by:
Roomy Abdul Azeez
இஸ்லாம் உருவானது அரேபிய மண்ணில். பல தூதர்கள்
பிறந்ததும் இதே மண்ணில். இப்னு சவுதினால் ஒன்றிணைக்கப்பட்ட பிராந்தியங்கள் “சவுதி அரேபியா” எனும் பெயரில் இப்னு
சவுத்தின் பரம்பரை மன்னராட்சியின் கீழ் ஆளப்பட்டடு வருகிறது. மக்கா, மதீனா போன்ற புனிதஸ்தலங்களை
தன்வசம் கொண்டுள்ள இந்த தேசம் ஹஜ்ஜிற்காக வரும் முஸ்லிக்களிற்கு அளப்பரிய சேவைகளை
செய்து வருகிறது. இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்கு பெரும் செல்வங்களை
செலவளிக்கிறது. உலகில் துன்புறும் முஸ்லிம்களிற்கு பற்பல உதவிகளை செய்து வருகிறது.
இந்த தேசத்தின் மொத்த மக்கள் தொகையில் “ஷீயாக்கள்” 14% என்பது சற்று புருவங்களை
உயர்த்த வைக்கும் புள்ளி விபரம் தான். ஆனால் உண்மையும் அதுதான். சவுதி அரேபியாவின்
கிழக்கு பிராந்தியமான Qatif, Al-Hasa,
Damam போன்ற
பிரதேசங்களில் பெருவாரியாகவும் Madina வில் சொற்ப அளிவிலும்,
Najran பிரதேசத்திலும்
வாழ்கின்றனர். நஜ்ரானில் வாழும் ஷியாக்களிற்கு Yemen எல்லையில் வாழும்
ஷியாக்களுடன் நேரடி தொடர்புகள் உள்ளன. இவை இரகசியமான பாதாள செயற்பாடுகளுடனும்
தொடர்புடையவை.
1932 ல் உருவாக்கப்பட்ட சவுதி
இராஜ்ஜியம் ஸலபி கொள்கைகள் சார்ந்த ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஷியாக்கள்
வாழும் பிரதேசங்களிற்கான உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு இவர்களால்
புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. வருகின்றன. பொலிஸாரின் ஒரு பக்க சார்பான அதீத
அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச தொழில் வாய்ப்புக்கள் என
பல விடயங்களிலும் பாரபட்சத்திற்கு இவர்கள் உள்ளவதும் கவனிக்கத்தக்க விடயம். இவை
இன்றைய நிலையில் சவுதி அரேபிய பற்றியும் ஷியாக்கள் பற்றியும் சுருக்கமான பார்வை..
சவுதி அரேபியாவில் வாழும் ஷியாக்கள் சவுதி
அரேபிய சுன்னி முஸ்லிம்களை விடவும் இரு மடங்காக குழந்தைகளை பெறுகின்றனர். ஒரு
குடும்பத்தில் குறைந்த பட்சம் 05 குழந்தைகளும் சராசரியாக 09 குழந்தைகளும் காணப்படுகின்றன.
இந்த நிகழ்வு பல தசாப்தங்களாக சப்தமில்லாமல் நிகழ்ந்து வருகிறது. ஷியாக்கள் தங்கள்
குழந்தைகளில் ஒரு ஆண் பிள்ளையை கர்பலாவிற்காக நேர்ச்சை வைத்து விடுகின்றனர். இந்த
குழந்தை வீதியில் வளர்ந்து வரும் முரட்டு சுபாவமிக்க உரமான ஒருவனாக உருவாகின்றான்.
இருந்து விட்டு வீட்டுக்கு வந்து தாய் தந்தையரை பார்க்கும் அளவிற்கு இவர்கள்
தெருமுனை மனிதர்களாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எதற்காக..?,
என்றோ ஒரு நாள் இந்த சவுதியர்கள்
விசுவாசிக்கும் அமெரிக்க தெய்வம் இவர்களிற்கு எதிராக திரும்பும். அந்த நாளில் சவுதி
அரேபியாவின் கிழக்கு பிராந்தியம் பிரிவினை கோரி நிற்கும். அப்போது இந்த தெரு
மனிதர்கள் ஷியாக்களின் தலைமையின் ஷஹாதத் (?) போராளிகளாக மாறுவர்.
மாற்றப்படுவர். இவர்களால் திறந்து விடப்படும் களத்தை சமாளிப்பது அவ்வளவு இலேசானதாக
இருக்கப்போவதில்லை.
ஈரானும், இஸ்ரேலும் அரசியலிலும், இராணுவியலிலும் முரண்படலாம், ஏன் மோதிக்கொள்ளலாம். ஆனால்
சுன்னத் வல் ஜமாத்தினரை (சுன்னி) இல்லாதொழித்தல் என்ற புள்ளியில் இவர்கள்
ஒன்றிணைகின்றனர். சவுதியை துண்டாடும் ஷியோனிஸ கனவிற்கு நிகரானதே கும்மின் அயாத்துல்லாக்களின்
கனவுகளும். சவுதி அரேபிய அரசு இந்த தெருமுனை ஷியாக்களை பற்றி அதிக கவனம் செலுத்த
தவறும் பட்ச்த்தில் அதன் விலை மிக மிக அதிகமானது. இப்போது தெஹ்ரானின் பல கட்டளைகள்
தமமாமில் அமுலாகின்றன. அவை இராணுவ சப்பாத்துக்கள் போட்டு நடக்காததால் எம்மில்
பலரும் இதனை உணர்வதில்லை.
சவுதி அரசு ஹிஜாஸ் பிராந்திய உட்கட்டமைப்பை
புறக்கணிக்கும் அதே பொழுதுகளில் தான் அங்கு வாழும் ஷியாக்கள் தங்களின் இராணுவ
அரசியல் உட்கட்டமைப்புக்களை வலுவாக வளர்த்து வருகின்றனர். நாளை ஷியாக்களின் மஹ்தி
இராணுவம் ஈரானில் இருந்தோ லெபனானில் இருந்தோ வரப்போவதில்லை. வெறி கொண்ட அநத
இராணுவம் ஹிஜாஸின் தெருக்களில் இருந்து தான் அணிவகுக்கும். வெள்ளம் வரும் முன்
அணையல்ல துர்கர்ணைனின் இரும்பு சுவர்கட்ட சவுதி அரசு இப்போதே தயாராகுமா?..
Post a Comment