ணீர் குடித்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும்.இதேபோன்றுதினமும் காலை மாலை இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை உண்டுவந்தால் கேன்சர் குணமாகும். தினமும் ஒரு துளசி இலை சாப்பிட்டால் புற்றுநோய் அண்டாது என்ற ஒரு பழமொழியே உண்டு.

உடல் சூட்டை குறைக்கும்

துளசி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து உள்ளது. துளசி குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வேட்கையை குறைக்குமே தவிர மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

எய்ட்ஸ் குணமாகும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் கிருமி தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதன் மூலம் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்பது இயற்கை மருத்துவ கருத்து. அதிக சக்தியான நோய்கிருமிகளையும் அழிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் துளசி இலை எய்ட்ஸ் நோய்க்கு சிறந்த மருந்து. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 5 வகையான துளசிகள் பயிரிடப்படுகின்றன. மணிப்பூரில்  சாஜிவா ஜெயிலில் உள்ள கைதிகளில் 750க்கும் மேற்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியது கண்டறியப்பட்டபோது துளசி இலை மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நல்ல பலன் கிடைத்ததாக சிறைஅதிகாரி பாண்டகர் தெரிவித்துள்ளார்.
0 comments

குருநாகல் மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரம்: 520 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி


0 comments

கருத்தடை மாத்திரையால் வாழ்விழந்த பெண்


சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் கருத்தடை மாத்திரை உட்கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்து நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுவிஸின், சூரிச் நகரத்தை சேர்ந்த செலின் ப்லெகர் (22). இவர் 5 வருடங்களுக்கு முன்பு ஜேர்மனி மருத்துவ நிறுவனம் பேயர் தயாரித்த யாஸ்மீன் என்ற கருத்தடை மாத்திரை உட்கொண்டதால் நுரையீரல் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இவர் பெற்றோர்கள் 5.3 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் சூரிச் மாகாண நீதிமன்றம் மாத்திரை உட்கொண்டதற்கு எந்தவித ஆதரமும் இல்லை எனக் கூறி வழக்கை நிராகரித்தது.
இந்நிலையில் தற்போது CSS காப்புறுதி நிறுவனம் செலின்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து CSS நிறுவனத்தின் இயக்குனர் கொலடெரெலா கூறுகையில், நீதிமன்றம் வழக்கை தீவிரமாக வீசாரிக்கவில்லை என்றும், இதுபோன்று பல்வேறு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் யாஸ்மீன் என்ற இந்த மருந்தால் அமெரிக்காவில் 10,000க்கும் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
0 comments

திருமலை மாவட்டத்தில் 385 பேருக்கு டெங்கு தாக்கம்; இருவர் உயிரிழப்பு


 திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 385பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளானதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் என  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனுஷியா ராஜ் மோகன் தெரிவித்தார்.


அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- 
கடந்த மே மாதத்தில் மாத்திரம் 9 பேர் இந்நோயின்  தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இருவர் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா பிரதேசத்தில் இந்த நோயின் கடுமை காரணமாக  ஒருவர் மார்ச் மாதத்திலும் மற்றொருவர் மே மாதத்திலும் மரணமாகியுள்ளனர்.

எனவே, டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாவட்டம் முழுவதும் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் டெங்கு பெருக்கத்துக்கான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இது விடயத்தில் விழிப்புடன் உதவவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



0 comments

சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம்…


சர்வதேச புகையிலை தினம் (மே 31) அனுஷ்டிக்கப்படுகிறது. இது தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைகலையினை இங்கு காணலாம். 

0 comments

அதிகரிக்கும் புகைத்தல் மரணங்கள்





சிகரெட் புகைப்­ப­தனால் இலங்­கையில் ஒரு நாளைக்கு 60 பேர் உயி­ரி­ழப்­ப­துடன் ஒரு வரு­டத்­திற்கு 66 ஆயிரம் பேர் உயி­ரி­ழப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.
இது தொடர்­பாக சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் கருத்து தெரி­விக்­கையில்,
இன்­றைய தின­மா­னது புகைத்தல் எதிர்ப்பு தின­மாகும். இதற்­க­மைய கடந்த வருடம் இலங்­கையில் புகைப்­ப­வர்­களின் எண்­ணிக்கை 7 சத­வீ­த­மாக குறை­வ­டைந்­தது.
இருப்­பினும் இலங்­கையில் இளை­ஞர்­களை விட அதி­க­மாக வயோ­தி­பர்­களே சிகரெட் புகைக்­கின்­றனர். இந்­நி­லையில் புற்­று­நோய்க்கு உள்­ளா­ன­வர்­களில் பெரும்­பா­லானோர் புகைப்­ப­வர்­க­ளென தெரிய வந்­துள்­ளது.
இதற்­க­மைய இலங்­கையில் சிகரெட் புகைப்­ப­தனால் ஒரு நாளைக்கு 60 பேர் உயி­ரி­ழக்­கின்­றனர். அத்­தோடு ஒரு வரு­டத்­திற்கு 66 ஆயிரம் பேர் வரையில் உயி­ரி­ழக்­கின்­றனர்.
நாட்டில் புகைப்­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யினை குறைக்கும் முக­மாக சுகா­தார அமைச்சு பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. இதன்­படி சிகரெட் பெட்­டி­களில் 60 இலி­ருந்து 80 சத­வீதம் வரையில் அபாய எச்­ச­ரிக்கை உரு­வப்­ப­டத்தை உட்­செ­லுத்த சுகா­தார அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது






0 comments

மரபுசார்ந்த பார்வைக் குறைபாடை மரபணு சிகிச்சை மூலம் மாற்றலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை!!

 

மரபுசார்ந்த அரிய வகை பார்வைக் குறைபாடை மரபணு சிகிச்சை மூலம் மாற்றமுடியும் என்ற வியத்தகு உண்மையை அரை டஜன் தன்னார்வலர்களை ஆய்வு செய்து பார்த்ததன் மூலம் கண்டறிந்துள்ளதாக நேற்று மருத்துவ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
விழித்திரையில் உள்ள பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் மரபணுவை மாற்றுவதன் மூலம் இந்த நோய்க் குறைபாட்டை நீக்கமுடியும் என்று மருத்துவர்கள் தங்களின் பரிசோதனைகளில் கண்டறிந்துள்ளனர்.
இந்த சிகிச்சை முறையை மேற்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மங்கலான வெளிச்சத்தில் பார்வை மேம்பாடுகள் இருப்பதாக சில நோயாளிகள் தெரிவித்தனர்.
ஆறு பேரில் இருவர் கண் மருத்துவரால் தொங்க விடப்பட்டுள்ள எழுத்து வரிகளையும் படிக்க முடிந்துள்ளது என்ற தகவலை லான்செட் மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது.
இவர்களில் ஒருவரால் இரவு வானத்தில் இருந்த நட்சத்திரங்களையும் பார்க்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மரபணு சிகிச்சை காலவரையின்றி நீடிக்குமா என்பதை இப்போதே உறுதி செய்யமுடியாது என்றும் இந்தப் பணியில் ஈடுபட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நுப்பீல்டு கண் ஆய்வுக்கூடத்தின் ராபர்ட் மக்லெரன் எச்சரிக்கின்றார்.
நோயாளிகள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும்வரை பார்வை மேம்பாடுகள் பராமரிக்கப்படக் கூடும் என்றும் அதற்கு ஒரு நோயாளிக்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 50,000 பேரில் ஒருவருக்குத் தோன்றும் இந்தக் குறைபாடு ஆண்களைத் தாக்குகின்றது.
அதிலும் குறிப்பாக இளவயதினரே இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். மெதுவாகத் தீவிரமடையும் என்பதால் அவர்களின் மீது மருத்துவரின் அதிக கண்காணிப்பும் தேவைப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
0 comments

மாரடைப்பு நோயாளிகளின் ரத்தத்தில் வித்தியாசமான செல்கள்


மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வித்தியாசமான செல்கள் அதாவது கலங்கள் மிதப்பதை தாம் கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
111 பேரிடம் நடத்தப்பட்ட சோதனைகளை மையமாகக் கொண்ட இந்த ஆய்வு அறிக்கை உயிரியல் பௌதீகம் குறித்த சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருந்தது. இது மாரடைப்பு நோயாளிகளுக்கும், நோயற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்டக்கூடியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவரது இரத்தத்தில் இந்த பிரத்யேக செல்கள் இருக்கின்றனவா என்பதை அறியும் இந்த பரிசோதனையை வைத்து, ஒருவருக்கு மாரடைப்பு வரக்கூடுமா என்பதை முன்கூட்டியே அறியமுடியுமா என்றும் அவர்கள் தற்போது ஆராய்கிறார்கள்.
கலிபோர்னியாவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் குழு, நோயாளிகளின் குருதிச் சுற்றோட்டத்தில் எண்டோதெலியல் கலங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தது.
மாரடைப்பு எப்படி உருவாகின்றது என்று பார்த்தால், குருதிக் குழாய்களில் உருவாகும் கொழுப்புப் படிமங்கள் வெடித்து இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. அவை இதயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இரத்த ஓட்டத்தை தடுத்து மாரடைப்பை உருவாக்குகின்றன.
இந்தச் செயற்பாட்டின் போது, எண்டோதெலியல் செல்களும் இரத்தத்தில் வெளியிடப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மாரடைப்பு வந்த பின்னர் 79 நோயாளிகளிடம் செய்யப்பட்ட சோதனைகள், நோயற்ற ஆரோக்கியமாக உள்ள 25 பேர் மற்றும் இரத்தக்குழாய் நோய்களுக்கு சிகிச்சை பெறும் 7 பேருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் இந்த எண்டோதெலியல் செல்கள் காணப்படுகின்றன என்றும், அது ஆரோக்கியமானவர்களிடம் இல்லை என்றும் கூறுவதற்கான ஆதாரத்தை கண்டு பிடிக்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அந்த இலக்கை தாம் எட்டிவிட்டதாகவும் இந்த ஆய்வுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் குன் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு நோயின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டு பிடிக்கவும் தமது ஆய்வு உதவும் என்றும் அவர் கூறுகிறார்.
0 comments

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!


மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். 

சர்வதேச அளவில் ஐந்து வயது குழந்தைகளில் ஒரு கோடி குழந்தைகள் வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன. ஆகவே அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது. பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதே சிறந்தது. 

அதற்கு அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டும் காரணம் அல்ல, தாய்ப்பால் புகட்டுவதில் தாய்க்கும் நன்மை உண்டு. ஆறு மாதம் வரையில் குழந்தைக்கு தேவையான வைட்டமின் மற்றும் சத்துகளோடு, குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்பாலிலேயே அதிகம் இருக்கிறது. ஆகவே இப்போது தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எவ்வளவு நல்லது என்று பார்ப்போம். 

• தாய்ப்பால் புகட்டுவது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை மறந்து, குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது. 

• கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக் காலத்தில் கருப்பையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பேற்றிற்கு பின் கருப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய தாய்ப்பால் உதவுகிறது. 

• தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து, அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. 

• தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. அதாவது பெண்களின் கருப்பையில் அண்டம் உருவாவதை தாமதிக்கிறது. 

• தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும். 

• தாய்ப்பால் புகட்டுவதால் உணவு வழங்கும் உபகரணங்களை கழுவி, சுத்தப்படுத்தி, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

• தாய்ப்பால் புகட்டுவது மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. தாய்ப்பால் குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்கள் உடலில் எடை இழக்கவும் உதவுகிறது.
0 comments

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்


வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்ற வும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத் தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறை யில் பராமரிப்பது மிகவு ம் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில் கள் தேய ஆரம்பித்தவுட ன் டூத் பிரஷை மாற்றுவ து அவசியம் என்று டாக்
டர்கள் பரிந்துரைக்கி றார்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணை யாக இருக்கிறது என்று இங்கிலா ந்திலுள்ள மான்செஸ்டர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். அதிலும் மூடி வைக்க ப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியா க்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக் கை ஏற்படுத்தும் ஈ-கோ லி பாக்டீ ரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டா பில் கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.
உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரி யாமல் மறைந்திருப்பது என்னதெரியுமா ?
ஏராளமான கிருமிகளின் பண்ணை யே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர் கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப் படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லிய ன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீ ரியாவும் இதில் அடக்கம்.
வாய் நிறைய பாக்டீரியா
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகைகொடுக்காமல் வசிக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங் குகிறது என்றால், இந்த பாக்டீரி யாக்களின் எண்ணிக் கை வழக் கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல் லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லா மே பாக்டீரியாக்கள்தான். அவை உங்கள் வாய் என்ற வாட கை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.
பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?
டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத் துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள் ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெ ரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில் லை. ஆனால் டூத் பிர ஷை மற்ற வர்கள் பயன்படுத்தினால் அவ்வ ளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடிபோய் விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிக ள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.
டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?
அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப்பண்ணையாக இருந்தாலும், உங் கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக் குவரத்து நடத்தினா லும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொ ற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.
கழிவறை இருக்குமிடத்தில் பல்து ல க்காதீர்கள்
பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல் லது மிக அருகிலோ இருக்கு ம். ஒவ்வொரு முறையும் க ழிப்பறையைப் பயன்படுத்து ம் போது, அதன்மூலம் காற் றில் ஏராளமான பாக்டீரியா க்கள் சுற்றுலா செல்கின்ற ன. அதனா ல் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கென வே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் டூத் பிர ஷ்களை உங்கள் கழிப் பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள் ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.
டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோ ல்டர்கள்
பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறை யிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றா வது அசுத்தமான இடம் இதற்குத் தான்.
டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்
* ஒவ்வொரு முறை பல் துலக்கிய தும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.
* ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய் வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பத மான டூத் பிரஷ், பாக்டீரியா க்களுக்கு ஜாலியான தங்குமி டம் ஆகும்.
* தலைப்பாகம் மேலே வரும் படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுக ளை உபயோகியுங்கள்.
* உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோ தரி, சகோதரன், கணவன், மனை வி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்க ள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல் லை. இல்லை. இல்லை.
* ஒரே கப்பில் ஃப்ளவர் வாஷ் போ ல மொத்தமாக டூத் பிரஷ்க ளைப்போட்டு வைக்காதீர்கள். டூத் பிரஷ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது, அவை தங்கள் வசமுள்ள பாக்டீரியாக்களைப் பெ ருந்தன்மையோடு பரிமாறிக் கொள்கின்ற ன.
எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?
ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாத ங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிர ஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற் றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்ப தற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.
வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்
ஈறு சம்பந்தமான நோய்கள், பற் சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற் படக் காரணம் பாக்டீரியா க்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக் குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும். பல் துலக்கும் முன் பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத் தி வாய்கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதை த் தடுக்கலாம்.

0 comments

மார்பக புற்றுநோய் கண்டறிவது எப்படி?




புற்றுநோய், மரபு அணுக்களில் உள்ள நுண்ணுயிர் (DNA) மாற்றங்களினால் உண்டாகிறது. இது உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய்களுள் ஒன்றாக இருக்கிறது. அதிலும் மார்பக புற்று நோய் உலக அளவில் பெண்களை பாதிக்கும் முக்கிய நோயாக உருவெடுத்து இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் காணப்படும் புற்று நோய்களில் மார்பக புற்று நோய் முதலிடத்தையும், நோய்களால் ஏற்படும் இறப்புகளில் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. நமது நாட்டில் இது வரை கர்ப்பப்பை வாய் (Cervix) புற்று நோய் பாதிப்பே முதலிடத்தில் இருந்தது. 

தற்போதைய வாழ்வியல் மாற்றங்களினால் நகர்ப்புறங்களில் மார்பக புற்று நோய் முதலிடத்தை பிடித்து விட்டது. இது மேலும் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்பகப் புற்று நோய்க்கான காரணங்கள் பல. அதில் மிக முக்கியமானது மரபணுவில் ( BRCA 1 and BRCA 11) மாற்றங்கள் ஏற்படுவது. 

இந்த மாற்றங்கள் ஏற்படும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு 10-30 மடங்கு அதிகரிக்கும். அதாவது அவர்களுக்கு 85 சதவீதம் நோய் தாக்குவதற்கான அபாயம் உள்ளது. இந்த நோய்க்கான மற்ற காரணங்களில் முக்கியமானது ஹார்மோன்கள். 

நம் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் சுரப்பது நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. குடும்பத்தில் தாய் அல்லது உடன் பிறந்த சகோதரிக்கு இந்த வியாதி இருந்தால் மற்ற சகோதரிகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். 

சிறுவயதில் பூப்படைதல், மாதவிடாய் நாட்பட்டு நிற்பது, குழந்தைப்பேறு இன்மை, 30 வயதிற்கு மேல் முதல் குழந்தை பெறுவது, உடல் பருமன், உணவில் அதிக கொழுப்பு சேர்ப்பது, மது அருந்துதல், உடற்பயிற்சி இன்மை ஆகியவை மார்பகப் புற்றுப் நோய் வருவதற்கான காரணங்களாக இருக்கின்றன. 

ஆகவே இந்நோயின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் புற்று நோயை தடுக்க முடியாது. ஆனால் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகளில் மிக முக்கியமானது மேமோகிரபி (mammogram). 

5 mm-க்கு மேலான கட்டிகளை இப்பரிசோதனை மூலம் கண்டறிய இயலும். 40 வயதிற்கு மேலான பெண்கள் இந்த பரிசோதனையை வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். மேலும் மாதம் ஒருமுறை மார்பகங்களை தாங்களாகவே சுய பரிசோதனை செய்தும் அறிகுறிகளை தொடக்கத்திலேயே கண்டறியலாம். 

ஆரம்பநிலை பரிசோதனைகளை செய்து கொள்ளாவிட்டாலும் தங்கள் மார்பகத்தில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் (கட்டிகள், மார்புக் காம்பிலிருந்து ரத்தம் அல்லது நீர் வெளியேறுதல், மார்பகத் தோலில் மாற்றங்கள்) உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். 

நோயாளிகள் காலம் கடந்து பரிசோதனைக்கு வரும்போது மருத்துவரிடம் பெரும்பாலும் கூறும் காரணம், கட்டிகள் வலி இல்லாமல் இருப்பது பற்றி தான். ஆனால் வலி இல்லாத கட்டிகளைத்தான் உடனடியாக கவனிக்க வேண்டும். மார்பகத்தில் வரும் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. 

எனினும் உடனே பரிசோதனை செய்து அறிந்து கொள்வதே சாலச் சிறந்தது. ஆரம்பநிலையில் கண்டறிவதால் நோயை குணப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் பெண்மைக்கே உரித்தான மார்பகங்களையும் அகற்றாமல் காத்துக் கொள்ளலாம். அதாவது கட்டியின் அளவு 2 cm -க்குள் இருந்தால் கட்டியை அகற்றினால் போதுமானது. 

ஆகையால் நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதால் உயிரும், உறுப்பும் காப்பாற்றப்படும். மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை முறைகளாக அறுவை சிகிச்சை, வேதிச் சிகிச்சை (chemotherapy), கதிர்வீச்சு சிகிச்சை (radiotherapy) மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் இருக்கின்றன. 

நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய் முற்றிய நிலையில் வரும் நோயாளிகளுக்கு நோயின் தாக்கத்தையும், துயரத்தையும் குறைத்து அவர்களை காப்பதே சிகிச்சையின் நோக்கமாகும். புற்றுநோய் ஒரு சாபமல்ல! அதுவும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயே!!

0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger