பொது பல
சேனா அமைப்பினரும் இன்னும் இலங்கையிலுள்ள பெளத்த அமைப்புக்களின் பிரதி நிதிகளும்
தற்பொழுது ஊடக அமைச்சில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாடல்
ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அளுத்கம
சம்பவத்தினால் நாரிப் போன பொது பல சேனா அதனை நிவர்த்தி செய்திகொள்ளும் நோக்கில்
அங்கு சென்றுள்ளனர். அளுத்கம சம்பவத்தில் ஊடகங்கள் தமது கடமையை சரியாகச்
செய்யவில்லை என்றும் ஊடகங்கள் பக்க சார்பாக முஸ்லிம்களின் பக்கமே இருந்தது என்றும் அமைச்சரிடம் முறைப்பட்டுள்ளனர்.
இவர்கள்
செய்த அடாவடித்தனங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவியதால் ஆட்டம் கண்டுள்ள பொது
பல சேனா தற்பொழுது முழுப்பூசனிக்காயை சோற்றில் மூடி மறைக்க முற்பட்டுக் கொண்டு
திணறுகின்றது.
Post a Comment