Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

பல்கலைக் கழக வாய்ப்பபை தவறவிட்ட மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு. A/L இல் குறைந்தது 3S தகுதிகள்.


இலங்கை உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இலவச கல்வி (http://www.mohe.gov.lk/)

சிறியளவு Z புள்ளிவித்தியாசத்தில் பல்கலைக் கழக வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உயர் கல்வி நிறுவனத்தினால் (http://www.sliate.ac.lk) தற்போது பின்வரும் HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பாடநெறிகளாவன :-

üHNDIT (Higher National Diploma in Information Technology) –http://www.hnditkandy.edu.lk,
ü  HNDM (Higher National Diploma in Management),
ü  HNDA (Higher National Diploma in Accountancy),
ü  HNDTHM(Higher National Diploma in Tourism & Hospitality Management),
ü  HNDBA (Higher National Diploma in Business Administration),
ü  HNDE(Higher National Diploma in English)

·         A/L இல் குறைந்தது 3S சித்திகளை பெற்று A/L சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

·         இப்பாடநெறிகள் முற்று முழுவதும் முழு நேர இலவச பாடநெறிகளாகும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 31 December 2014

விண்ணப்ப படிவம்:


விண்ணப்பபடிவத்தைஅனுப்பவேண்டியமுகவரி:

Advanced Technological Institute, No:16, Kappetipola Road,Kandy. (Before : 31stDecember 2014)

மேலதிகதகவல்களுக்கு 05 December 2014 வர்த்தமானியை பார்வையிடவும்.

https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WUEF4Mmtva19CNEk (in Tamil)

 https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WZDAtaVg1TkxEdm8(in sinhala)

மேலதிக தகவல்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் :

Mufeeth Ali : 0770214314(talk in Tamil)

Chamara : 0712558845(talk in English)

Chanaka : 0712713726(talk in Sinhala)


Kandy ATI campus:081-2226644 
0 comments

அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Close-in Weapon Systems



ஃபேலாங்ஸ் சுடுகலன்களை இப்போது அமெரிக்கா தனது கடற்படைக்கு என உருவாக்கியுள்ளது. லேசர் கதிர்கள் மூலம் தாக்குதல் நடாத்தும் ஃபேலாங்ஸ் படைக்கலன்கள் அமெரிக்காவிற்கு சீனாவிற்கு இடையில் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் படைவலுப் போட்டியின் ஓர் அம்சமாகும்.
அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறை முந்தியவையாகும். அமெரிக்காவின் வலிமை மிக்க கடற்படையைச் சமாளிக்க சீனா பலவழிகளின் முயல்கின்றது.
முதலாவதாக சீனா தனது நீர்முழ்கிக் கப்பல்களை அதிநவினப்படுத்தி வருகின்றது. சீனாவின் நீர்முழ்கிக் கப்பல்களின் தரம் வலு ஆகியவை படு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது.
இரண்டாவதாக சீனா அமெரிக்கச் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி அமெரிக்கக் கடற்படையின் தொடர்பாடல்களை முடக்கக் கூடிய திறனைப் பெற்றுள்ளது. அத்துடன் இணையவெளியில் ஊடுருவி அமெரிக்கக் கடற்படையின் தொடர்பாடல்களை அழிக்கும் வலிமையும் சீனாவிடம் உண்டு.
மூன்றாவதாக நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டோர்ப்பீடோக் குண்டுகளை சீனா மேம்படுத்தி வருகின்றது.
நான்காவதாக அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களைத் தாக்கக் கூடிய ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றது. இவை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் எனப்படும்
இவற்றில் சீனாவின் நான்காவது ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடிய ஏவுகணைகள் அமெரிக்கக் கடற்படைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. சீனா தனது WU-14 எனப்படும் ஹைப்பர் சோனிக் என்னும் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சோதனை செய்து பார்த்தது.
சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதே வேளை அமெரிக்கா 2008-ம் ஆண்டின் பின்னர் தனது பொருளாதாரப் பிரச்சனைகளால் தன் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் தமது படையின் திறனை குறைந்த செலவில் அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்
சீனாவின் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய WU-14 ஏவுகணைகள் சீனா தனது கடற்படையை அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி உயர்த்தி விட்டதாக அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் பாதுகாப்புத் துறைக் குழு அறிவித்தது.
சீனாவின் WU-14  ஏவுகணைகளையும் லேசர் கதிர்கள் மூலம் தாக்கியழிக்கக் கூடியதாக அமெரிக்கா தனது Phalanx பாதுகாப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பாதுகாப்பு முறைமை Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமை என்று அழைக்கப்படுகின்றது.  இதைச் சுருக்கமாக CIWS என அழைக்கப்படுகின்றது.
உயர் பகுதிறன் (high-resolution) கொண்ட தேடிக் கண்டு பிடிக்கும்
infra-red camera , விரைவு சுடுகலன் rapid-fire, கணனியால் இயங்கும் ரடார் , 20மில்லி மீட்டர் துப்பாக்கி முறைமை, லேசர் ஒளி பாய்ச்சி ஆகியவை அமெரிக்கா உருவாக்கியுள்ள Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமையின் முக்கிய அம்சங்களாகும்

அமெரிக்கக் கடற்படையின் மற்ற எல்லாப் பாதுகாப்பு முறைமைகளையும் முறியடித்துக் கொண்டு அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க வரும் ஒலியிலும் பார்க்கப் பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளையும் பறந்து வரும் விமானங்களையும் அமெரிக்கா தற்போது உருவாக்கும் Phalanx பாதுகாப்பு முறைமை தனது லேசர் கதிர்களால் கருக்கி அழிக்கும்.




0 comments

உளவியல் நோக்கில் இளையோர்.. (இளையோர் ஓர் அறிமுகம்) -எப். எச். ஏ. ஷிப்லி

 

இளையோர் பருவம் ஆங்கிலத்தில் adolescence என அழைக்கப்படுகின்றது. இப்பருவமே மனிதவிருத்திப்பருவங்களில் மிக முக்கியமான ஒரு பருவமாகக் கொள்ளப்படுகின்றது எனலாம். இப்பருவம் பிள்ளைப்பருவத்தின் முடிவின் போது ஆரம்பிக்கப்படுகின்றது.
இக்குமரப்பருவம் எனும் சொல்லானது இனத்தின் மொழியிலிருந்து தோன்றியது. இது பருவமடையும் வயது அல்லது முதிர்ச்சி நோக்கி வளர்தல் என குறிக்கப்படுகின்றது. எனினும் கைத்தொழில் புரட்சியின் பின் ஏற்பட்ட விளைவுகளே இக்குமரப்பருவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தேவையை உண்டு பண்ணியது எனலாம்.
பொதுவாக இப்பருவமானது 10-24 வயதுக்குட்பட்ட வரை குறிப்பதாக கொள்ளப்பட்டாலும் உளவியலாளரின் வரையறைப்படி ஆண்பெண் இரு பாலாரிலும் 12 வயது முதல் 18, 20 வயதிற்குள் சாதாரணமாக முடிவடைகிறது எனவும் கூறப்படுகின்றது.
எனினும் இப்பருவம் 25 வயதுவரை நீடிப்பதையும் கூறலாம். ஹோவின் கருத்து உலகில் இந்த வயதுடையோர் 1.8 மில்லியன்பேர் வாழ்கின்றனர். எனினும் 2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி எமது நாட்டில் 5 மில்லியன் குமரப்பருவத்தினர் வாழ்கின்றார்கள் எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்பருவத்தினை பின்வருமாறு இலகுவாகப் பிரித்து நோக்கலாம்.
1) 10-14 வயதுக்கிடைப்பட்டவரை இளையோர் பருவத்தின் ஆரம்பப்பகுதி
2) 15-19 குமரப்பருவத்தின் இடைப்பருவம்
3) 20-24 குமரப்பருவத்தின் கடைசிப்பகுதி; எனக் கொள்ளப்படுகின்றது. எனினும் இப்பருவத்தில் சிந்தனை, திறன்கள், ஆற்றல்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், உடல் உறுப்புக்கள் ஆகியவற்றில் துரிதமான மாற்றங்கள் நிகழும் பருவமாகவே காணப்படுகின்றது 
மேலும் இளையோர் பருவத்தின் ஆய்வுகளை மேற்கொண்ட இளையோர் அளவியலின் தந்தையான (G.Stanly Hall) ஸ்டேன்லி ஹோல் இப்பருவம் ஒரு நெருக்கடியான துன்பமிக்கபருவம் “storm and stress” (குமுறலும் அழுத்தமும் நிறைந்த பருவம்) என்கின்றார்.
அத்தோடு இப்பருவத்தில் நேரும் நிகழ்ச்சிகள் பின்னர் நேரும் வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாய் விளங்கி அவன் பண்பு நலத்தை சீர்செய்கின்றன என்று அவர் கூறுகின்றார் 
எனினும் இக் குமர்ப்பருவத்தில் உடல் வளர்ச்சி, மனவெழுச்சி, சுதந்திர உணர்ச்சி, சமூக வளர்ச்சி, அந்நியமாக்கப்படுதல் என்பன மிக முக்கியமான விடயங்களாகக் காணப்படுகின்றது. உடல்வளர்ச்சியை நோக்கும்போது உயரத்திலும் எடையிலும் குறிப்படத்தக்க மாற்றம் இடம்பெறுகின்றன. பெண்கள் ஆண்களை விட விரைவாக வளர்ச்சி அடைகின்றார்கள். இதன்போது மூளை வளர்ச்சியும் இடம்பெறுகின்றது. உடலியலின் மாற்றங்கள் விளைவாக மனவெழுச்சித் தாக்கங்கள் ஏற்படுகின்றன. 
மேலும் Stanly Hall இன் கருத்துப்படி, இப்பருவம் கற்பனை இலட்சியங்களினாலும் பாலியல் உந்தல்களினாலும் சூழப்பட்ட பிரச்சினைக்குரிய பருவம் என்கின்றார். மேலும் இப்பருவத்திலேயே ஹார்மோன்கள் முதல்தடவையாக சுரக்கின்றன. உடலில் எல்லாப்பகுதிகளிலும் உடல்வளர்ச்சி சீராக நடைபெறாமையினால் சமவயதுடைய இருவரின் உடல் இயல்புகளை ஒப்பிடும்போது சிலவேளைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அத்தோடு இருவரது உடல்களும் சமஅளவில் சில வேளை வளர்ச்சியடைந்திருக்கவும் கூடும். இவ்வாறாக, இயல்புகள் தோன்றும் வேகம் வேறுபடுவதில் ஹோர்மோன்களின் தொழிற்பாடு, போசனை, நிலைமை, தலைமுறை இயல்வுகளின் தாக்கம் உட்பட பிற காரணிகளும் பங்களிப்புச் செய்கின்றது. 
அத்தோடு குமரப்பருவம் பிள்ளைப் பருவத்தின் நிலையிலிருந்து ஒருவர் முழு முதிர்ச்சி நிலைக்கு மாற்றம் (transition) பெறும் பருவமாகும். இதன் முக்கிய தன்மை துரித மாற்றமாகும். இப்பருவம் இலட்சியங்கள் நிறைந்த பருவமாகவும் காணப்படுகின்றது. எனினும் இந்த லட்சியங்கள் உண்மை நிலையுடன் பொருந்தாதனவாக (unrealistic) காணப்படுகின்றது. இவற்றுடன், சமூக அறப்பண்புகளும் இப் பருவத்தில் காணப்படுகின்றது. இவையே இப் பருவத்தினரைப் பிற பருவத்தினரிலிருந்து பிரித்துக்காட்டுகின்றன.
அத்தோடு குமரப்பருவத்தினை “முரண்பாடுகள் நிறைந்த பருவம்” (stage of contradictions) எனவும் அழைக்கப்படுகின்றது. பெற்றோரின் முரண்பாடு, தன்னைப் பற்றிய கவலை, கல்வி, தொழில், எதிர்காலம் பற்றிய கவலைகளும் ஏக்கமும் நிராசையும், மனக்குழப்பமும் நிறைந்த பருவமாக இப்பருவம் காணப்படுகின்றது. 
இப் பருவம் பற்றிக் கூறிய எரிக் எரிக்சன் தனக்குரிய தனித்துவத்தை அல்லது சுய அடையாளத்தை தரும் பருவம் எனக் கூறுகின்றார். இப்பருவத்தில் சிறப்பான சமூக வளர்ச்சி பெறுகின்றான், சமூக முதிர்ச்சியினையும் பொருத்தப்பாட்டினையும் அடைகின்றான். இதன் விளைவாக சமூகப் பிரச்சினைகளை தன்னல நோக்குடன் அணுகாமல் சமூகத்தில் பிறரது உரிமை, கருத்துக்கள் ஆகியவற்றுக்கு மதிப்புக் கொடுக்கின்றான். மேலும் பிறருடன் ஒத்துழைத்துச் செயற்படுவான்.
பல நண்பர்களைப் பெற்றிருப்பதோடு தன்னைப் பற்றிய உண்மையான மதிப்பீட்டைப் பெற்றிருப்பான். எனினும் சமூகத்தில் தமது பொறுப்புக்களை முழு அளவில் ஏற்கத் தேவையான திறன் இப் பருவத்தினரிடத்தில் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது. இம் முழு வளர்ச்சி முதிர் பருவத்திலே ஒருவனிடம் ஏற்படுகின்றது.
எனவே குமரப்பருவத்தினரிடத்தில் சமூக நிலைமைகளில் செயற்படக் கூச்சமும் குழப்பமும் காணப்படும். அத்தோடு வயது, நிலை, அறிவு ஆகியவற்றில் தன்னையொத்த பிறரின் மதிப்பைப் பெறவும் தன்னை மற்றவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனோ நிலையும் ஏற்படும். இதன்போது ஒப்பார் குழுவின் தொடர்பு ஏற்படும்.
மேலும் அறநெறி, ஒழுக்க வளர்ச்சிகள் இப்பருவத்தில் முன்னேற்றம் அடைகின்றன. தன் வயதினை ஒத்தவரின் அறநடத்தைகளையும், கருத்துக்களையும் பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்திருக்கும். இவர்கள் மரபுவழி வந்த பெற்றோர்களால் புகழப்படும் அறப்பழக்கங்களில் முழு நம்பிக்கையற்றவர்களாகக் காணப்படுவார்கள் எனலாம். அத்தோடு இக் குமரப்பருவத்தினரிடையே தலைமை தாங்கும் பண்புகள் இயல்பாகவே காணப்படுகின்றது. தன்னலமின்மை, பொறுப்புணர்ச்சி, தன்னை ஒத்தவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் போன்ற பண்புகளும் இவர்களிடத்தில் காணப்படுகின்றது.
இளையோரில் ஏற்படும் மாற்றங்கள்…
இளையோர் பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு மனிதர்களிடையேயும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள், ஏனைய பருவங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதாகவும் அமைந்து காணப்படுகின்றது. எனினும் குமரப்பருவத்தின் தொடக்கத்தை உடலியல் அடிப்படையிலே விளக்கமுடிகின்றது. ஆனால் இப்பருவத்தின் முடிவு மனவியலடிப்படையில் விளக்கப்படுகின்றது. இனி இம்மாற்றங்கள் நாம் விரிவாக நோக்குவோம்.
உடலியல் மாற்றங்கள்…
உடலியல் மாற்றங்கள் நாம் நோக்குகின்ற போது பூப்புப்பருவம் தொடங்குவதிலிருந்து குமரப்பருவம் ஆரம்பிக்கின்றது. இப்பருவத்தில் ஒருவன் பிள்ளையுமல்ல முதிர்ந்தவனுமல்ல. இது ஆண் பெண் இரு பாலரினருக்கும் ஏறக்குறைய 11 இற்கும் 14 இற்கும் இடைப்பட்ட வயதுகளில் ஆரம்பித்து 18-21 வயதினில் முடிவடையும்.
இப்பருவத்தில் முக்கியமான உடலியல் மாற்றங்களாக இனப்பெருக்க உறுப்புக்கள் முதிர்ச்சியடையும், பெண்களில் முதல் மாதவிடாய் ஏற்படும். ஆண்களில் பூப்பு உரோமம் தோன்றி விந்து வெளிப்படும். எனினும் வெளித்தோற்ற வளர்ச்சியைக் காட்டிலும் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும். ஆண்பிள்ளைகளிடத்தில் முகத்தில் அரும்பு மீசை முளைக்கத் தொடங்குவதுடன் குரல்வளை முன்னோக்கித் தள்ளப்படுவதையும், சில வேளைகளில் முகத்தில் பருக்கள் தோன்றுவதையும் காணலாம்.
பெண் பிள்ளைகளிடத்தில் முகத்தில் புதுப்பொலிவும் சில வேளைகளில் பருக்களையும் உடலில் ஒருவித பூரிப்பையும் காணலாம் எனினும் குமரப்பருவத்தில் ஒருவனுடைய வளர்ச்சியில் வேகமும் தீவிரமும் அதிகம் காணப்படுகின்றது. இந்த வகையில் எலும்புக்கூடு வளர்கிறது. இதனால் உயரமும் எடையும் அதிகரிக்கின்றது. அத்தோடு, உடலின் உள்ளுறுப்புக்கள் மூளை என்பனவும் வளர்ச்சி பெறுகின்றது. எனினும் ஆண், பெண் போன்றவர்களிடத்தில் பின்வரும் உடலியல் மாற்றங்களை நாம் கண்டுகொள்ளமுடிகின்றது.
பெண் உயரமும் நிறையும் அதிகரித்தல்
 மார்பகங்கள் பருத்தல்
 பாலுறுப்பைச் சூழவும், கமக்கட்டுகளிலும் உரோமங்கள் வளர்தல்
 அதகளவு வியர்த்தல்
 இடுப்புப்பகுதி அகன்று விரிதல்
 தொடைகள் பருத்தல்
 பாலுறுப்பு பருத்தல்
 முகத்தில் பருக்கள் தோன்றல்
 மாதவிடாய் ஆரம்பித்தல் என்பவற்றைக் கூறலாம்.
ஆண் உயரமும் நிறையும் அதிகரித்தல
 தசைகள் விருத்தியடைதல்
 தோள்கள் அகன்று வளர்தல்
 குரல்வளை வெளித்தள்ளி வளர்தல்
 குரல் கட்டைக் குரலாக மாற்றமடைதல்
 கமக்கட்டுகள், மார்பு, பாலுறுப்பை சூழ்ந்த பகுதிகளில் உரோமங்கள் வளர்தல்
 அதிகளவு வியர்த்தல்
 பாலுறுப்பு (விதைகளும் ஆண்குறியும்) பருத்தல்
 முகத்தில் பருக்கள் தோன்றல்
 இந்திரிய சுக்கில வெளியேற்றம் ஆரம்பித்தல் 
போன்ற தோற்றங்களை உடலியல் மாற்றங்களாக நாம் கொள்ளமுடிகின்றது. எனினும் மேலே கூறப்பட்ட வளர்ச்சியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆரம்பத்தில் பெண்பிள்ளைகளின் வளர்ச்சி வேகத்தை விட ஆண் பிள்ளைகளின் வளர்ச்சி வேகம் இரண்டு வருடங்கள் தாமதித்தே ஆரம்பிக்கும். ஆனால் 18 வயதினை அடையும் போது ஆண்களின் வளர்ச்சி பெண்களின் வளர்ச்சியை விட மேலோங்கிக் காணப்படும் எனலாம்.
அறிகை மாற்றங்கள்…
குமரப்பருவமானது வளர்ச்சி மற்றும் மாற்றங்களினால் ஆக்கப்பட்டுள்ள கூட்டு செய்முறை பருவமாகும். இக்காலப்பகுதியில் ஒரு இளையோரிடத்தில் அறிகை மாற்றங்கள் ஏற்படுகின்றது. அறுகைமாற்றம் பற்றி பியாஜே கருத்துப்படி ஒரு மனிதனின் சிந்தனைத்திறன் நான்கு படிகளில் வளர்ச்சியடைகின்றது என்கிறார்.
• குழந்தைப்பருவத்தில் (பிறப்பு…….வயது) ஒரு குழந்தை தனது சூழலைப் பற்றி அறிந்து கொள்கின்றது.
• முன்பிள்ளைப்பருவத்தில் நடைமுறை நடவடிக்கைகளை அறிந்து அதை நினைவில் வைத்துக்கொள்ளல்.
• பிள்ளைப் பருவத்தில் உளரீதியா நடவடிக்கைகள் தூண்டி விடப்படுகின்றன. அது ஒரு பொருளைக்கொண்டு மட்டுமே அமைகின்றது. உதாரணமாக ஒரு எட்டு வயது பிள்ளையினால் ஒரு பொருளைத் தூக்கி வீசும் போது என்ன நடக்கப்போகும் என்று எதிர்பார்க்கமுடியும்.
இளையோர் பருவத்தில் பிள்ளைப் பருவத்தில் கிடைத்த அனுபவங்களை ஒன்றிணைந்து அதனை செயற்படுத்துவதே இம்மாற்றமாகும் என Pinget கூறுகின்றார். எனினும் பிள்ளைப்பருவத்தை விட இளையோர் பருவத்தினரிடத்தில் தர்க்கவியல் திறன்களும், எதிர்காலம் பற்றிய தனது சிந்தனைத் திறனும் அதிகளவில் காணப்படும்.
எனினும் pயைபநவ இன் கருத்துப்படி இளையோர் பருவத்திலே ஏற்படுகின்ற அறிகை மாற்றமே உண்மையான அறிவு வளர்ச்சியின் ஆரம்பம் எனக் கூறுகின்றார். இக்காலத்தில் சிக்லான பல பிரச்சினைகளுக்கு முடிவு காணும் ஆற்றல் ஏற்படுகின்றது. மேலும் சமூக, அரசியல் பிரச்சினைகள், ஒழுக்கப்பிரச்சினைகள் என்பவற்றிற்கு தீர்வுகளைக் காண்பதற்கும் உண்மையான அறிவை தேடி அறிவதற்கும் அவனது உளநிலைகள் தகுதி பெறுகின்றது.
அத்தோடு நுண்மதித் திறன்களும் விரைவாக வளர்ச்சியடைவது பற்றி உளவியலாளரின் கருத்துக்களை நாம் நோக்குவோம். இப்பருவத்தில் கலந்துரையாடல் மூலமாக தங்களது கருத்துப் பரிமாற்றங்களை வெளிப்படுத்துவதோடு கருதுகோளை அமைத்து சிந்தித்தல் கோட்பாடுகளை உருவாக்குதல், கற்பனை செய்தல் ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்துவார்கள். மேலும் எடுகோள்களை உருவாக்குதல், அவற்றை பரீட்சித்தல், பொதுவிதிகளை அமைத்தல், தமது தீர்வுகளுக்கு தகுந்த காரணங்களை வெளிப்படுத்துதல், சிக்கலான தொடர்புகளை விளங்கிக்கொள்ளல் ஆகிய பல்வேறு திறன்கள் இப்பருவத்தில் விருத்தியடைகின்றது.
மனவளர்ச்சி மாற்றங்கள்…. 
இளையோர் பருவத்தினரிடத்தில் மனவெழுச்சிகள் தீவிரமாக வளர்ச்சியடைகின்றது. இம் மனவெழுச்சி மாற்றம் உடல், உள்ளம் இரண்டையும் கலக்கும் ஒரு நிலையாகும். இம் மனவெழுச்சியானது இளையோர் பருவத்தினரை பெரிதும் பாதிக்கின்றது. இதற்குக் காரணம் இப்பருவத்தினரது வளர்ச்சியில் நிகழும் வேகமான மாறுதல்களே. உடலில் எழும் மாறுதல்களால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய கூச்சம், கவலை போன்ற மனவெழுச்சியை உண்டுபண்ணுகிறது.
மேலும் நம் தோற்றம், உடல்நலம், தம்மைப் பற்றிய பெற்றோரின் மனப்போக்கு, சமூகத்தில் நிலவும் அனுபவங்கள், பள்ளியில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை ஆகியவற்றைப் பற்றிய கவலைகள் இளையோரிடத்தில் தீவிர மனவெழுச்சியை உண்டுபண்ணுகின்றது. மேலும் பெற்றோர், பெரியோர்களின்; கட்டுப்பாடுகளை அதிகம் விரும்புவதில்லை. இதனாலும் குமர்ப்பருவத்தினரிடத்தில் மனவெழுச்சிகள் ஏற்படுகின்றது. அத்தோடு மனவெழுச்சி மாற்றங்கள் பாலியல் உணர்ச்சிகளின் போதும் ஏற்படுகின்றது.
எனினும் இப்பருவத்தினரை அளவுக்கு மீறிக் கட்டுப்படுத்திப் பார்ப்பது பயனற்றது மட்டுமன்றித் தீமை பயக்கும். இவர்களுக்கு பெற்றோர் அன்பு, பரிவு காட்டி, அவர்களுடைய சுதந்திர உணர்ச்சியை மதித்து வீட்டில் பொறுப்புள்ள செயல்களை செய்ய வாய்ப்பு அளிக்கும் போது மனவெழுச்சி தவிர்க்கப்படும்.
நடத்தை மாற்றங்கள்… 
இளையோர்களிடத்தில் நடத்தை ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சமூக, அரசியல், சமய உணர்ச்சிகளின் போது பல வழிகளில் மாற்றமடைகிறது. தான் ஒரு கலைஞனாகவும் ஒரு வீரனாகவும், மேதையாகவும் விளங்க விரும்புகின்றான். பெற்றோரின் கட்டுப்பாடுகளிலிருந்து சிறிது சிறிதாக ஒதுங்குகிறான். 
அத்தோடு சுதந்திரத்தை விரும்புவதோடு தடைவிதிக்கும் போது சச்சரவு கொள்வார்கள். அவை தவிர குழுவாக செயற்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்வம் கொண்டிருப்பார்கள். மேலும் ஒருவனின் மனக் கருத்தின் அடிப்படையில் நடத்தைகள் மாற்றம் பெறுகின்றது. 
மேலும் இளைஞன்; ஒருவன் சமூக பிரச்சினைகளை தன்னிலை நோக்குடன் அணுகாமல் சமூகத்தில்; பிறருடைய உரிமைகள், கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் நோக்குடன் அனுகுவான். மேலும் பிறருடன் ஒத்துழைத்துப் போகும் தன்மையும் தான் செய்யும் வேலைகளுக்கு தானே பொறுப்பேற்கும் தன்மையும் ஒரு பிரச்சினை பிறரை எவ்வாறு பாதிக்கும் என உணர்ந்து செயற்படுவான். அத்தோடு சமூகத்துடன் ஒன்றிப்போய் சமூகநலனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவான்.
மேலும் இளையோர்கள் குழுக்களாக சேர்ந்து செயற்படும் போதும் அவர்களது நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது ஒருவன் குழுவிலுள்ள ஒரு நபரைப் பார்த்து செயற்படும்போது அவனிடத்தில் நடை, உடை, பாவனை என்பவற்றில் மாற்றம் ஏற்படுகின்றது.
மேலும் பாடசாலையில் நடைபெறும் விழாக்களின் போது பங்கேற்று பல திறமைகளைப் பெற்றுக்கொள்கிறான். அவை தவிர சமூக வளர்ச்சிகளின் பிறப்பிடமும் இவ் இளையோர் பருவம் என்று கூறுமளவிற்கு சமயம சார் சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு, சமய வழிபாடு, சமய சடங்குகள், சமய விழாக்களின்போதும் ஈடுபட்டு தலைவர்களாக மிளிர்வார்கள். இவ்வாறாக இளையோர் செயற்பாடுகளில் நடத்தை ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதை நாம் அவதானிக்கலாம்.
ஆதலால்தான் பெற்றோர்கள் இப்பருவதிலுள்ள பிள்ளைகளின் நடத்தைகளை தினமும் கண்காணித்து அவதானமாக வளர்க்கவேண்டிய மிக முக்கியமான பொறுப்பை வகிக்கின்றனர். இப்பருவத்தில் பிள்ளைகளின் நடத்தைகளும் சிந்தனைகளுமே அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான அடித்தளம் என்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சரியான முறையில் வளர்ப்பதன் மூலம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளை உருவாக்க முடியும்.
தொகுப்பு :-
எப்.எச்.ஏ.ஷிப்லி
விரிவுரையாளர்
இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
0 comments

மொத்த கடல் நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு…..!!

 

நாம் வாழும் பூமியில் நிலப்பரப்பை விட கடல் பகுதி 3 மடங்கு அதிகம் ஆகும். ஆனால் மொத்த கடல்நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் ஸ்டீவ் ஜேக்கப்சன் மற்றும் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் பிராண்ட்சன் சாமண்டிட் ஆகியோர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்து உள்ளது. இந்த நீர் பகுதி வட அமெரிக்காவில் பூமிக்கு அடியில் 400 மைல் ஆழத்தில் இருப்பதாகவும், ஆனால் அது வழக்கமான திரவ நிலையில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேல் பகுதியில் உள்ள நீர் பூமிக்குள் இறங்கியதாலும், பூமியின் அடியில் உள்ள பாறை தட்டுகள் உருகியதன் காரணமாகவும் இந்த நீர் பகுதி உருவாகி இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள
0 comments

2050 பயணிகள் விமானம் எப்படி இருக்கும் ? உங்கள் இருக்கையில் இருந்தே மின்சாரம் அதிரும் வீடியோ !



பயணிகள் விமானங்களை தயாரித்து வரும் ஏர்-பஸ் கம்பெனி 2050ம் ஆண்டில் தமது விமானம் எப்படி இருக்கும் என்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இன்னும் 36 வருடங்களில் நீங்கள் பயணிக்கும் விமானம் எப்படி இருக்கும் என்பதனை இங்கே நாம் இணைத்துள்ள வீடியோ காண்பித்துவிடும். அதாவது உங்கள் இருக்கையில் இருந்தே மின்சாரம் பெறப்படுகிறது. உங்கள் உடல் சூட்டை வைத்து மின்சாரம் பெறப்பட்டு அதனை உள்ளக தேவைக்காக பயன்படுத்துகிறார்கள். விசாலமான இட வசதிகள் விளையாட்டு மைதானம், கழியாட்ட இடங்கள் என்று பல தரப்பட்ட வசதிகளோடு ஏர் பஸ் தனது விமானத்தை தயாரிக்க உள்ளது. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.


0 comments

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!


சென்னை: பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

பத்து மாதம் ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுப்பதற்குள் பெண்களின் உயிர் போய் உயிர் வரும். ஆனால், சென்னையை சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் தனது கர்பப்பையில் அதிக தசை வளர்ச்சி பெற்ற கட்டியை சுமந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த கட்டியை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருக்கிறார். இந்த கட்டியின் அழுத்தம் அதிகமாக சமீபத்தில் பிறப்புறுப்பு வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மூச்சுவிடவும் அவர் சிரமப்பட்டு வந்திருக்கிறார். இதையடுத்து, சென்னை குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார்.

அங்கு சோதனை செய்து பார்த்ததில், கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில் 15.6 கிலோ எடை கொண்ட கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டாக்டர் எஸ்.பி.சிவகுமார் மற்றும் டாக்டர் மணிமேகலை தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றியுள்ளனர்.

இதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் 9.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. இப்போது 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றியிருப்பது மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
0 comments

எந்த மொழியில் பேசினாலும் தமிழில் மாற்றும்.. ஸ்கைப் இன் அதிரடி அறிமுகம் (வீடியோ இணைப்பு)


JUNE 6TH, 2014


மென்பொருள்  துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது ஸ்கைப் மென்பொருள் , எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக  அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து, அவர் தேர்வு செய்தமொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து தற்போது. கலிபோனியாவல் நடந்து கோட் கான்பிரன்சில் இதை பொதுமக்களுக்கு டெமோ செய்து காண்பித்தனர்.
இதில் ஒருவர் ஜெர்மன் மொழியில் பேசுகின்றார். எதில் முனையில் இருப்பவர்  அதை ஆங்கிலத்தில் கேட்கின்றார். பின்னர் எதிர் முனையில் இருப்பவர் ஆங்கிலத்தில் பேசுகின்றார். பிறகு ஜேர்மன் மொழியில் பேசியவர் அதை ஜேர்மன் மொழியில் கேட்கின்றார்.
இனி பேசுவதற்கு மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது. எந்த மொழி தெரிந்தவர்களுக்கு எந்த மொழிகாரர்களிடமும் இனி பேசிக் கொள்ளலாம்.
டெமோவை பாருங்கள்

0 comments

60 ஒளியாண்டுகள் தூரத்தில் ராட்சத பூமி


ஓவியரின் கைவண்ணத்தில் கெப்லர் 10 சி கிரகம்

'மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி இந்த கிரகம் வலம் வருகிறது.
இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களையும் ஈர்த்து ஜூபிடர் அதாவது வியாழன் கிரகம் போல வாயுக் கிரகமாகவோ, நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர்.
ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக கெப்ளர் 10 சி, அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது
பூமியை விட இரண்டு மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்றால், இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.
0 comments

2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானத்தின் சோதனை முயற்சி வெற்றி


வரும் 2015ல் இந்தியா மற்றும் இதர உலக நாடுகள் முழுவதும் சூரிய சக்தியில் நிற்காமல் பறக்கும் முதல் விமானத்தின் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்த விமானத்தின் பயணம் அடுத்த வருடம் தொடங்கி முதலில் இந்தியாவை வந்தடைகிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் வடிவமைக்கும் இந்த விமானம் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

2300 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தில் 17000 சோலார் செல்கள் அமைத்து மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும். சூரிய ஒளியிலிருந்து சக்தியை பெறும் அந்த விமானம், 633 கிலோ எடை கொண்ட லித்தியம் பேட்டரியில் அந்த சக்தியை சேமித்து இரவு மற்றும் பகல் நேரங்களிலும் பறக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் ஒரேயொரு விமானி மட்டுமே இருப்பார். 20 முதல் 25 நாட்களில் அது உலகத்தை சுற்றி வந்து விடும் இதன் பயணம் விமானியின் ஓய்வை கருத்தில் கொண்டு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் தனது பயணத்தை துவங்கி முதலில் அது இந்தியாவில் தரையிறங்கும். இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் ஓரிடத்திலும், கிழக்கு கடற்கரை பகுதியில் ஓரிடத்திலும் என இரு இடங்களில் நின்று பின்னர் அந்த விமானம் மியான்மர் நாட்டிற்கு செல்லும் என கூறப்படுகிறது.

இதற்கான சோதனை முயற்சி இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இம்முயற்சியை மார்கஸ் ஷெர்டெல் என்ற விமானி வானில் 2 மணி 17 நிமிடங்கள் பறந்து வெற்றிகரமாக பரிசோதித்தார். விமானத்தின் சிமுலேட்டர் போன்ற பாகங்கள் முறையாக இயங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments

பகலில் தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்!!


பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் 40 ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடம் நடத்திய சோதனையில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கும் மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் அதிகரித்ததை மாசாசூசெட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பாடசாலைக் குழந்தைகளின் வாழ்வில் தொடக்கத்திலேயே நினைவாற்றலை அதிகரிப்பது அவசியம் என்றும் அதற்கு குழந்தைகளை மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்கவிட்டால் படிப்பில் சுட்டியாக விளங்குவர் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
0 comments

ஸ்டெம் செல் உதவியுடன் மனித மூளையை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்




பெட்ரி தட்டுகள் எனப்படுபவை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர்க்கிருமிகளை வளர்க்கப் பயன்படுபவை ஆகும். முதன் முதலாக இந்தத் தட்டுகளில் ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை ஒத்த ஒரு பகுதியை உருவாக்கி வருகின்றனர். 

தற்போது அந்தப் பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்ததுபோன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது. இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன.

இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன். நோபிளிச் கூறுகின்றார். மூளை பாதிப்பினால் ஏற்படக்கூடிய மனநோய் மற்றும் குழந்தைகளிடத்தில் காணப்படும் ஆட்டிசம் போன்ற வியாதிகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த மாதிரிகள் உபயோகப்படுத்தப்படும்.

கல்லீரல், இதயத் திசு போன்றவற்றை ஏற்கனவே விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள போதிலும், மூளை உருவாக்கம் போன்ற நுண்ணிய செயல்பாடுகள் அவற்றில் கிடையாது. விஞ்ஞான உலகின் கணிப்பின்படி, இன்றைய தேதியில் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்படும் உடல் உறுப்புகளில், மூளையின் உருவாக்கமே மிகவும் சிக்கலானது என்று கருதப்படுகின்றது. 
0 comments

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சி: கூகுள் நிறுவனம் தயாரிக்கிறது



டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை கூகுள் நிறுவனம் தயாரிக்கிறது.
தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக கூகுள் நிறுவனம் திகழ்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கியது.

அதை பொடோட்டா பிரையஸ் மற்றும் எலக்சல் ஆர்எக்ஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது. இருந்தாலும் கார் உற்பத்தி தொழில் நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.

எனவே, தாமாகவே கார் உற்பத்தி செய்ய கூகுள் முடிவு செய்துள்ளது. அதன் படி டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இவை டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் வழங்குகிறது.

இக்கார்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஒட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார்களால் ரோடு விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments

சீனா: 10 மணி நேர ஆபரேஷன் மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுக்கப்பட்டனர்


சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி யுவே ஜூக்சிங் என்ற பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. 

இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான 2 பெண் குழந்தைகள் பிறந்தன. ஒன்றன்பின் ஒன்றாக பிறக்காமல் 2 குந்தைகளும் ஒட்டிப் பிறந்ததால் அவை எத்தனை நாள் உயிருடன் இருக்குமோ...? என்ற கவலை யுவே ஜூக்சிங்கின் இதயத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. 

2 குழந்தைகளையும் ஆபரேஷன் மூலம் பிரித்தெடுக்கலாம். ஆனால், அதற்கு நிறைய செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதற்காக தெரிந்தவர்களின் மூலம் இணையதளங்களில் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு நிதியுதவி செய்யுமாறு யுவே ஜூக்சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

மளமளவென 1 லட்சம் யுவான் வரை (இந்திய மதிப்புக்கு சுமார் 10 லட்சம்) நிதி குவிந்தது. ஆபரேஷனை இலவசமாக செய்ய குவாங்க்சி மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியும் முன்வந்தது. 

இதனையடுத்து, ஈரலின் மூலன் ஒட்டிப் பிறந்த அந்த குழந்தைகளை பிரித்தெடுக்க கடந்த 8ம் தேதி ஆபரேஷன் நடைபெற்றது. 20 டாக்டர்கள் உழைப்பில் சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனில் 2 குழந்தைகளும் வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டன. 

ஆபரேஷனுக்கு பிந்தைய 3 வார சிகிச்சைக்கு பின்னர் நேற்று தாயுடன் சேய்களும் நலமாக வீட்டை சென்றடைந்தனர்.
0 comments

டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்: இங்கிலாந்தில் சோதனை ஓட்டம்



டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்: இங்கிலாந்தில் சோதனை ஓட்டம்

டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை கேமரா, ரேடார், லேசர் உணர்வு கருவிகள், போன்றவைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மிகுந்த சாலைகளில் விபத்துகள் நிகழாமல் தடுக்க இவை உதவிகரமாக இருக்கும். இந்த நிலையில், தானாக ஓடும் கார்களின் சோதனை ஓட்டம் இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்களும், ஜப்பானின் மல்டி நேஷனல் மோட்டார் நிறுவனமான நிஸான் கம்பெனியினரும் இணைந்து அறிவியல் பூங்கா ரோட்டில் இக்காரை வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்தனர்.
இதற்கிடையே, இங்கிலாந்தின் போக்குவரத்து துறை அந்நாட்டின் முக்கிய நகரங்களின் வீதிகளில் சோதனை ஓட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. கார்கள் தானாக இயங்கினாலும், அதன் இருக்கையின் பின்னால் டிரைவர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முடியும். தானாக ஓடும் கார்கள் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments

ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்

ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்

ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில் விண்வெளிக்கு செல்லும் அதிநவீன ராக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து அனுப்பபடும் ராக்கெட்டுகள் விண்வெளியை அடைய அதிக நேரம் ஆகிறது. ஆனால், அது 15 நிமிடத்தில் விண்வெளியை சென்றடையும் விதத்தில் அதிநவீன ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சக்தி வாய்ந்த என்ஜினை இங்கிலாந்து தயாரித்துள்ளது. இதை சாதாரண விமானங்கள் புறப்படும் ஓடுதளத்தில் இருந்தே இயக்க முடியும்.
இந்த ராக்கெட் ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்க கூடியது. மணிக்கு 19 ஆயிரம் மைல் (30,577 கி.மீ) வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்கது.
இதில், இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட ‘சாப்ரீ’ ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆளின்றி இயங்க கூடியது. மிகவும் எடை குறைந்தது. இது 15 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது.
இதில் உள்ள ‘சாப்ரீ’ என்ஜின் இயங்க திரவ ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிபொருளாக பயன்படுகிறது.
0 comments

சீனாவில் உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம் திறப்பு


துபாயில் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் உள்ளது. அதே போன்று சீனா தற்போது உலகிலேயே மிகப்பெரிய அளவிலான கட்டிடத்தை கட்டியுள்ளது.

இது செங்டு நகரில் கட்டப்பட்டுள்ளது. இது 1 கோடியே 90 லட்சம் சதுர அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 329 கால்பந்து மைதானத்தின் அளவாகும்.

இதற்கு ‘மம்மூத் நியூ செஞ்சுரி குளோபல் சென்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது. கண்ணாடி மற்றும் இரும்பினால் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், அலுவலகங்கள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

இக்கட்டிடம் கடற்கரையில் கடல் அழகை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் இங்கிருந்தே பார்க்க முடியும்.

இதற்கு முன்பு துபாய் விமான நிலையம் தான் உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம் என்ற பெருமை பெற்று இருந்தது. அது ½ கி.மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் உடையது. 100 மீட்டர் உயரம் கொண்டது. தற்போது இந்த பெருமையை சீனா கட்டிடம் தட்டிப் பறித்துள்ளது.
0 comments

ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணு உலை


ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் வருகிற 2016–ம் ஆண்டில் 6–வது சர்வதேச கப்பல் கண்காட்சி நடைபெறுகிறது. அதையொட்டி ரஷியாவில் மிகப் பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான ‘பில்டிங் பிளாண்ட்’ அதிசயிக்கத் தக்க வகையில் ஒரு பிரமாண்டமான அணுஉலை கப்பலை தயாரிக்கிறது.
இந்த கப்பலில் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் அக்கப்பல் நிறுத்தப்படும் நகரங்களில் மின்வச தியை அளிக்க முடியும்.
இதன் மூலம் இது உலகிலேயே முதலாவது மிதக்கும் அணுஉலை என்ற சிறப்பை பெறுகிறது. இக்கப்பல் 2016–ம் ஆண்டு அங்கு நடைபெறும் 6–வது சர்வதேச கப்பல் கண்காட்சியில் இடம் பெறுகிறது.
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger