அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள ‘ராணுவ ஆய்வாளர்கள்’ ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் போய் இறங்கிய நேரத்தில், ஈரான் விமானப்படைக்கு சொந்தமான கார்கோ விமானங்கள், பாக்தாத் நகர புறநகரப் பகுதியில் உள்ள விமானத் தளம் ஒன்றுக்கு ஷட்டில் அடித்துக் கொண்டிருந்தன.
ஈராக்குக்குள் நடக்கும் ஈரானிய விமான நடமாட்டங்கள், நிச்சயம் அமெரிக்கர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அமெரிக்கர்கள் அதுபற்றி மூச்சே விடவில்லை.
தற்போது ஈராக்கிலும், சிரியாவிலும் நகரங்களைப் பிடித்தும், ஜோர்தான் மற்றும் சவுதி எல்லைகளை நெருங்கியும் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய எழுச்சியும், கிடைத்துவரும் வெற்றிகளும், மற்ற நாடுகளின் ராஜதந்திர நிலைப்பாடுகளை எல்லாம் தலைகீழாக மாற்றிவிட்டன
முன்பு தமக்கிடையே முறுகிக் கொண்டிருந்த நாடுகளிடையே (உதாரணமாக அமெரிக்காவும், ஈரானும்) ஐ.எஸ்.ஐ.எஸ். பெற்றுவரும் வெற்றிகள் ஒருவித அன்டர்ஸ்டான்டிங்கை ஏற்படுத்தி விட்டன.
இதனால், ஒரே நாட்டுக்குள் (ஈராக்) ஒரே நேரத்தில், அமெரிக்க ராணுவ விமானங்களும், ஈரானிய ராணுவ விமானங்களும் இறங்கி, ஏறுகின்றன.
அமெரிக்க ராணுவ விமானங்கள், ‘ராணுவ ஆலோசகர்களை’ பாக்தத்தில் கொண்டுவந்து இறக்குவதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி. ஈரான் நாட்டு விமானங்களுக்கு அங்கே என்ன சோலி? அவர்கள் ஈராக்குக்குள் ஏதும் செய்வதாக வெளிப்படையான அறிவிப்பு இல்லையே?
அங்குதான் இருக்கிறது, இந்த யுத்தத்தின் திரைமறைவு விளையாட்டு. கடந்த மூன்று தினங்களாக, தினமொன்றுக்கு குறைந்தது இரு ஈரானிய கார்கோ விமானங்களாவது, பாத்தாத் அருகே தரையிறங்குகின்றன. அவை லேன்டிங் செய்தவுடன் ஈராக்கிய ராணுவ ஹெவி ட்ரக்குகள் விமானங்களை சூழ்ந்து கொள்கின்றன.
ஒவ்வொரு விமானத்தில் இருந்தும் சராசரியாக 150 டன் ராணுவ சப்ளைகள் இறக்கப்படுகின்றன. இப்படி, கடந்த 3 தினங்களில் மட்டும் 1,000 டன் ராணுவ சப்ளைகள் ஈரானில் இருந்து வந்து இறங்கியதாக தெரிகிறது.
ஈரான்மீது அமெரிக்க பொருளாதாரத் தடை உள்ளது. ஈரானிய ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா, மற்றும் ஐ.நா. தடை அமலில் உள்ளது.
ஆனால், தற்போது ஈராக்கில் ரகசியமாக நடக்கும் ஈரானிய ராணுவ சப்ளை, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ‘ராணுவ ஆய்வாளர்களின்’ மூக்கருகேதான் நடக்கின்றன. அப்படியிருந்தும் அமெரிக்கா தும்மல் போடுவதில்லை.
யுத்தம் என்று வந்துவிட்டால், ராஜதந்திர விளையாட்டின் விதிமுறைகளே மாறிவிடுகின்றன!
+ comments + 2 comments
ஈரான் அமேரிக்கா இஸ்ரேல் மூன்றும் ஒரு கூட்டு அவர்கள் உலகத்தை ஏமாற்றுகிறார்கள்
ஒன்னும் புடுங்க முடியாது இனி.செய்த கொடுமைக்கு சேர்த்து அனுபவிங்க
Post a Comment