சென்னை: சுவிஸ் வங்கிகளுக்குப் போட்டியாக பல்வேறு நாடுகளும் கருப்புப் பண சேமிப்புக்கு சொர்க்கமாக வந்து விட்டபோதிலும், சுவிஸ் வங்கிகளுக்கு தொடர்ந்து மவுசு இருக்கத்தான் செய்கிறது. சுவிஸ் வங்கிகள் தொடர்ந்து இந்தியப் பெரும் பணக்காரர்களின் பாதுகாப்புப் பெட்டகமாக இருந்து வருகின்றன. இங்கு சேர்க்கும் பணத்தை அங்கு போய் கொட்டி வருகிறார்கள் இந்தியப் பணக்காரர்கள். இங்கு வைத்தால் ஏகப்பட்ட சட்டச்சிக்கல்கள், நிதிச் சிக்கல்கள் இருப்பதால் எந்தக் கேள்வியையும் கேட்காத சுவிஸ் வங்கிகளை இந்தியர்கள் அதிக அளவில் நாடுகின்றனர்.
2006ல் 41,400 கோடி
கடந்த 2006ம் ஆண்டு கணக்குப்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருந்த பணத்தின் அளவு ரூ. 41,400 கோடியாகும்.
ஆனால் இது 2007ம் ஆண்டு வெகுவாக சரிந்தது. அதாவது ரூ. 27,500 கோடியாக அது குறைந்து போனது. இங்கு போட்டு வைத்திருந்த பணத்தை வேறு வங்கிகளுக்கு பலரும் மாற்றி விட்டனர் – பாதுகாப்பு கருதி.
2008ம் ஆண்டு இது மேலும் சரிந்து ரூ. 15,400 கோடியாக குறைந்தது.
இது 2009ம் ஆண்டு இன்னும் குறைந்து ரூ. 12,600 கோடியாக இருந்தது.

2010 நிலவரம்
2010ம் ஆண்டு இந்தியர்களின் பண இருப்பு ரூ. 12,450 கோடியாக இருந்தது.

2011ல் அதிகரிப்பு
2011ம் ஆண்டு இந்தியர்களின் பணம் ரூ. 14,000 கோடியாக அதிகரித்தது.
கோடியாக இருந்தது இந்தியர்களின் பண நிலவரம்.
இறுதியில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருந்த பணத்தின் அளவு அதிகரித்து ரூ. 14,000 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment