சர்ச்சைக்குரிய தீவில் சீனா ராணுவ தளம் அமைக்கிறது.
தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய ஒரு தீவு உள்ளது. அந்த தீவை சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 3 நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன.
ஆனால் அந்த தீவு தங்களுக்கு தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடுகிறது. அதை எதிர்த்து ஹாஹு சர்வதேச கோர்ட்டில் பிலிப்பைன்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதை தொடர்ந்து அந்த தீவை உரிமை கொண்டாடுவதற்கான உரிய ஆவணங்களை 6 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சீனாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதை சீனா கண்டுகொள்ளவில்லை. சர்வதேச கோர்ட்டின் உத்தரவை நிராகரித்த சீனா அங்கு ராணுவ தளம் அமைக்க முடிவு செய்துள்ளது.
மேலும் அதை ஒட்டி செயற்கை தீவும் அமைக்கிறது. அதற்கான திட்டத்தை சீன அரசு தயாரித்துள்ளது. ரென்மின் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஜின் கர்னராங் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதில் துறைமுகமும், விமான படை தளமும் அமைக்கப்படுகிறது. இது இந்திய பெருங்கடலில் டிகோ கார்சியா தீவில் அமெரிக்கா அமைத்துள்ள 44 சதுர கி.மீட்டர் பரப்பளவு ராணுவ தளத்தை விட 2 மடங்கு பெரியதாக இருக்கும்.
மேலும் இங்கு கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புதல், எண்ணை கிணறுகள் அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற உள்ளது. இந்த நடவடிக்கைளின் மூலம் தென் சீன கடல் பகுதியில் தனது விமான படை அதிகாரத்தை பலப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
Post a Comment