இஸ்ரேலிய வெறியாட்டம் : 172 படுகொலை 1230 பேர் படுகாயம் 147 வீடுகள் முற்றாக அழிப்பு !



இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு  காஸா மீது 7 ஆவது நாளாக தாக்குதலை மேற்கொண்டு மொத்தமாக  172 பேரை படுகொலை செய்துள்ளதுடன்       இதுவரை  1230 பேரை   படுகாயப்படுத்தியுள்ளது
, இவர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளனர் . கொல்லப்பட்டவர்களில் 35 சிறுவர் சிறுமியரும் 26 பெண்களும் அடங்குவதாக காஸாவில் இயங்கும் மனித உரிமைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸாவில்  17000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இஸ்ரேலிய விமானம் மற்றும் ஏவுகுண்டுகளினால் 147 பலஸ்தீனர்களின் வீடுகள் முற்றாக  அழிக்கப்பட்டுள்ளதுடன் , நூற்றுகணக்கான வீடுகள் பகுதியளவில் அழிக்கப்பட்டுள்ளது .
பலஸ்தீன் காஸாவில் இருந்து போராளிகள் ஏவுகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் நூற்றுக்கணக்கான ஏவு குண்டுகள் ஏவப்பட்டுள்ள போதும் இது வரை இஸ்ரேலிய தரப்பில் ஒருவரும் கொல்லப்படவில்லை .
அதேவேளை ஹமாஸ் மற்றும்  போராளி அமைப்புக்கள் பல போராளிகளை இழந்துள்ளனர் . சர்வதேச அரங்கில் அர்த்தபுஷ்டியற்ற யுத்த நிறுத்த அழைப்பு விடுக்கப்படுகிறது இஸ்ரேல் தாக்குதல்கள்   தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது .

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger