திருமலை மாவட்டத்தில் 385 பேருக்கு டெங்கு தாக்கம்; இருவர் உயிரிழப்பு


 திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 385பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளானதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் என  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனுஷியா ராஜ் மோகன் தெரிவித்தார்.


அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- 
கடந்த மே மாதத்தில் மாத்திரம் 9 பேர் இந்நோயின்  தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இருவர் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா பிரதேசத்தில் இந்த நோயின் கடுமை காரணமாக  ஒருவர் மார்ச் மாதத்திலும் மற்றொருவர் மே மாதத்திலும் மரணமாகியுள்ளனர்.

எனவே, டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாவட்டம் முழுவதும் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் டெங்கு பெருக்கத்துக்கான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இது விடயத்தில் விழிப்புடன் உதவவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger