Featured Post Today
print this page
Latest Post

வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...


இலங்கையில் அண்மைக்காலமாய் ஷீயாக்களின் ஊடுறுவல் அதிகரித்து வருவதனை கருத்திற் கொண்டு “வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பிலே புனித ரமழானின் முதல் வாரம் முழுவதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் தொடர் உரை ஆற்றப்பட்டது.

ஷீயாக்களின் வழிகெட்ட சிந்தனைகளையும், இலங்கையில் அவர்களின் ஊடுறுவல்களையும் அறிந்து கொள்ள ஆர்வப்படும் அன்பர்கள் மேற்கண்ட உரையினை கீழ் காணும் இணைப்பை சொடுக்குவதன் மூலம் பார்க்க முடியும்.




ஷீயாக்கள் அன்றும் இன்றும் - முதல் நாள் தலைப்பு: வழிகேடுகள் உருவாகுவதற்கான காரணங்கள்

இரண்டாம் நாள் தலைப்பு: ஷீயாக்களின் தோற்றமும் பின்னணியும்

மூன்றாம் நாள் தலைப்பு: அஹ்லுல் பைத் என்போர் யார்?

நான்காம் நாய் தலைப்பு: தகிய்யாவும் தவறான கொள்கைகளும்

ஐந்தாம் நாள் தலைப்பு: அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தினரின் கொள்கை என்ன?

ஆறாம் நாள் தலைப்பு: இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல்
1 comments

வாக்காளர்களே வரம்பு மீறாதீர்கள்!



2015 ஜனவரி மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து



இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள இச்சந்தர்ப்பத்திலே, பட்டி தொட்டியெங்கும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருவதை காண முடிகிறது. தாம் ஆதரிக்கும் வேற்பாளர்கள் ஆற்றிய பணிகளை புகழ்ந்தும், அவர்களின் ஆளுமை பண்புகளை சிலாகித்தும், எதிரணி வேற்பாளர்களின் குறைகளை குத்திக் காட்டியும், அவர்களின் இயலாமைகளை இகழ்ந்தும் கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டுள்ளதனை பளிச்சென்று அவதானிக்க முடிகிறது.

கட்சிகளுக்கிடையில் வெடித்துச் சிதறும் இத்தேர்தல் கள வார்த்தை சமர்களினால் கட்டுடைந்த பெரு வெள்ளமாய் கட்சிகளுக்கிடையிலான கைகலப்புகளும், தேர்தல் கால வன்முறை வெறியாட்டங்களும் கூட நாடு தழுவிய ரீதியில் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றமை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து  67 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக   பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுன் தொடர்புடைய 350 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்துக்கு கிடைத்துள்ளன. இதில்  ஆறு துப்பாக்கிப் பிரயோக  சம்பவங்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார். வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை தேர்தலின் உஷ்னத்தை உணர்வதற்கான ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே! 


தேர்தல் என்றாலே வசை பாடுதலும், வன்முறை வெறியாட்டங்களில் ஈடு படுவதும், மதுக் குவளைகளுடன் இராக் காலங்களில் உலாவித் திரிவதும் தான் என்ற தப்பான பதிவு இந்நாட்டின் பெரும்பான்மையானவர்களின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பதை காணலாம். ஆனால், ர் உண்மை முஸ்லிமைப் பொருத்த வரைக்கும் அவனது அனைத்து செயற்பாடுகளின் போதும் அல்லாஹ் என்னை அவதானிக்கின்றான் என்ற ஈமானிய உணர்வு அவனை வழிநடத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும் என்று இஸ்லாம் எதிர் பார்க்கிறது. இந்த ஈமானிய உணர்வுப் பிரவாகம் தேர்தல் கால நடத்தைகளை செப்பனிடக் கூடியதாக அமைதல் வேண்டும். 

ஆனால், தேர்தல் என்றவுடன் மார்க்கம் தடை செய்த ஏராளமான தீமைகளில் வீழ்ந்து பாவத்துடன் சங்கமிப்பவர்களே இன்று அதிகமாகவுள்ளனர். தான் விரும்பும் தலைவனின் பெயரை நிமிடத்திற்கு பலவிடுத்தம் உச்சாடனம் செய்து, அவரது புகழ்பாடி, ‘இவரைப் போன்ற பரிசுத்தவான் யாரும் உண்டா?’ என்று கருதும் அளவுக்கு தனது வேற்பாளரை உச்சானிக் கொம்பில் வைத்து மேடைகள் தோரும் புகழாரம் சூட்டுவதை காணலாம். இவ்வாறு புகழ் பாடுவதை நபிகளார் கண்டிக்கிறார்கள். ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், “அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்என்று கூறினார்கள். முஸ்லிம் - 5730

அதே போன்று, வேற்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்ற போர்வையிலே வரம்புகளைத் தாண்டி இணைவைக்கும் வார்த்தைகளை வெளியிடும் அளவுக்கு இன்றைய முஸ்லிம்களின் பிரச்சாரங்கள் அமைந்திருப்பது விசனத்துக்குரியதாகும். அது மட்டுமின்றி, எதிரணி வேற்பாளரின் வெற்றியை எப்படியாவது தட்டிப்பறித்துவிட வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்திய குற்றச்சாட்டுக்களையும், ஆதாரமற்ற அவதூறுப் பிரச்சாரங்களையும் கூட பொது மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அள்ளி வீசுவதை பார்க்கின்றோம். இது இஸ்லாம் தடுத்த மிகப்பெரிய குற்றம் என்பதை உள்ளத்தில் இருத்தி நாவுக்கு கடிவாளம் இடுதல் வேண்டும். அத்துடன், ஒருவன் மீது கொண்ட பகைமை அவனுக்கு நீதி செலுத்துவதைவிட்டும் உங்களை தடுத்துவிட வேண்டாம் என்ற திருமறைக்குர்ஆனின் போதனைகளை கால்களுக்கடியில் மிதித்துவிட்டு, எதிரணி வேற்பாளனுக்கு எதிராய், அவனது தொண்டர்களுக்கு எதிராய் காடைத் தனங்களை கட்டவிழ்த்துவிடும் கழிசடைத்தனங்களை களத்தில் அதிகமாக காணமுடிகிறது. இது தவிர்ந்து கொள்ள வேண்டிய அதிபிரதான அம்சமாகும்.

மேலும், எதிரணியினரின் சொத்துக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் கேடு விளைவிக்கும் எந்தவொரு அசம்பாவிதத்திலும் ஒரு முஸ்லிம் ஈடுபட்டுவிடக்கூடாது. இது மார்க்கம் தடுத்த மகா பாவம் என்பதை நினைவிற்கொள்ளுதல் வேண்டும். அத்துடன், மார்க்கம் ஹராம் ஆக்கிய இசைக் கச்சேரிகள், ஆடல் பாடல்கள், மதுக் கொண்டாட்டங்கள் போன்ற தேர்தல்கால களியாட்டக் கச்சேரிகளில் ஒரு முஸ்லிம் எக்காரணம் கொண்டும் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி பண உதவிகளையும் நல்கக் கூடாது. குறிப்பாக, தேர்தல் என்பது சுயாதீனமாக, மக்கள் விருப்பத்தை பொருத்து ஜனநாயக வழியில் இடம்பெறுதல் வேண்டும். இச்சுமுகமான வாக்களிப்பு முறையை எதிர்த்து தன் கட்சிக்காரருக்கு கள்ளவோட்டுகள் அளிப்பது, அச்சுறுத்தி வோட்டு போடவைப்பது உள்ளிட்ட எந்தவொரு அக்கிரமத்திற்கும் ஒரு முஸ்லிம் துணைபோய்விடக் கூடாது.

மேற்குறிப்பிட்ட ஒழுங்குகள் பேணப்பட்டு, நீதியும், சுதந்திரமானதுமான தேர்தலாய் இந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!


0 comments

சொரனையற்ற சினிமா கூத்தாடிகளின் இறக்குமதியால் சோரம் போன மஹிந்த சிந்தனை




7 வது ஜனாதிபதித் தேர்தலின் பிரச்சாரம் பட்டி பொட்டியெங்கும் அணல் பரக்கும் தருணத்தில் நடப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அதிரடி நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சானிக்கே அழைத்துச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.

30 வருட யுத்தத்தை வென்று, விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் அதிவேக பாதைகளை அமைத்து மக்களின் மனங்கவர் தலைவனாக இன்றளவும் நானே உள்ளேன் என்று மேடைகள் தோரும் முழங்கிய ராஜபக்ஷ அவர்கள் திடுதிப்பென்று பொலிவுட் சினிமாக் கூத்தாடிகளான சல்மான் கான் மற்றும் ஜெக்குளின் உள்ளிட்ட குத்தாட்டக் காரர்களை இலங்கைக்கு அதுவும் தனக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுவதற்காக அழைத்து வந்துள்ளமை கல்விமான்களை மட்டுமின்றி கலப்பை பிடித்து உழுபவர்களை கூட திகைப்படையச் செய்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முன்பொருபோதும் இல்லாத சீரழிந்த இந்திய பாணியிலான சினிமா மயப்பட்ட அரசியல் முன்மாதிரியொன்றிற்கு இதன் மூலம் மஹிந்த அவர்கள் வித்திட்டுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள அணர்த்தத்தினால் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்து 80 000 க்கும் அதிகமான குடும்பங்கள் இல்லிட, உணவு, உடை வசதியின்றி முகாம்களில் முடங்கி, 30 க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ள இந்நிலையில்  கோடிகளுக்கு மேல் செலவழித்து கூத்தாடிகளை வரவழைத்து அரசியல் நடாத்தும் அளவுக்கு மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலை தான் என்ன?




சல்மான் கானின் வருகை உணர்த்தும் செய்திகள் ஏராளம் இருந்தாலும் ஒரு சிலதை மட்டும் அலசுவதே இவ்வாக்கத்தின் நோக்கம்.

1.   என்னதான் தன்னை இந்நாட்டின் மன்னனாக கற்பனை செய்து கொண்டாலும் மைத்திரியின் வருகையால் மஹிந்தவின் வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருவது மட்டுமின்றி, மைத்திரியின் கூட்டங்களுக்கு அலைமோதும் மக்கள் வெள்ளத்தில் கால் பங்கையாவது மஹிந்தவின் பொதுக் கூட்டங்களில் காண முடியவில்லை என்பதுவே யதார்த்தம்.

2.   இவ்வாறு சரிவடைந்து வரும் வாக்கு வங்கிகளை சல்மான் கான் என்ற கூத்தாடியின் மீதுள்ள பக்தியை வைத்து தக்க வைப்பதற்கு முயல்கிறார் மஹிந்த.

3.   வளமான எதிர்காலத்தை உருவாக்குகிறேன் என்று வாக்குக் கேட்கும் மஹிந்த அவர்களின் மேற்படி செயல் எதிர்கால சந்ததிகளை மானங்கெட்ட கூத்தாடிகளுக்கு கூஜா தூக்கும் கலாச்சாரத்தின் பால் தள்ளிவிடுவதாகவே அமைந்துள்ளது.

4.   தன் அரசியல் இருப்பை ஸ்தீரப்படுத்துவதற்காய் அரை குறை ஆடையணிந்து, மானத்தை இழந்து குத்தாட்டம் போடும் நடிக நடிகைகளுக்கு சிறப்புக் கதிரை வழங்கி, விசேட அதிதியாக்கும் கேடுகெட்ட கலாச்சாரத் திணிப்பு 30 வருட கோர யுத்தத்தின் தாக்கத்தை விட அதி பயங்கரமானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறியாதது ஏனோ?

5.   இது கால வரை அங்கங்களை மறைத்து ஆடையணிந்த முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுபலசேனா கூக்குரலிட்டதும் இது போன்ற குட்டைப்பாவாடை மாதசிரோமணிகளை இறக்குமதி செய்வதற்குத் தானோ? கௌதம புத்தரின் பஞ்ச சீலத்தை உச்சாடனம் செய்து கொண்டு, பௌத்த கலாச்சாரத்தை இந்நாட்டில் காப்பாற்ற வேண்டும் என்று நீலக்கண்ணீர் வடிக்கும் இனவாதிகளின் தர்மத்தை காக்கும் இலட்சனம் இது தானோ?

6.   ஆசியாவின் ஆச்சரியமாய் இலங்கை ஜொலிக்கும் என்ற வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் அங்கங்களை காட்டி அழைந்து திரியும் அசிங்கப்பட்டவர்களின் உருவாக்கம் அதிகரிக்கும் என்பதுவோ?

எது எப்படியிருப்பினும், அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல் அசைக்க முடியா தலைவனாக இருந்த மஹிந்தவின் அதிகாரக் கதிரை தற்போது ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அதனை தக்கவைப்பதற்காகவும், தவறிப்போகும் வாக்குவங்கிகளை எப்பேர்ப்பட்டாவது மீளப்பெற வேண்டும் என்பதற்காகவும் மஹிந்தவினால் எடுக்கப்படும் இறுதிக்கட்ட முன்னெடுப்புகளில் ஒன்றே கூத்தாடிகளின் இறக்குமதி!

இது மஹிந்தவின் உள்ளத்தில் குடிகொண்டுள்ள தோல்வி பயத்தை தோலுரித்துக் காட்டும் பட்டவர்த்தனமான நிகழ்வு என்பதே சாலப் பொருந்தும்.






0 comments

பல்கலைக் கழக வாய்ப்பபை தவறவிட்ட மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு. A/L இல் குறைந்தது 3S தகுதிகள்.


இலங்கை உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இலவச கல்வி (http://www.mohe.gov.lk/)

சிறியளவு Z புள்ளிவித்தியாசத்தில் பல்கலைக் கழக வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உயர் கல்வி நிறுவனத்தினால் (http://www.sliate.ac.lk) தற்போது பின்வரும் HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பாடநெறிகளாவன :-

üHNDIT (Higher National Diploma in Information Technology) –http://www.hnditkandy.edu.lk,
ü  HNDM (Higher National Diploma in Management),
ü  HNDA (Higher National Diploma in Accountancy),
ü  HNDTHM(Higher National Diploma in Tourism & Hospitality Management),
ü  HNDBA (Higher National Diploma in Business Administration),
ü  HNDE(Higher National Diploma in English)

·         A/L இல் குறைந்தது 3S சித்திகளை பெற்று A/L சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

·         இப்பாடநெறிகள் முற்று முழுவதும் முழு நேர இலவச பாடநெறிகளாகும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 31 December 2014

விண்ணப்ப படிவம்:


விண்ணப்பபடிவத்தைஅனுப்பவேண்டியமுகவரி:

Advanced Technological Institute, No:16, Kappetipola Road,Kandy. (Before : 31stDecember 2014)

மேலதிகதகவல்களுக்கு 05 December 2014 வர்த்தமானியை பார்வையிடவும்.

https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WUEF4Mmtva19CNEk (in Tamil)

 https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WZDAtaVg1TkxEdm8(in sinhala)

மேலதிக தகவல்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் :

Mufeeth Ali : 0770214314(talk in Tamil)

Chamara : 0712558845(talk in English)

Chanaka : 0712713726(talk in Sinhala)


Kandy ATI campus:081-2226644 
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger