சளித்தொல்லையை போக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி






துளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு  வாயுவை உள்ளிழுத்து அதிக பிராணவாயுவை வெளியிடுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் இலை, காம்பு என முழுச்செடியும் மருந்தாக பயன்படுகிறது. எய்ட்ஸ் நோயை அழிக்கும் அளவிற்கு இதற்கு சக்தி இருக்கிறது என நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன் கூறுகிறார்.

வெள்ளை துளசியில் இலை பச்சையாக இருக்கும். பூக்கள் கருநீல நிறம். இதற்கு நல்ல மணமும் சிறிது கார சுவையும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ocimum sanctum linn.    கருந்துளசியின் தாவரவியல் பெயர் ocimum sp. இது நந்தவனங்களிலும், கோயில் போன்ற சில இடங்களிலும்தான் காணப்படுகிறது. இதன்  தண்டும் இலையும் கருநீல நிறமாக இருக்கும். இலைகள் கரும் பச்சையாக இருக்கும். காரத்தன்மை கூடுதலாக இருக்கும். 

துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்துவந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி  நீங்குகிறது. பசுமையான இலையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்துவர நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்குகிறது. துளசி இலைச்சாறை 2-3 துளிகள் காதுக்குள் விட்டால் காதுவலி குறைகிறது. 

துளசி இலைச்சாறு சக்தி மிக்க கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.  காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். தினசரி 4 துளசி இலையை பறித்து சாப்பிட்டால் அதன்பலன் தெரியும். கிராமங்களில் இருப்பவர்கள் சளிப்பிடித்தாலோ, மூக்கு ஒழுகினாலோ துளசி இலையின் சாற்றை கொடுப்பார்கள். 

வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது. காய்ச்சலுடன் கூடிய ஆஸ்துமா நோய்க்கு துளசியை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  துளசி சாறு தொண்டை பகுதியிலுள்ள நோய் கிருமிகளை முற்றிலும் அழிக்கும். தோல் அரிப்பு, சொறி, சிரங்கு உள்ளவர்கள் இதன் சாற்றை பூசி வந்தால் விரைவில் குணம் தெரியும். படர்தாமரைக்கும் இச்சாற்றை பயன்படுத்தலாம்.  இதன் இலை மற்றும் குச்சிகளை கொண்டு புகை போட்டால் கொசுக்கள் வராது. 

கருந்துளசி இன்னும் அதிக பலன் தருகிறது. வயிற்றில் குழந்தை இறந்து விட்டால் அதை உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும். இல்லையேல் தாயின் உயிருக்கு மோசம் ஏற்படும். இதற்கு கருந்துளசி நன்கு பயன்படுகிறது. ஒன்பது கருந்துளசி இலையை மென்று தின்று விட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை உடைத்து அதை மெதுவாக மென்று உண்டால்  தேள் விஷம் முறியும். 

கருந்துளசி இலையை சுத்தம் செய்து சாறு பிளிந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அஜீரணம், வயிற்று போக்கு குணமாகும். ஜீரணக்கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி, ஆகியவற்றிற்கு துளசி சிறந்த மருந்தாகும். இரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இப்படி துளசி நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தேவை. கருந்துளசி பெரும்பாலும் வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. வெள்ளை துளசி தரிசு நிலங்கள், வயல் ஓரங்களில் தானாக வளரும். விதைகளை தூவியும் வளர்க்கலாம். 

ஆஸ்துமா, கேன்சர் அண்டாது

ஈஸ்னோபிலியாவும், ஆஸ்துமாவும் வெவ்வேறு காரணங்களால் வரும் நோய்கள் என்றாலும் இரண்டும் சகோதர நோய்கள் என அழைக்கப்படுகிறது. இப்போது இந்நோய்கள் அநேகரிடம் காணப்படுகிறது. இதற்கு துளசி பெரிய நிவாரணி. துளசி கசாயத்தில் மிளகு சேர்த்து குடித்தால் முற்றிலும் குணமாகும். தொடர்ந்து குடித்து வந்தால் இந்த இரு நோய்களும் அண்டாது. 

தினமும் 20 துளசி இலையை உண்டு தண்ணீர் குடித்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும்.இதேபோன்றுதினமும் காலை மாலை இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை உண்டுவந்தால் கேன்சர் குணமாகும். தினமும் ஒரு துளசி இலை சாப்பிட்டால் புற்றுநோய் அண்டாது என்ற ஒரு பழமொழியே உண்டு.

உடல் சூட்டை குறைக்கும்

துளசி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து உள்ளது. துளசி குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வேட்கையை குறைக்குமே தவிர மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

எய்ட்ஸ் குணமாகும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் கிருமி தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதன் மூலம் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்பது இயற்கை மருத்துவ கருத்து. அதிக சக்தியான நோய்கிருமிகளையும் அழிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் துளசி இலை எய்ட்ஸ் நோய்க்கு சிறந்த மருந்து. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 5 வகையான துளசிகள் பயிரிடப்படுகின்றன. மணிப்பூரில்  சாஜிவா ஜெயிலில் உள்ள கைதிகளில் 750க்கும் மேற்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியது கண்டறியப்பட்டபோது துளசி இலை மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நல்ல பலன் கிடைத்ததாக சிறைஅதிகாரி பாண்டகர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger