குருநாகல் மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 520 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் நகர சபை உட்பட குளியாப்பிட்டி, கட்டுகம்பளை, தம்பதெனிய, பொல்கஹவெல போன்ற பிரதேசங்களிலேயே பெருமளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் லக் ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக குருநாகல் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக நுளம்புகள் பெருக்கமடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது. கடந்த வருடம் குருநாகல் மாவட்டத்திலுள்ள 2800 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 28 பேர் இந்நோய் காரணமாக இறந்துள்ளனர். தற்சமயம் தீவிரமாக பரவி வரும் டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார செயலகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment