மாவனல்லை, ஹசன் கட்டிடத்தில் அமைந்துள்ள புஹாரி ஸ்டோர்ஸ் இல் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் திருடர்களில் ஒருவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடரபில் மேலும் தெரிய வருவதாவது..
இன்று (இரவு) 1 மணியளவில் மாவனல்லை, ஹசன் கட்டிடத்தில் அமைந்துள்ள புஹாரி ஸ்டோர்ஸ் இன் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் பொதி செய்து எடுத்துச்செல்ல தயாராகி உள்ளனர்.
கடையில் பொருத்தியுள்ள CCTV யை தனது வீட்டில் இருந்தும் தொலைபேசியில் இருந்தும் பார்க்க கூடிய வகையில் கடையின் உரிமையாளர் அமைத்து இருந்ததால், கடையில் நடமாட்டம் ஏற்பட்டதுடன் இவரின் மொபைல் தொலைபேசியில் எச்சரிக்கையுடன் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
அதன்போது கடையில் சிலர் முகத்தை மூடியபடி உலாவிக்கொண்டிருப்பதை கண்டுள்ளார். உடனடியாக போலீசாருக்கும், தெரிந்தவர்களுக்கும் அழைப்பு விடுத்து விட்டு கடைக்கு சென்றுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் போலீசார் கடையின் முன்பக்கம் குவியத் தொடங்கியதும் திருடர்கள் பின் பக்கத்தால் தப்பி ஓடியுள்ளனர். இதன்போது ஒருவர் அங்கிருந்த ஓடையினுள் ஓடி பாலத்தின் அடியில் ஒளிந்துள்ளர். அவரை போலீசார் போலிஸ் நாயுடன் உதவியுடன் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பிடிபட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வருகிறது.
Post a Comment