Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label மதங்கள். Show all posts

சிலியில் 10- ஜெர்மனியில் 20: நாட்டுக்கேற்ப மாறுபடும் ரமலான் நோன்பு நேரம்

இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான புனித ரமலான் நோன்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஈகை திருநாள் என்றழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. 

இந்தியாவைப் பொருத்தவரை, இந்த நோன்பு காலங்களில் இஸ்லாமிய மக்கள் சுமார் 12 முதல் 13 மணிநேரம் அன்னம், தண்ணீர் அருந்தாமல் பசித்திருந்து, படைத்தவனை தியானித்தும், அவனை வணங்கியும் இந்த நோன்பு மாதத்தை நிறைவு செய்வது, நாம் அனைவரும் மிக நன்கறிந்த ஒன்றாகும். 

இந்த நோன்பு நேரமானது, பூகோள அமைப்புக்கு ஏற்ற வகையில், பூமத்திய ரேகையை மையமாக கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையில் கடைபிடிக்கப்படுவது பலர் அறியாத தகவலாகவும் உள்ளது. 

குறிப்பாக, குளிர்காலம் தொடங்கியுள்ள பூமத்திய ரேகையின் தென்பகுதியில் உள்ள நாடுகளில் நோன்பிருப்பது 10 மணி நேரமாகவும், அதற்கு எதிர்மாறாக கோடைக்காலம் நிலவும் வடபகுதியில் சுமார் 20 மணி நேரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அபுதாபியில் உள்ள ஒரு இஸ்லாமிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட அரபு அமீரக நாடுகளில் ஒரு நாளின் 15 மணி நேரம் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியா மற்றும் ஏமனின் தென்பகுதியில் 14 மணி நேரமாகவும், ஈராக், சிரியா மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் 15.5 முதல் 16 மணி நேரமும் நோன்பு அனுசரிக்கப்பட வேண்டும். 

துருக்கியில் 17 மணி நேரமும், இத்தாலியில் 18 மணி நேரமும், மத்திய பிரான்சில் 19 மணி நேரமும், தெற்கு ஜெர்மனியில் 20 மணி நேரமும், அதற்கு எதிர்மாறாக சிலி நாட்டில் ஒரு நாளைக்கு 10 மணி நேரமும் நோன்பு அனுசரிக்கப்படும் என்று உலகளாவிய அளவில் நோன்பின் நேரத்தை குறிப்பிடும் அந்த வரைப்பட அட்டவணை குறிப்பிட்டுள்ளது.
0 comments

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“ – வாஷிங்டன் போஸ்ட்

rasminmisc      

 நவீன உலகில் இஸ்லாம். இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் முதன்மையாக திகழும் அமெரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய தரவின் படி, இருபது அமெரிக்க மாநிலங்களில் இரண்டாவது மிகப் பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளதை அறியமுடிகிறது. 

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான “வாஷிங்டன் போஸ்ட்” வெளியிட்டுள்ள தகவலின்படி இஸ்லாம் அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதிகளில் பாரிய வளர்ச்சியை கண்டுவருவதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவில் கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அதிகமான அமெரிக்கர்கள் முஸ்லிம்களாக உள்ளதாக அமெரிக்க மத அமைப்புகளின் கூட்டமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் அமெரிக்காவையே வெற்றி பெரும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருப்பதை நாம் தொடர்ந்து அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் அமைந்திருந்த பல கிருத்தவ தேவாலயங்கள் தற்போது பள்ளிவாயல்களாகவே மாற்றப்பட்டு வருகின்றன. 

அது மட்டுமல்லாமல் சுமார் 2050 ம் ஆண்டுகள் அளவில் பிரான்ஸ் முழுமையாக இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை அழிக்க நினைப்பது முட்டால் தனம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளும் நேரம் சரியாகிவிட்டது என்பதையே இந்த புள்ளி விபரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. 

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன்09:32) - 

0 comments

சிங்கள பௌத்த மதத்தை பாதுகாக்க விசேட அமைப்பு

சிங்கள பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு விசேட அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மஹாநாயக்க தேரர்களை உள்ளடக்கிய வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று பீடங்களினதும் மஹாநாயக்க தேரர்களின் பங்களிப்புடுன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கண்டி தலதா மாளிகையில் நேற்று இந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
சிங்கள இனத்திற்கும் பௌத்த மதத்திற்கும் எதிரான சவால்களை முறியடிப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
எதிர்காலத்தில் பௌத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கியமான பௌத்த மதத் தலைவர்கள் இந்த அமைப்பை வழிநடாத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments

The second-largest religion in each state

BY REID WILSON

But what about the rest of us? In the Western U.S., Buddhists represent the largest non-Christian religious bloc in most states. In 20 states, mostly in the Midwest and South, Islam is the largest non-Christian faith tradition. And in 15 states, mostly in the Northeast, Judaism has the most followers after Christianity. Hindus come in second place in Arizona and Delaware, and there are more practitioners of the Baha’i faith in South Carolina than anyone else.
All these data come from the Association of Statisticians of American Religious Bodies, which conducts a U.S. Religion Census every 10 years. Here’s what their map of the second-most-practiced religions looks like:

Source: 2010 U.S. Religion Census, sponsored by the Association of Statisticians of American Religious Bodies
And here’s the county-level map of second-largest religions after Christianity:
Source: 2010 U.S. Religion Census, sponsored by the Association of Statisticians of American Religious Bodies
Source: 2010 U.S. Religion Census, sponsored by the Association of Statisticians of American Religious Bodies
The data the ASARB release every 10 years are revealing: Adherents to any religious faith — that is, those who actually attend religious services — make up more than half the population in 28 states. Utah has the highest percentage of adherents, at 79 percent of the population, while just over a quarter of Mainers are adherents. North Dakota, Alabama and Louisiana are near the top of the list, while Oregon, Vermont, Alaska, Nevada and Washington sit near the bottom of the rankings.
Here’s their map of the largest religious denomination by county:
Source: 2010 U.S. Religion Census, sponsored by the Association of Statisticians of American Religious Bodies
Source: 2010 U.S. Religion Census, sponsored by the Association of Statisticians of American Religious Bodies
Catholicism dominates the Northeast and the Southwest, and Southern Baptists have a strong foothold in the South. The Church of Jesus Christ of Latter-day Saints dominates Utah and surrounding counties in Idaho, Wyoming and parts of Nevada. Lutheranism has a strong following in Minnesota and the Dakotas, while Methodists make their presence felt in parts of West Virginia, Iowa, Nebraska and Kansas.
thanks for : http://www.washingtonpost.com/blogs/govbeat/wp/2014/06/04/the-second-largest-religion-in-each-state/

0 comments

சவுதி அரேபிய தெருக்களில் உருவாகும் ஷியாக்களின் இராணுவ இயந்திரங்கள்!!

by: Roomy Abdul Azeez
ஸ்லாம் உருவானது அரேபிய மண்ணில். பல தூதர்கள் பிறந்ததும் இதே மண்ணில். இப்னு சவுதினால் ஒன்றிணைக்கப்பட்ட பிராந்தியங்கள் சவுதி அரேபியாஎனும் பெயரில் இப்னு சவுத்தின் பரம்பரை மன்னராட்சியின் கீழ் ஆளப்பட்டடு வருகிறது. மக்கா, மதீனா போன்ற புனிதஸ்தலங்களை தன்வசம் கொண்டுள்ள இந்த தேசம் ஹஜ்ஜிற்காக வரும் முஸ்லிக்களிற்கு அளப்பரிய சேவைகளை செய்து வருகிறது. இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்கு பெரும் செல்வங்களை செலவளிக்கிறது. உலகில் துன்புறும் முஸ்லிம்களிற்கு பற்பல உதவிகளை செய்து வருகிறது.

இந்த தேசத்தின் மொத்த மக்கள் தொகையில் ஷீயாக்கள்” 14% என்பது சற்று புருவங்களை உயர்த்த வைக்கும் புள்ளி விபரம் தான். ஆனால் உண்மையும் அதுதான். சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியமான  Qatif,  Al-Hasa, Damam போன்ற பிரதேசங்களில் பெருவாரியாகவும் Madina வில் சொற்ப அளிவிலும், Najran பிரதேசத்திலும் வாழ்கின்றனர். நஜ்ரானில் வாழும் ஷியாக்களிற்கு Yemen எல்லையில் வாழும் ஷியாக்களுடன் நேரடி தொடர்புகள் உள்ளன. இவை இரகசியமான பாதாள செயற்பாடுகளுடனும் தொடர்புடையவை.

1932 ல் உருவாக்கப்பட்ட சவுதி இராஜ்ஜியம் ஸலபி கொள்கைகள் சார்ந்த ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஷியாக்கள் வாழும் பிரதேசங்களிற்கான உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு இவர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. வருகின்றன. பொலிஸாரின் ஒரு பக்க சார்பான அதீத அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச தொழில் வாய்ப்புக்கள் என பல விடயங்களிலும் பாரபட்சத்திற்கு இவர்கள் உள்ளவதும்  கவனிக்கத்தக்க விடயம். இவை இன்றைய நிலையில் சவுதி அரேபிய பற்றியும் ஷியாக்கள் பற்றியும் சுருக்கமான பார்வை..

சவுதி அரேபியாவில் வாழும் ஷியாக்கள் சவுதி அரேபிய சுன்னி முஸ்லிம்களை விடவும் இரு மடங்காக குழந்தைகளை பெறுகின்றனர். ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் 05 குழந்தைகளும் சராசரியாக 09 குழந்தைகளும் காணப்படுகின்றன. இந்த நிகழ்வு பல தசாப்தங்களாக சப்தமில்லாமல் நிகழ்ந்து வருகிறது. ஷியாக்கள் தங்கள் குழந்தைகளில் ஒரு ஆண் பிள்ளையை கர்பலாவிற்காக நேர்ச்சை வைத்து விடுகின்றனர். இந்த குழந்தை வீதியில் வளர்ந்து வரும் முரட்டு சுபாவமிக்க உரமான ஒருவனாக உருவாகின்றான். இருந்து விட்டு வீட்டுக்கு வந்து தாய் தந்தையரை பார்க்கும் அளவிற்கு இவர்கள் தெருமுனை மனிதர்களாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளனர். 

எதற்காக..?,

என்றோ ஒரு நாள் இந்த  சவுதியர்கள் விசுவாசிக்கும் அமெரிக்க தெய்வம் இவர்களிற்கு எதிராக திரும்பும். அந்த நாளில் சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியம் பிரிவினை கோரி நிற்கும். அப்போது இந்த தெரு மனிதர்கள் ஷியாக்களின் தலைமையின் ஷஹாதத் (?) போராளிகளாக மாறுவர். மாற்றப்படுவர். இவர்களால் திறந்து விடப்படும் களத்தை சமாளிப்பது அவ்வளவு இலேசானதாக இருக்கப்போவதில்லை.

ஈரானும், இஸ்ரேலும் அரசியலிலும், இராணுவியலிலும் முரண்படலாம், ஏன் மோதிக்கொள்ளலாம். ஆனால் சுன்னத் வல் ஜமாத்தினரை (சுன்னி) இல்லாதொழித்தல் என்ற புள்ளியில் இவர்கள் ஒன்றிணைகின்றனர். சவுதியை துண்டாடும் ஷியோனிஸ கனவிற்கு நிகரானதே கும்மின் அயாத்துல்லாக்களின் கனவுகளும். சவுதி அரேபிய அரசு இந்த தெருமுனை ஷியாக்களை பற்றி அதிக கவனம் செலுத்த தவறும் பட்ச்த்தில் அதன் விலை மிக மிக அதிகமானது. இப்போது தெஹ்ரானின் பல கட்டளைகள் தமமாமில் அமுலாகின்றன. அவை இராணுவ சப்பாத்துக்கள் போட்டு நடக்காததால் எம்மில் பலரும் இதனை உணர்வதில்லை.

சவுதி அரசு ஹிஜாஸ் பிராந்திய உட்கட்டமைப்பை புறக்கணிக்கும் அதே பொழுதுகளில் தான் அங்கு வாழும் ஷியாக்கள் தங்களின் இராணுவ அரசியல் உட்கட்டமைப்புக்களை வலுவாக வளர்த்து வருகின்றனர். நாளை ஷியாக்களின் மஹ்தி இராணுவம் ஈரானில் இருந்தோ லெபனானில் இருந்தோ வரப்போவதில்லை. வெறி கொண்ட அநத இராணுவம் ஹிஜாஸின் தெருக்களில் இருந்து தான் அணிவகுக்கும். வெள்ளம் வரும் முன் அணையல்ல துர்கர்ணைனின் இரும்பு சுவர்கட்ட சவுதி அரசு இப்போதே தயாராகுமா?..

0 comments

பைபிளின் பழைய ஏற்பாடும் ஓரிறைக் கொள்கையும்

-முஹம்மட் அர்ஷாத், காத்தான்குடி-

பைபிளின் பழைய ஏற்பாட்டில் நிறைந்து காணப்படுகின்ற ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துகின்ற போதனைகளை நோக்குவதற்கு முன்னர் பழைய ஏற்பாட்டை -நியாயப்பிரமாணத்தை- பின்பற்றுவதன் அவசியம் குறித்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் என்ன கூறியுள்ளதாக பைபிள் விபரிக்கின்றது என நோக்குவோம்.
நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்அழிக்கிறதற்கு அல்ல. நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதையெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும்,  ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும்சிறிதானதொன்றையாகிலும் மீறி,  அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன்என்னப்படுவான்இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோபரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால்,  பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”  (மத்தேயு 5:17-20)
பழைய ஏற்பாட்டை பின்பற்றுவதன் அவசியம் குறித்து மற்றொரு இடத்தில் பைபிளின் மத்தேயு அதிகாரம் பின்வருமாறு விபரிக்கின்றது.
“பின்பு, இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள். அவர்கள் செய்கையின்படியோ  செய்யாதிருங்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” – மத்தேயு – 23:1-3
பழைய ஏற்பாட்டை பின்பற்றுவதன் அவசியம் குறித்து இயேசு வலியுறுத்திக் கூறியதாக பைபிளே விபரிக்கின்றது. இனி விடயத்திற்கு வருவோம்.
ஆதியும் அந்தமுமற்ற கர்த்தர்
தனக்கு முன்னும், பின்னும் தன்னைத்தவிர வேறு கடவுள்கள் கிடையாது என்று அகிலங்களின் அதிபதியாக கர்த்தர் கூறுகின்றார். தீர்க்கத்தரிசிகளும் இந்த ஓரிறைக் கொள்கையையே போதித்தார்கள். இது குறித்து ஏசாயா அதிகாரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப் பின் இருப்பதுமில்லை. நான், நானே கர்த்தர். என்னையல்லாமல் ரட்சகர்  இல்லை. நானே அறிவித்து இரட்சித்து, விளங்கப் பண்ணினேன். உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை. நானே என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.“ (ஏசாயா 43:10-12)
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்கு தகுதியான கடவுள் கிடையாது என்பதை இறைமறை இவ்வாறு கூறிக்காட்டுகின்றது.
‘அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?’ என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!  (திருக்குர்ஆன் 43:45)
ஆதியும், அந்தமுமற்ற கடவுளைத் தவிர வணங்கி வழிபடத் தகுதியான  வேறெந்த அந்நிய தேவர்களும் கிடையாது என்று  இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் போதித்ததை பைபிளும் உறுதிப்படுத்துகின்றது.
வானங்கள்பூமியின் அதிபதியாகிய ஒரே இறைவன் 
கிறிஸ்த்தவ அன்பர்களால்  மோசே  (அலை) அவர்கள் போதித்தாக நம்பப்படுகின்ற உபாகமம் நூல் கர்த்தராகிய ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் கிடையவே கிடையாது என்றும், வானங்களுக்கும், பூமிக்கும் அவனே ஒரே இறைவன் என்றும் கூறுகின்றது.
“ஆகையால் உயர வானத்திலும், தாழ பூமியிலும் கர்த்தரே தேவன். அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து…”  (உபகாமம் 4:39)
மகத்துவமிக்க இறைவனே வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி என்பதை இறைவேதம் திருக்குர்ஆன் விபரிக்கையில்,
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.”  (திருக்குர்ஆன் 37:4,5)
என்று கூறிக் காட்டுகின்றது
வானங்கள், பூமி அவற்றுக்கிடைப்பட்ட சகலவற்றுக்கும் சர்வ வல்லமை பொருந்திய கர்த்தர் ஒருவரே இறைவன் என்கின்ற ஓரிறைக் கொள்கையை பைபிளும் உறுதி செய்கின்றது
முந்தினவரும்பிந்தினவருமான கர்த்தர்
கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாடு ஓரிறைக் கொள்கை குறித்து எடுத்துரைக்கையில், முந்தினவரும், பிந்தினவருமான கர்த்தரை தவிர வேறு தேவர்கள் கிடையாது என்றும், இஸ்ரவேலின் கடவுளும் அந்த ஏக இறைவன்தான் என்றும் குறிப்பிடுகின்றது.
“நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.  (ஏசாயா 44:6)
முந்தினவரும், பிந்தினவரும் அகிலங்களின் அதிபதியுமான கர்த்தரின் போதனைகளை பின்பற்றிய மக்கள், பரிசுத்த கடவுள் ஒருவரை மாத்திரம் வணங்கி வழிபட்டு வந்தததையும், இஸ்ரவேல் சமுதாய அந்நன்மக்களை கொடுமைப்படுத்தி வந்த பர்வோன் மன்னன் கர்த்தரின் தண்டனைக்கு உட்படும் போது, இஸ்ரவேல் மக்கள் நம்பிய ஈடுஇணையற்ற ஏகஇறைவனை நம்புவதாக கூறியதையும் உலகப்பொதுமறை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.
“இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது ”இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் ‘முஸ்லிம்’’ என்று கூறினான்.”  திருக்குர்ஆன் 10:90
ஆதியும், அந்தமுமற்ற சர்வ வல்லமை பொருந்திய கர்த்தர் ஒருவர் மாத்திரம் வணங்கி வழிபடத் தகுதியானவர் என்கின்ற ஏகத்துவ கொள்கையையே பைபிளின் பழைய ஏற்பாடு போதிக்கின்றது.
வானங்கள்பூமியை சிருஷ்டித்த கர்த்தர்
வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்த சர்வ வல்லமை மிக்க ஏகனான கர்த்தர், ‘நானே கர்த்தர் என்னைத் தவிர கர்த்தர் கிடையாது’ என்று கூறியதாக பழைய ஏற்பாட்டு நூலான ஏசாயா குறிப்பிடுகின்றது.
“வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது:  நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.” (ஏசாயா 45:18)
இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
‘வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?’ என்று கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 13:16)
மேலும், வானங்கள் பூமியை சிருஷ்டித்த கர்த்தரிடமே அவற்றின் அதிகாரம் உள்ளது என்பதை திருமறைக்குர்ஆன் பின்வருமாறு உறுதி செய்கின்றது.
“அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.”  (திருக்குர்ஆன் 25:2)
வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்து அதன் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்கும் நித்திய ஜீவனான  கர்த்தருக்கு அதிகாரத்தில் யாரையும், யாதையும் இணையாக்க கூடாது என்கின்ற ஓரிறைக் கொள்கையையே பைபிளின் பழைய ஏற்பாடு போதிக்கின்றது.
இயேசுவின் போதனைகள் என்று நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாடும், இயேசு பின்பற்றுமாறு வலியுறுத்திக் கூறிய பழைய ஏற்பாடும் இயேசு மாத்திரமல்ல இயேசுவுக்கு முன் சென்ற தீர்க்கதரிசிகளும் ஓரிறைக் கொள்கையை போதித்த முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்பதை நிரூபித்து நிற்கின்றன.
0 comments

கல்கி அவதாரம் எப்போதோ முடிந்து விட்டது, இந்திய பிராமணர் அதிர்ச்சி!

இறைவனின் கடைசி அவதாரம் என்று இந்துக்களால் விசுவாசிக்கப்படுகின்ற கல்கி அவதாரம் எப்போதோ இடம்பெற்று முடிந்து விட்டது,

எனவே இனி அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இந்தியில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் இந்தியாவில் வங்காள மாநிலத்தை சேர்ந்த சமஷ்கிருத பண்டிதரான பிராமணர் ஒருவர்.

இவரின் பெயர் பண்டித் வைத் ப்ரகாஷ. புத்தகத்தின் பெயரை தமிழில் இறை தூதின் வழிகாட்டி என்று சொல்லலாம். முஹமது நபிதான் வேதாகமங்களில் சொல்லப்பட்டு இருக்கின்ற கல்கி அவதாரம் என்று இந்நூலில் எடுத்துக் கூறி உள்ளார்.

வேதாகமங்களை பன்னெடும் காலம் ஆராய்ந்து கல்கி அவதாரம் குறித்து எழுதப்பட்ட இந்நூல் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் உள்ளது. எட்டு கல்விமான்கள் இந்நூலை படித்து இதில் கூறப்பட்டு இருக்கின்ற தகவல்கள் உண்மையானவைதான் என்று ஏற்றுக் கொண்டு உள்ளனர். இவர் இந்நூலில் முக்கியமாக தெரிவித்து இருக்கின்ற விடயங்களை ஏற்கனவே சில இணையத்தளங்களில் வெளிவந்த விதத்தில் எழுத்துக்கள்கூட பிசகில்லாமல் அப்படியே மீளப் பிரசுரிக்கின்றோம்.

01. வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

02. ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் "ஜஸீரத்துல் அரப்" என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

03. ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம். ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது.

04. அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

05. கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

06. கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

07. மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "மிஃராஜ்" இரவில், "புராக்" வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

08. அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

09. மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

0 comments

யார் இந்த புத்தர்?,புத்த மதம் ஓர் ஆய்வு

யார் இந்த புத்தர்?,புத்த மதம் ஓர் ஆய்வு

புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்று நாம் தெளிவாக அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில் புத்தர் நூல் எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் தன்னுடைய போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர் ஊக்குவிக்கவில்லை.

அவரைப் பின்பற்றியவர்களும் அவருடைய வாழ்நாளிலோ அல்லது அதனை அடுத்து வந்த காலகட்டத்திலோ இப்பணியில் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆதாரமும் இல்லை.

புத்தர் இறந்து ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு வைசாலியில் கூடிய பேரவையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் புத்தமத கொள்கைகளும் நெறிமுறைகளும் உருக்கொடுக்கப்பட்டன அதனால் அப்பேரவையில் கூடிய புத்த புத்த பிக்குகள் மெய்த்தன்மையையும் உள்ளீட்டையும் மாற்றியமைத்து விட்டார்கள் என (201.Secret Books of the Buddist)தீப்வம்ஸா,வின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

புத்தருடைய போதனைகளை நூலக்கம் செய்யும் பணி அப்போதிலிருந்து தொடங்கியது ஏறக்குறைய 400 ஆண்டுகாலம் அதாவது கி.பி.முதல் நூற்றாண்டு வரை இப்பணி தொடர்ந்தது கடைசியில் மீண்டும் கொன்னகத் திரிபுகளால் பாதிப்படைந்து அதனுடைய அடிப்படைக் கோட்பாடுகளே தடம் புரண்டு போயின எனவே புத்தர் நூல்கள் என்று எதனையும் எடுத்துக் கொண்டு விட முடியாது கனிஷ்கர் காலத்து இறுதி வடிவாக்கத்திலிருந்து தப்பிப் பிழைத்து நம்மை சேர்ந்துள்ள ஆகமங்களையே தவிர வேறு இல்லை அம்மூன்று நூல்களும் திரிபிடகம் என்றழைக்கப்படுகின்றன.

'திரிபிடகம் என்றால் பாலி மொழியில் ‘மூன்று கூடைகள்’ என்று பொருளாம்.

1. விநய பிடகம் - ஒழுக்கங்கள் நியமங்கள் பற்றியது. தொகுத்தவர் யாரேன்று அறியப்படவில்லை. கி.மு. 350 முதல் கி.மு.250 வரை பற்பல காலகட்டங்களில் உருவாகியுள்ளது.

2.ஸுத்த பிடகம் -வெற்றிக்கான வழிகள்,ஒழுக்க நியதிகளைப் பற்றியது . புத்தருடைய விளக்கங்களே பெரும்பாலும் உள்ளன. தொகுப்பாசிரியர், காலம் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் இல்லை.

3.அமிதம்ம பிடகம் -ஒழுக்க நியதிகள், புலன்களுக்கு அப்பாற்பட்ட நுண்ணிய விடயங்கள் தொடர்பானது.கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இறுதியில் எழுதப்பட்டது என்ற குறிப்பு மட்டும் உள்ளது.

கெளதம புத்தர் உண்மையிலேயே என்ன போதித்தார் என்பது நமக்குத் தெரியாது. புத்தருடைய போதனைகளாக இந்த நூல்கள் முன்வைக்கும் விஷயங்களைப் பற்றியே இனி பார்க்கப்போகிறோம்.

புத்த மதம் உலகில் நீண்டகாலம் தொடர்ந்து இன்றும் நிலைத்திருப்பதற்குக் காரணம்,ஆள்வோரையும் சமூக அமைப்பையும் எதிர்த்துப் போராடி வலிமையானதொரு பண்பாட்டு நெறியை நிலை நாட்டியதால் அல்ல! மாறாக, ஆள்வோர் எத்தகைய கொடுங்கோலர்களாக இருந்தாலும் அவர்க்கு பணிந்து கட்டுண்டு கிடக்க வேண்டும் என்று போதித்தது தான் காரணம்!

சரி விஷயத்துக்கு வருவோம். யார் இந்த புத்தர் ?

உலகில் தோன்றிய மற்ற தத்துவ ஞானிகள்,சிந்தனையாளர் களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்தொரு கோணத்தில் மனித வாழ்வை

அணுகியுள்ளர் .மனிதன் எதற்காக இவ்வுலகில் தோன்றினான்? அவன் எவ்வாறு வாழ வேண்டும் என்கிற விஷயங்களில் பக்கம் அவர் சிந்தனையைச் செலுத்தவே இல்லை. ஆகையால் இயல்பாகவே அவர் மனிதன் எத்தகைய முறைப்படி வாழ்ந்தால் தனக்கும் தான்சார்ந்த மனித இனத்துக்கும் பயன் சேர்க்க முடியும் என்பது குறித்து எங்குமே பிரச்சாரம் செய்யவில்லை.

மனித வாழ்வில் தோன்றுகின்ற சோதனைகளுக்கும் மற்றங்களுக்கும் என்ன காரணம்? குழந்தைப் பருவம், வலிபம்,முதுமை,ஆரோக்கியம்,நோய், பிறப்பு,வருத்தம், கவலை,பிணி,மூப்பு இவை போன்ற மாற்றங்களுக்கான மூல காரணம் என்ன? இவற்றிலிருந்து விடுதலை அடைவது எப்படி?- இது பற்றி மட்டுமே அவர் சிந்தித்தார். மனிதனுடைய தனி நபர் -சமூக வாழ்வில் குறுக்கிடும் ஏனைய பிரச்சனைகளின் பக்கம் அவர் கவனம் செலுத்தவே இல்லை.

பல்லாண்டு காலம் சிந்தித்தும் தியானத்தில் ஆழ்ந்தும் இக்கேள்விக்கு விடை காண அவர் முயற்சித்தார். விடையாக அவர் கண்டது என்னவெனில் வாழ்க்கை என்பதே ஒரு சோதனை.அதில் மனிதன் சிக்கிக் கொண்டுள்ளான். பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படுகின்ற எல்லா மாற்றங்களும் அச்சோதனைகளின் வடிவங்களே! மனிதப் பிறப்புக்கென தனிப்பட்ட எந்தவோரு காரணமும் கிடையாது.

வீணாகவே அவன் படைக்கப்பட்டுள்ளான்.துன்பங்களில் சிக்கி இன்னலுறுவதைத் தவிர அவன் இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. மனிதன் வாழ்வதற்குரிய இடமல்ல இவ்வுலகம். உண்மையில் அவனுக்கு இங்கு எந்த இன்பமும் மகிழ்ச்சியும் கிடையாது.ஒவ்வோர் இன்பத்தைத் தொடர்ந்தும் துன்பம் வருகிறது. மகிழ்ச்சியின் பின்னால் சோகம் மறைந்துள்ளது.பிறப்பின் பின்னால் இறப்பு ஒட்டிக் கொண்டுள்ளது.இத்தகைய மாற்றங்கள் ஒன்றையடுத்து ஒன்றாகத் தொடர்கின்றது. ஒவ்வொன்றும் ஒரு துன்பமாகவே உள்ளது.

ஆசை எனும் தளையிலிருந்து அவன் விடுபடாத வரை அவன் இறந்து கொண்டேயிருப்பான். மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருப்பான்.இதிலிருந்து விடுதலையை எப்படி அடைவது? பெளத்தம் தரும் பதில் ‘நிர்வாணம்’ வாழ்க்கை என்பதொரு துன்பம். அத்துன்பத்திருக்கு ஆசையே காரணம்.இல்லாமை, இருப்பை உணராமையில்தான் ஆசையிலிருந்து விடுபடுவதற்கான வழி இருக்கின்றது.ஆசையையும் பற்றையும் முற்றிலும் அறுத்தெறிந்துவிட வேண்டும்.

உலகத்தோடு எந்தவிதமான தொடர்பையும் மனிதன் வைத்துக் கொள்ளக் கூடாது .எதையாவது நேசிப்பது,எதையாவது எதிர்ப்பது,எதன் மீதாவது பிரியம் வைப்பது -எதுவுமே இருக்கக் கூடாது. பாசம்,அன்பு,பிரியம் அனைத்தையும் உள்ளத்திலிருந்து துடைத்துவிட்டு உலகோடு எத்தொடர்பும் கொள்ளதிருக்க வேண்டும். இத்தொடர்புகள் அவன் மறுபடியும் பிறக்கக் காரணமாய் அமைகின்றன. இவற்றை அறுப்பதால் இருப்பிலிருந்து விடுபட்டு ‘இல்லாமை’ நோக்கி நகர முடியும்.இதுதான் ‘நிர்வாணம்’ இந்த நிர்வாண நிலையை மனிதன் அடைய வேண்டும் என்றே பெளத்தம் போதிக்கின்றது.

நிர்வாண நிலையை எவ்வாறு அடைவது?

நிர்வாண நிலையை அடைய எட்டுக் கட்டளைகளான. (பாலி மொழியில்)

1.சம்மாதிட்டி
2.சம்மாசங்ப்போ
3.சம்மா வாசா
4.சம்மா கம்மந்தோ
5.சம்மா ஜீவோ
6.சம்மா வாயா மோ
7.சம்மா ஸதி
8.சம்மா சமாதி
எட்டுக் கட்டளைகளின் பொருள் என்ன? 

என்பதை பார்ப்போம்.

1.நல்ல நோக்கம் (சம்மாதிட்டி)-நான்கு அடிப்படை மெய்ம்மைகளையும் நன்கு உணர்ந்திருத்தல்.

(நான்கு மெய்ம்மைகள் என்றால் 1.துன்பம் 2.துன்பத்திற்கான காரணம்,3.துன்பத்தை நீக்கும் தீர்வு 4.துன்பத்தை நீக்கும் தீர்வுக்கான வழிமுறை )

2.நல்ல உறுதி (சம்மாசங்கப்போ)-ஆசைகளைத் துறப்பதற்கான நெஞ்சுரம்,மற்றவர்களுக்கு தீது பயக்காமல் உரியினங்களுக்கு துன்பமிழைக்காமல் விலகி இருக்கும் தன்மை.

3.நல்ல வாக்கு (சம்மா வாசா)-பொய்,புறம்,கோள்,வசவு மொழியினின்றும் விலகி இருத்தல்.

4.நல்ல செயல்(சம்மா கம்மந்தோ)-தீய நடத்தை,உயிர்க் கொலை,மோசடியிலிருந்து விலகி இருத்தல்.

5.நல்ல ஜீவனம்(சம்மா ஜீவோ)-முறையான வழிகளில் வருமானம் ஈட்டல்

6.நல்ல முயற்சி(சம்மா வாயா மோ)-தர்ம கட்டளையின்படி செயல்படுதல்.

7.நல்ல நினைவு(சம்மா ஸதி)-கடந்தகால செயல்களை நினைவிலிருத்தல்

8.நல்ல தியானம்(சம்மா சமாதி)-சுகம்,சந்தோஷத்தை விட்டு விட்டு இல்லாமை எனும் நிர்வாண நிலையை முன்னோக்கியிருத்தால்.

அஷ்டாங்க மார்க்கத்தை செயற்படுத்த பத்து கட்டளைகளை புத்தர் அறிவித்துள்ளார்.ஐந்து வலியுறுத்தப்பட்டுள்ளன.மற்ற ஐந்தும் கட்டாயமாக்கப்படவில்லை.

1.உயிர்க்கொலை புரியாமை

2.களவு செய்யாமை

3.காமம் கொள்ளமை

4.பொய் சொல்லாமை

5.மது அருந்தாமை

6.தகாத நேரத்தில் உணவு அருந்தலைத் தவிர்த்தல்

7.ஒழுக்கமற்ற செயல்கள் வேடிக்கை விளையாட்டுகளைத் தவிர்த்தல்.

8.நறுமணம்,மலர்கள்,ஆபரண அலங்கரிப்பைத் தவிர்த்தால்.

9.பஞ்சணைகளை,ஆடம்பர நடைமுறைகளைத் தவிர்த்தல்.

10.பொன்னையும் வெள்ளியையும் வைக்காதிருத்தல்.

இந்த ‘எட்டும்’ ‘பத்தும்’ தாம் பெளத்த மத தத்துவத்தையே விளக்கின்றன. வருமானம், சமுதாயம் தொடர்பாக தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு பெளத்த மதம் காட்டும் வழிகாட்டுதல்கள் யாவும் ‘சுய மறுப்’பை’யும் உலகு துறப்பையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. சுயத்தை மறுக்காமல் அதனுடைய இலக்கான நிர்வாணத்தை அடைய இயலாது.

ஆகையால் அதற்காக பல்வேறு கடினமான பயிற்சிகளை பெளத்தம் அறிமுகப்படுத்தியது. அழகுணர்வு மனதை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காக தாடி,மீசை,தலை முடிகளைப் பிடுங்கிப் பிடுங்கியே அகற்றுவது; நின்று கொண்டே இருப்பது; முள்படுக்கை,ஆணிப் படுக்கைளையே பயன்படுத்துவது; உடம்பில் மண்ணையோ சேறையோ பூசிக் கொள்வது; இன்னும் இது போன்ற ‘தொல்லை’களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் வயிலாக ஆன்மாவை நிர்மூலமாக்குவது பற்றை ஒன்றும் இல்லாமல் செய்வது(பெளத்தம் போதிக்கும் இவை போன்ற பயிற்சிகளை Dialogues of Budha நூலில் காணலாம்)

இது எதோ முற்றும் துறந்த புத்தபிக்குகளுக்கு உள்ள பயிற்சி என்று நினைத்து விடாதீர்கள்.

சாதாரண வாழ்க்கைக்கும் இதே போன்ற வழிமுறை களையே பெளத்தம் கடைப்பிடிக்கச் சொல்கின்றது. பக்கம் பக்கமாக அவை விரிவடைகின்றன.

சாராம்சத்தை மட்டும் இங்கு காண்போம்.

நான்கு விஷயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும்.

1.ஆண்-பெண் கலவி கூடாது.

2.புல்லைக் கூட திருடக் கூடாது

3.உயிருள்ள சின்னசிறு உயிர்க்கும் தீமை பயத்தலாகாது.

4.இயற்கைக்கு மற்றமாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகது.

துறவற வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு புத்தாடைகளை அணியலாகாது. குப்பைகளில் வீசப்பட்ட பழந்துணிகளையும் பிணங்களைப் போர்த்திய ஆடைகளையும் பொறுக்கி அவற்றை விரிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

(ஒர் இளவரசி புதைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த புத்தர் புதை குழியைத் தோண்டி உடலைச் சுற்றியிருந்த துணியை நீக்கி அருகிலிருந்த ஒரு வாய்க்காலில் கழுவித் தோய்த்து ஆடையாக்கிக் கொண்டார்)

(காண்க:நூல்:Sant Hilaire,Budha and His Relidion)

இத்தகைய கந்தலாடைகளும் மூன்றுக்கு மேல் இருக்கக் கூடாது. வருமானம் ஈட்ட எந்த முயற்சியும் செய்யக் கூடாது. பிக்ஷைப் பாத்திரமேந்தி (திருவோடு) வீடு வீடாகச் சென்று பிக்ஷை எடுக்க வேண்டும். பெளத்தைப் பொறுத்தவரை இதுவே தூய உணவாகும்.

(பிக்‌ஷை எடுப்பதினால்தான் ‘பிக்‌ஷு’(பிக்கு) என்றழைக்கப்படுகிறார்கள்.புத்தரும் பிக்‌ஷை எடுத்தே வாழ்நாளைக் கழித்தார். தம்மை மஹா பிக்‌ஷு என அழைத்துக் கொண்டார்.)

தங்குவதற்காக வீடு எதையும் கட்டிக் கொள்ளக் கூடாது. வனாந்தரங்களில் மர நிழல்களிலேயே உறைய வேண்டும். நோயுற்றால் நிவாரணமடைய மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறுநீர் கழிவதே போதுமான நிவாரணம் ஆகும். உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளக் கூடாது. தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குளித்துக் கொள்ளலாம்.

பணத்தை கைவசம் வைத்துக் கொள்ளவே கூடாது. வியாபாரம். வணிகம், கொடுக்கல்-வாங்கல்,தொழில் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பொன்னையோ வெள்ளியையோ பயன்படுத்தக் கூடாது.

(இங்கு (சவூதியில்) புத்த மதத்தை பற்றுடன் பின்பற்றக்கூடிய இலங்கையை சேர்ந்த சிங்கள நண்பர்களை சந்தித்து ஆய்வுக்காக கதைத்து கொண்டிருக்கும் போது மேலே கூறப்பட்ட சட்டதிட்டங்களை பின்பற்ற முடியுமா? என்று கேள்வியை வைத்தேன் அதற்கு அவர் சொன்ன ஒரே

பதில் இன்றைக்கு புத்தர் சொன்னதை அப்படியே பின்பற்றி வாழ நினைத்தால் உயிர் வாழ முடியாது என்றார்.)

பெளத்த மதத்தை பொருத்த வரை அடிப்படை ஆதார விஷயங்களைப் பொறுத்தவரை பெளத்தம் அடிமுதல் நுனிவரை ஒரு தவறான கோட்பாடகவே காட்சியளிக்கின்றது.தவறான ஒரு கோணத்திலிருந்து அது மனித வாழ்வை அணுகியுள்ளது.தவறான இலக்கைக் குறிக்கோளகக் கொண்டுள்ளது.தவறான ஒரு பதையை,அதை அடையும் வழியாகச் சுட்டிக் காண்பிக்கிறது.

உலக நிகழ்வுகளையும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டு புத்தர் திகைத்துக் குழம்பிப் போனார். அதற்கான உண்மையான காரணம் என்னவென்று அவர் தேடவில்லை.அழமாக உள்ளிறங்கி அலசிப் பார்க்கவில்லை.உயர் குறிக்கோளை நோக்கி நெஞ்சுரத்தோடு பயணிக்கவில்லை.மாறாக மேலோட்டமாக மனிதப் பிரச்சினைகளை அணுகிப் பார்த்து வாழ்க்கையே வீண் என்னும் எளிய முடிவுக்கு விரைவில் வந்து விட்டார்.

மனிதனுடைய அறிவு,உணர்வு,சிந்தனை,பற்று,விருப்பம்,ஆசை,

உடற்திறன்கள் என்று அவனிடமுள்ள அனைத்துமே அவனைத் துன்பத்தில் தள்ளுகின்றனவேன்றி வேறு எச்செயலுக்கும் பயன்படுவதில்லஇவ்வுலகின்களஞ்சியங்கள்.செல்வம், பண்பாடு,நாகரிகம்,அரசியல்,

அரசாங்கம்,தொழில்,வணிகம் என அனைத்தும் பயனற்றவையே! ஆகையால் மனிதன் தன்னையன்றி இவ்வுலகிலுள்ள வேறு எதனோடும் எத்தொடர்பும் கொள்ளக் கூடாது என்கிறார்.

உலகத் துன்பங்களைக் கண்டு பீதியடைந்து உலகத்தையே துறந்து விட்டவன் சமூகத்தோடும் கூட்டமைப்போடும் உள்ள அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டு தன்னுடைய ‘வெற்றி’யை மட்டும் இலக்காக்கிக் கொண்டவன், அந்த’வெற்றி’அல்லது ’நிர்வாண’ நிலையை அடைவதற்காக-உலகத்துக்குள் அல்ல-உலகத்துக்கு வெளியே வெகுதூரம் அழைத்துப் போகின்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் தன்னுடைய சொந்தக்காரர்கள்,தான் சார்ந்திருக்கின்ற சமூகம்,

தன்னுடைய நாடு,தன் சக மனிதர்களுடைய நலன்களுக்காக வீரத்தோடு பாடுபடுவான் என்று எதிர்பார்க்க முடியுமா?

சமூகத்தைச் சீர்திருத்துவதற்காகவும் முன்னேற்றுவதற்காகவும் தன்னுடைய உடற்திறமைகளையும் அறித்திறனையும் செலுத்துவான் என்றோ,வைராக்கியம் செறிந்த திடநெஞ்சோடு தன்னுடைய பொருளையும் ஆன்மாவையும் அதில் ஈடுபடுத்துவான் என்றோ,அநீதி, அராஜகம்,அக்கிரமம்,அட்டுழியம்,வரம்புமீறல்,வழிகேடு போன்ற தீமைகளுக்கெதிராகப் புறப்பட்டு போர் தொடுத்து உலகில் நீதியையும் நேர்மையையும் அமைதியையும் சமாதனத்தையும் சத்தியத்தையும் வாய்மையையும் நிலை கொள்ளச் செய்வான் என்றோ இயற்கை நியதிகளின்படி எல்லாச் செயல்களிலும் மனிதன் எதிர் கொண்டே தீர வேண்டிய இன்னல்கள்,இடையூறுகளை ஆண்மை யோடு எதிர்கொள்வான் என்றோ எதிர்பார்க்க முடியுமா?

இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைப்படி அதற்கு அனுமதியும் இல்லை.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய அனைத்து சீர்திருத்தவாதிகளையும்,தூதர்களையும் இஸ்லாம் கண்ணியப்படுத்தியது ஒரு இடத்தில் கூட முஹமது நபி(ஸல்) அவர்கள்

மோஸஸ் (மூஸா) பொய் சொல்லிவிட்டார் இயேசு (ஈஸா) பொய் சொல்லி விட்டார் என்று ஒரு இடத்தில் கூட சொன்னதில்லை.

மாறாக அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கண்ணியவன்கள் மீது இட்டுக்கட்டி பொய் சொல்லி விட்டார்கள் என்றே சொன்னார்கள் நீங்கள் திறந்த

மனதோடு நபிமொழிகளையும் குர்ஆனையும் ஆய்வு செய்தால் இவைகள் தெரிய வரும்.

இந்துத்துவவாதிகள்,பின்நவீனத்துவாதிகள்,கம்யூனிஸ்ட்கள்.

முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இவர்கள் அனைவரும் தங்கள் எழுத்திலும் மேடை பேச்சிலும் புத்தரையும், சூஃபிஸ கொள்கையும் புகழ்வதை பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.ஒன்றுகொன்று முரண்பட்ட கொள்கையைச் சார்ந்தவர்கள் ஒரு இஸத்தை புகழும் போது இயல்பாகவே அந்த கொள்கையில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்று அறிவதற்கு ஆர்வம் ஏற்படும் அப்படித்தான் புத்த மத கொள்கைகளையும் சூஃபித்துவத்தையும் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.

அதற்கு பிறகு பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

சூஃபிஸமும்,புத்த மதமும் இயங்குவியல் தன்மையற்ற துறவறத்தை போதிக்கின்ற மற்ற இஸங்களை நடைமுறையில் கொண்டு வர உழைக்கின்ற மாற்று கொள்கையுடைவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத மதங்கள் என்பதை புரிந்துக் கொண்டேன்.

இஸ்லாத்தையும் அதன் உண்மை அடிப்படைக் கொள்கைகளான குர்ஆன் ஹதீஸ்களையும் மற்ற கொள்கையை சார்ந்த அனைவரும் கடித்துக் குதறுகிறார்களே ஏன்? பிராண்டி எடுக்கிறார்களே ஏன்? இதற்கும் பதில் கிடைத்தது ஆம் இஸ்லாம் இயங்குவியல் மார்க்க்கம் இவர்கள் செயல்படுத்த துடிக்கிற கொள்கைகளுக்கு தொந்தரவாக எதிராக நிற்கின்ற மார்க்கம்.

இதை நான சும்மா நுனிப்புல் மேய்ந்துவிட்டு சொல்லவில்லை வரலாறுகள் இதற்கு சாட்சி பகர்கின்றன.

சரி விஷயத்துக்கு வருவோம்

புத்த மதம் தன்னுடைய இயங்குவியலற்ற தன்மையால் உலகமெங்கும் பெயர் சொல்லும்படியான பண்பாட்டையோ கலாச்சாரத்தையோ பெளத்தத்தால் ஸ்தாபிக்க இயலவில்லை.வேறொரு பண்பாட்டின் மீது வீரியமான தாக்கத்தை ஏற்ப்படுத்துமளவு வலிமை கொண்டதாக மாறவும் இயலவில்லை.பெளத்தம் சென்றடைந்த நாடுகளில் ஒழுக்கவாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான்! எனினும் அந்நாடுகளின் சமூக அமைப்பையோ அரசியல் அமைப்பையோ பெளத்தம் மாற்றி அமைக்கவில்லை;அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை.

உலகின் பல்வேறு இடங்களுக்கும் பெளத்தம் பரவியுள்ளது.மத்திய ஆசிய நாடுகளிலும் கிழக்ககாசிய நாடுகளிலும் பெளத்தம் பரவியதைப் போன்று வேறு சமயநெறிகள் பரவவில்லை.கவனத்தைக் கவரும்படி பெருந்திரளான மக்கள் பெளத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஏதேனுமொரு சமூகத்தின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்களை பெளத்தம் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ சாதனை ஒன்றையேனும் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ வரலாறு நெடுக தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்காது.

நேர்மாற்றமாக வேறேதேனும் சமயத்தோடு அல்லது பண்பாட்டோடு மோதுகின்ற சூழல் எங்காவது ஏற்பட்டால் பெளத்தம் தோற்றுப் போயிருப்பதையே நாம் காண்கிறோம். பெளத்த மதம் இந்தியாவில் தோன்றியது.நீண்டதொரு காலம் இங்கேயே பல்கிப் பெருகியது.கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலும் நான்கில் மூன்று பகுதியினர் அதாவது ஏறக்குறைய மூக்கால் பாகம் பெளத்தத்தையே பின்பற்றி வந்தனர்.கி.பி. நான்காம் நூற்றாண்டில் ‘பாஹியான்’ இந்தியாவிற்கு வந்த போதும் இங்கு மக்களிடையே பெளத்தம் செல்வாக்கு பெற்றிருந்தது.

ஆனால் அதன்பிறகு பிராமண மதம் தலைதூக்கியபோது ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குள் பெளத்தம் சுத்தமாக துடைத் தெறியப்பட்டுவிட்டது.இன்றைக்கு இவ்வளவு பெரிய நாட்டில் மிகக்குறைவான பெளத்தர்களே காணப்படுகிறார்கள்.

அவ்வாறே அசோகர் காலத்தில் ஆஃப்கானிஸ்தானத்தில் பெளத்தம் பரவியிருந்தது.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காபூலை ஆண்ட மன்னர் மீனாந்தர் பெளத்தத்தைத் தழுவியிருந்தார்.ஆனால் ஆஃப்கானில் இஸ்லாம் அடியெடுத்து வைத்ததும் ஒரு கணம்கூட அதனை எதிர்கொள்ள பெளத்தத்தால் இயலவில்லை.

’தாவோயிசம்’ உடைய ஒத்துழைப்பு உதவியின் கருணையினால் சீனாவில் பெளத்தம் பரவியது.இல்லையென்றால் கன்பூஸியஸின் சமயநெறி அதை ஒழித்தே விட்டிருக்கும்.

‘ஷிண்டோ’ சமயநெறியை அட்ஜெஸ்ட் செய்துகொண்டு கொடுத்தும் பெற்றும்தான் ஜப்பானில் அதனால் நிலைகொள்ள முடிந்தது.தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அடிப்படைக் கோட்பாடுகளையும் அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எவ்விடத்திலும் அரசமைப்பையோ சீரழிந்துபோன சமூக அமைப்பையோ எதிர்த்து அது குரல் கொடுத்ததே கிடையாது.அரசியலுக்கு பெளத்தத்தில் இடமே கிடையாது.அரசை மற்றும் முயற்சிகளுக்கு பதிலாக, நல்ல அரசோ தீய அரசோ அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து ஒழகவேண்டும் என்றே பெளத்தம் போதிக்கின்றது.தீய சக்திகளுக்கு எதிராகவும் வாய் திறவாது கட்டுப்படவேண்டும் எனும் போதனைகளின்காரணமாக என்ன தான் கொடுமைப் படுத்தப்பட்டாலும் பெளத்தர்கள் அதிருப்திப் பெருமூச்சு விடுவதில்லை.
மற்ற பிறவிகளில் செய்த தீமைகளின் விளைவுகள் தற்போது துன்பங்களாகத் தொடருகின்றன.கொடுமைப் படுத்துவோர் மீது யாதொரு குற்றமும் கிடையாது.நாமிழைத்த தீவினைகளின் பலாபலன்களே அவை! அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.(நூல்:Buddha and His Religion.P.150,151.)

ஒரு தீய அரசுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? அதிருப்தி அடைவதற்குப் பதிலாக இத்தகைய சமயங்களை அவை ஆதரித்து போற்றவல்லவா செய்யும்? தாம் செய்யும் தீமைகளுக்கு இவர்கள் எதிர்த்து முனகக் கூடமாட்டார்கள் என்பதால், அரசுகள் பெளத்தத்தை வரவேற்கின்றன அதே நேரத்தில், தடை செய்யாமல் கொடுமைகளைப் புரிகின்றன; லஞ்ச -லாவண்ய நிர்வாகத்தைத் தொடர்கின்றன.

பெளத்த மதம் பரவத்துவங்கிய உடனே மகத நாட்டு மன்னர் பீமபஸாரன் பெளத்தத்தைத் தழுவிக் கொண்டார்.பெளத்தத்துக்கு ஆதரவாக அரசாங்க ஆணையையும் வெளியிட்டார்.தொடர்ந்து அவருடைய மகன் அஜித்த சத்ருவும் பெளத்தத்தின் தீவிர ஆதரவாளாராக மாறினார். கோசல நாட்டு மன்னர் அக்னிதத்தன் வலியச் சென்று தன் நாட்டில் பெளத்தத்தை வரவேற்றார்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இன்னோரு வலிமைகொண்ட மன்னரான ஹரிஷ் பெளத்தத்துக்கு எல்லாவகையிலும் வீறு கொண்டு துணை புரிந்தார். பிராமணர்கள் அவரைக் கொலை செய்யவும் சதி செய்தனர்.
இந்திய அல்லாது திபெத்,மங்கோலியா நாடுகளில் கிப்லாய் கான் பெளத்தத்துக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.பெளத்தம் பரவுவது அரசியல் ரீதியாக தனக்கு நன்று என்பதை அவர் உணர்ந்தர்.பெளத்த சமயப் பிரச்சாரகர்களை சீனாவுக்கு மன்னர் மங்க்டே வரவழைத்தார். இவ்வாறாக பல மன்னர்கள் உதவி ஒத்தாசை புரிந்துள்ளதை வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
இறுதியாக ஒன்று
ஆக நான் என்ன நோக்கத்திற்காக ஆய்வு செய்தேன் என்பதை தெரிவித்து விட்டேன் இன்னும் வேறு கோனங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.

புத்த மதம் இயங்குவியல் மதமா? என்ற கோனத்தில் செய்த ஆய்வு இதோடு முற்று பெறுகிறது.

புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்றுநாம் தெளிவாக அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில் புத்தர் நூல் எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் தன்னுடைய போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர் ஊக்குவிக்கவில்லை.

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger