.
பொதுபல சேனா
அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா
ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே
தெரிவித்தார்.
ஞானசார
தேரருக்கு 2011ஆம் ஆண்டு
தொடக்கம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் அமெரிக்காவுக்கான வீசா
வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 2013ஆம் ஆண்டில் சமய
நடவடிக்கைகளுக்காக தேரர் பல பமுறை அமெரிக்காவுக்கு சென்று வந்ததாக டிலன்த
விதானகேகுறிப்பிட்டார்.
எனினும் இவரது
வீசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அத தெரணவிற்கு
தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும்
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து ஞானசார
தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது
Post by Usham Lgmm.
Post a Comment