பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் நான்கு நாள் பயணமாக, வரும் 19ம் நாள் சிறிலங்கா வரவுள்ளார்.
வரும் 19ம் நாள் பிற்பகல், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். மேலும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது பாகிஸ்தான் இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தானின் மூன்றாவது உயர்மட்ட இராணுவக் குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment