சிகரெட் புகைப்பதனால் இலங்கையில் ஒரு நாளைக்கு 60 பேர் உயிரிழப்பதுடன் ஒரு வருடத்திற்கு 66 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினமானது புகைத்தல் எதிர்ப்பு தினமாகும். இதற்கமைய கடந்த வருடம் இலங்கையில் புகைப்பவர்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைவடைந்தது.
இருப்பினும் இலங்கையில் இளைஞர்களை விட அதிகமாக வயோதிபர்களே சிகரெட் புகைக்கின்றனர். இந்நிலையில் புற்றுநோய்க்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் புகைப்பவர்களென தெரிய வந்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் சிகரெட் புகைப்பதனால் ஒரு நாளைக்கு 60 பேர் உயிரிழக்கின்றனர். அத்தோடு ஒரு வருடத்திற்கு 66 ஆயிரம் பேர் வரையில் உயிரிழக்கின்றனர்.
நாட்டில் புகைப்பவர்களின் எண்ணிக்கையினை குறைக்கும் முகமாக சுகாதார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன்படி சிகரெட் பெட்டிகளில் 60 இலிருந்து 80 சதவீதம் வரையில் அபாய எச்சரிக்கை உருவப்படத்தை உட்செலுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது
Post a Comment