அளுத்கம சம்பவங்களை சர்வதேச மயப்படுத்த வேண்டாம் என அரசாங்கம் முஸ்லிம் சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை முஸ்லிம் பேரவையுடன் நடைபெற்ற சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அளுத்கம சம்பவம் ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் எனவும் குறுகிய நோக்க நலன்களை எதிர்ப்பார்க்கும் நபர்கள் அந்த சம்பவததை ஊதி பெருப்பித்து வருவதாகவும் அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.
இலங்கையர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். தமிழ் மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமது பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை போன்ற விளைவுகள் ஏற்படக் கூடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் கடந்த மாதம் ஜெனிவாவில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் முஸ்லிம் பேரவை அமைச்சரிடம் விளக்கம் பெற முயற்சித்தது.
அளுத்கம வன்முறைகளுக்கு இலங்கையின் முஸ்லிம் சமுகத்தின் தவறே காரணம் என ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மனிஷா குணசேகர தெரிவித்திருந்தாக இலங்கை முஸ்லிம் பேரவை குறிப்பிட்டது.
Post a Comment