கடந்த ஆண்டில் இடம்பெற்ற (2013) 586 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கைதான 916 பேரில், 31 பேர் பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடையவர்கள் எனவும், அதில் 17 பேர் சேவையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு பதிவாகியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 2528 பேரில், 80 பேர் பாதுகாப்புப் பிரிவுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் அதே வருடத்தில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 4 பாதுகாப்புப் பிரிவினர் கைதாகியுள்ளதோடு, சேவையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 2012ம் ஆண்டு போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதாக கைதான 51,069 பேரில் அறுவர் பாதுகாப்பு பிரிவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கூறிய ருவன் வணிக சூரிய அதில் இருவர் பதவி விலகிச் சென்றவர்கள் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்டமை தொடர்பில், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 169 பேர் 2011ம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டனர். மேலும் 2012ல், 124 பேரும் 2013ல், 114 பேரும் இது தொடர்பில் கைதானதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவை இவ்வாறு கைதானவர்களின் தொகை குறைவடைந்து வருவதையே காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தரவுகளின் படி நாட்டில் நடக்கும் குற்றச் செயல்களுடன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை நிராகரிப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment