ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர் மழை கொட்டி தீர்க்கிறது. மலைப்பகுதியான பக்லான் மாகாணத்தில் இடைவிடாது பெய்த பெருமழையால் அங்குள்ள பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து, கரை புரண்டு ஓடுகிறது.
4 கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் ஒதுங்க கூரையின்றியும், குடிக்க நீரின்றியும் நிற்கதியாக தவிக்கின்றனர். பேரிடர் மேலாண்மை குழுவினர் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலும் வசதி குறைவான மக்கள் வாழும் இப்பகுதியில் கடந்த மாதம் உண்டான வெள்ளப் பெருக்கின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே பூமிக்குள் புதையுண்டு போனது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இந்த இழப்பின் வலி மறைவதற்குள் நேற்று மீண்டும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியாகிய 74 பிரேதங்களை இதுவரை பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் சிலரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Post a Comment