இனவாதத் தீயில் கருகிப் போன தர்கா நகர் மற்றும் பேருவளை மக்களின் வாழ்விடங்களை புணர் நிர்மானம் செய்து கண்ணீர் துடைக்க உதவிக் கரம் நீட்டிடுவீர்!




இனவாதக் காடையர்களின் காடைத் தனமான தாக்குதல்களினால் பல 300 க்கும் அதிகமான வீடுகளும் 100 க்கும் மேற்பட்ட வியாபாரத் தளங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.

இதில் பலரது வீடுகளும், வியாபார நிலையங்களும் முற்றாக இனவாதத் தீயில் கருகி சாம்பலாகி விட்டன. குறிப்பிட்ட ஊர்களில் நிவாரணப் பணிகள் நடந்த போதிலும்  அவை பெரும் பாலும் உணவுத் தேவையை நிவர்த்திக்கும் முகமாகவே அமைந்துள்ளன. பாதிக்கப் பட்ட மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை அடுத்து எங்கு தங்குவது? எரிந்த வீடுகளை எவ்வாறு மீளக் கட்டுவது? வீட்டுக்குரிய அத்தியவசிய தளபாடங்களை எப்படி கொள்வனவு செய்வது? அழிந்து போன வியாபார நிலையங்களை புணர் நிர்மானம் செய்து மீண்டும் எப்படி வாழ்வில் கரை சேர்வது? என்பதாகத் தான் அமைந்துள்ளது.

புனித ரமழான் எம்மை எதிர் நோக்கும் இச் சந்தர்ப்பத்தில் நிம்மதியாய் தங்கி நோன்பு நோற்கும் நிலை அற்றவர்களாய் நம் தொப்புல் கொடி உறவுகள் கண்ணீருடன் உள்ளனர்.

ஒரு முஸ்லிமின் துன்பங்களில் ஒன்றை நீக்குபவனது மறுமை துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்குகிறான் என்பது நபிகளாரின் வாக்கல்லவா?

கண்ணீருடனும், உள்ளம் நிறைந்த சோகத்துடனும், எதிர் காலம் என்னவாகுமோ என்ற ஏக்கப் பெரு மூச்சுடனும் வாழ்வை கழிக்கும் எம் அளுத்கமை மற்றும் பேருவளை மக்களின் துயர் துடைத்து, அவர்களின் எரிந்து போன வீடுகளை புணர்நிர்மானம் செய்து. கருகிய வியாபார தளங்களை புதிதாக கட்டுவிக்கும் நற்பணிக்கு பல நூறு கோடிகள் அவசியப் படுகின்றன.

கண்தடைப்புக்காய் அரசு செய்யும் போலி வாக்குறுதிகளை நம்பி நம் சொந்தங்களை நடுத்தெருவில் விடலாமாஆதலால், யாருக்கு அல்லாஹ் பொருளாதாரம் எனும் அருளை அள்ளி வழங்கியுள்ளானோ அவர்கள் பாதிக்கப் பட்டு நடுத்தெருவில் அல்லாஹ்வின் உதவியை அடுத்து எம் உதவியை எதிர் பார்த்து நிற்கும் அன்பர்களின் வீடுகளையும் வியாபார ஸ்தலங்களையும் புணர் நிர்மானம் செய்யும் நற்பணிக்கு தாராளமாக அள்ளி வழங்குமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுக்கிறது.

உங்களுடைய ஸகாத் மற்றும் ஸதகாக்களை பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் துயர் துடைக்கும் நற்பணிக்கு செலவிடுமாறு வினயமாய் கேட்கிறோம்.

பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கான நிரந்தர வதிவிட வாழ்வாதார உதவிகளை ஆற்றும் பணியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முழு வீச்சாக களம் இறங்கியுள்ளது. உங்கள் ஸகாத் ஸதகா உதவிகளை எமக்கு தாராளமாக தந்துதவினால் தேவையுடையவர்களுக்கு அது சென்றடையும் என்பதை உத்தரவாதப் படுத்துகின்றோம்.

உங்கள் ஸகாத் மற்றும் ஸதகா உதவிகளை பணமாக வைப்பிலிட வேண்டிய வங்கிக் கணக்கு

Sri Lanka Thawheed Jamath

Hatton National Bank

Maradana Branch

Acc.No: 108010104971

Telephone Number : 0779481767

என்ற வங்கிக் கணக்கில் இன்றே வைப்புச் செய்ய முடியும். பணம் 

வைப்பிலிட்டவர்கள் 0779481767 என்ற கையடக்க தொலை பேசியுடன்

தொடர்பை ஏற்படுத்தி எவ்வளவு தொகை, எத்தனையாம் திகதி 

வைப்பிலிடப்பட்டது, வைப்புலிட்டவரின் மின்னஞ்சல் அல்லது வீட்டு 

முகவரி என்பவற்றை தவறாது குறிப்பிடவும். நீங்கள் தந்த பணம் எம்

 கரம் சேர்ந்தது என்பதனை உறுதிப்படுத்தி பணத்தை பெற்றுக் 

கொண்டதற்கான ஜமாஅத்தின் உத்தியோக பூர்வ பற்றுச் சீட்டு உங்கள் 

முகவரிக்கு இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கப்படும்.




Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger