சிரியா, ஈராக் பகுதிகளை இணைத்து “தனி இஸ்லாமியநாடு” என பிரகடனம் செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.!


மொசூல்: சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து தனி இஸ்லாமிய நாடு என்று பிரகடனம் செய்துள்ளது சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு. இதன் கலிபாவாக (மன்னராக) அபு பக்கர் அல் பக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது. ஷியா முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலக்காகும். இந்த அமைப்பில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் ஏராளாமானோர் உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சர்வதேச நாடுகள் எந்த ஒருநடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வந்தது.
ரஷியா, அமெரிக்கா 
இந்த நிலையில் திடீரென ஈராக்குக்கு ஆதரவாக ரஷியா ஜெட் போர் விமானங்களை அனுப்பி தாக்குதலை நடத்த உதவியது. அமெரிக்காவும் ஆளில்லா போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.
திக்ரித் சண்டை 
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமுள்ள நகரங்களை மீட்க ஈராக் ராணுவம் முயற்சித்துப் பார்த்து வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ள திக்ரித் நகரை மீட்க ஈராக் ராணுவம் போராடிப் பார்த்தது. ஆனால் அது கைகூடவில்லை.
அதிரடி பிரகடனம் 
இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைந்து ‘தனி இஸ்லாமிய நாடு” அமைத்துள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கலிபாவாக பக்தாதி 
அத்துடன் இந்த தனி இஸ்லாமிய தேசத்தின் மன்னராக (கலிபா) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் பெயர் மாற்றம் 
மேலும் தங்களது அமைப்பின் பெயரான ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது இனி “இஸ்லாமிய தேசம்” என மாற்றப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆடியோ ரிக்கார்டிங்கில் 34 நிமிட ‘இஸ்லாமிய தேசம்’ பிரகடனத்தை மேற்கொண்ட இந்த இயக்கத்தின் பிரமுகர் அபு மொஹமெட் அல்-அத்னானி, “தற்போது எமது கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அனைவரும், ‘இஸ்லாமிய தேசத்தின்’ பிரஜைகளாக மாற்றப்படுகின்றனர்.இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் தலைமையை ஏற்று, ‘இஸ்லாமிய தேசத்துக்கும்’ அதன் தலைவருக்கும் விசுவாசமானவர்களாக பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த ‘இஸ்லாமிய தேசம்’ அறிவிப்பு, முக்கியமானது மட்டுமல்ல, பல ராஜதந்திர குழப்பங்களையும் ஏற்படுத்த போகிறது. யுத்தத்தையும் வலுப்படுத்த போகிறது.
ஈராக்கிய ராணுவம் பகுதி கைப்பற்றிய திக்ரித் நகரத்தை மீண்டும் கைப்பற்றியதை அடுத்து, இந்த ‘இஸ்லாமிய நாடு’ அறிவிப்பு வெளியாகியுள்ளதில் இருந்து, இந்த இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச அரசியல் தெரிந்த யாரோ உள்ளார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.
இவர்களது ‘இஸ்லாமிய தேசம்’ அறிவிப்பு இன்றைய தேதியில் வெளியாவதில் என்ன முக்கியத்துவம் தெரியுமா?
அமெரிக்காவால் பயிற்சி கொடுக்கப்பட்ட1 லட்சம் வீரர்கள் கொண்ட  ஈராக்கிய ராணுவத்தை, சம்பிரதாயமான யுத்தத்தில் தோற்கடித்துள்ளது இந்த இயக்கம். இதனால், சன்னி வகுப்பை சேர்ந்த தலைமை உள்ள சில நாடுகள், இந்த ‘இஸ்லாமிய தேசம்’ என்பதை ஏற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உள்ளது.
மற்றொரு விஷயம், ISIS தீவிரவாத இயக்கம் பல வெளிநாட்டவர்களை உறுப்பினர்களாக கொண்ட இயக்கம். ஈராக்கிலும், சிரியாவிலும் இந்த இயக்கத்தின் சார்பில் யுத்தம் புரியும் ஆட்களில் பெரிய சதவீதத்தினர், இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் அல்ல, வெளிநாட்டவர்கள்.
இவர்களது ‘இஸ்லாமிய தேசம்’ அறிவிப்பு, மேலும் பல வெளிநாட்டவர்களை இந்த இயக்கத்தின் பக்கமாக திருப்ப போகிறது.

http://webapps.aljazeera.net/aje/custom/2014/ISILpaththruiraq/index.html

Map: Rebel’s path through Iraq

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger