ஈராக்கில் கிர்குக் அருகே 2 பெரிய எண்ணெய் வயல்களை குர்திஷ் ராணுவமான பெஷ்மெர்கா கைப்பற்றியுள்ளது. ஈராக் நாட்டில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது.
அந்நாட்டின் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. அத்துடன் தாங்கள் கைப்பற்றிய சிரியா, ஈராக் பகுதிகளை ஒருங்கிணைந்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இதனிடையே ஈராக்கில் குர்திஷ் இன மக்கள் தங்களது பகுதியை தனிநாடாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குர்திஷ் சுயாட்சி மாகாணத்துக்குரிய ராணுவமான பெஷ்மெர்கா, கிர்குக் மற்றும் பாஸ்ஹசன் ஆகிய இடங்களில் உள்ள மிகப்பெரிய எண்ணை வயல்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் குர்திஷ் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 2 எண்ணெய் வயல்களில் இருந்த படைகளை வாபஸ் பெற்று அவற்றை அரசியிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment