நான் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுடன் தொடர்பு கொண்டு ஊரில் பதட்ட நிலை நிலவுவதால் கூட்டத்தை ரத்து செய்து விடலாமா என்று கேட்டேன். அதற்கவர் , பைத்தியமா ( Don’t be silly )-
ஹாமதுருகளே ! நீங்கள் முன்னெடுத்து செல்லுங்கள் எல்லா வழிகளிலும் நாம் பாதுகாப்பு வழங்குவோம் என்றார் அதன் காரணமாகவே கூட்டத்தை நடத்தினேன் . என கடந்த மாதம் 15 திகதி வன்முறைக்கு காரணமான அளுத்கமஇடம்பெற்ற கூட்டத்தின் ஏற்பாட்டாளர் என்று அறியப்படும் பாதிராஜகொட ஸ்ரீ விக்கிரம விகாரையின் அதிபதி படல்கும்புரே ஆரியசாந்த தேரர் தெரிவித்துள்ளார் .
சிலோன் டுடே ஆங்கில பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் , உண்மை நிலையை கண்டறியவே அளுத்கமையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன் பிக்குவை தாக்கியவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டார். இந்த பகுதி பொலிசாரினால் பிக்குகளுக்கு நீதி போதுமானதாக வழங்கப் படவில்லை , பிக்குவை தாக்கிய மூவருக்கும் நீதி வழங்கப் படவேண்டும். (இந்த பகுதி) போலீசார் அவர்களை கைது செய்யவில்லை உண்மை நிலையை கண்டறியவே 15 ஆம் திகதி மாநாட்டை ஏற்பாடு செய்தோம் . இக் கூட்ட ஏற்பட்டு முஸ்லிம்களு எதிரானது அல்ல இக் கூட்டத்திற்கு BBS அழைக்கப் படவில்லை பெளத்த தேரர் என்ற வகையில் ஞானசார தேரர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார் .

நான் BBS அமைப்பில் தான் உறுப்பினர் இல்லை என கூறும் இவர் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தன்னை அந்த அமைப்பில் இணையுமாறு அழைப்பு விடுத்தால் இணைவேன் எனவும் தெரிவித்துள்ளார் . மேலும் அந்த போட்டியில் அவர் பொது பல சேனா வன்முறைக்கு காரணமல்ல பிக்குவை தாக்கிய முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் பொலிசார் ஒருவரை மட்டும் கைது செய்தமைதான் பிரச்சினைக்கு பிரதான காரணம் எனவும் தெரிகின்றார் .
அதேவேளை பிக்கு தாக்கப்பட்டதாக தெரிவிக்ககும் இவர்களில் குற்றசாட்டு சோடிக்கப்பட்டது நேரில் பார்த்தவர்களை ஆதாரம் காட்டி அளுத்கம , தர்ஹா நகர் முஸ்லிம்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment