யுத்தம் எதையுமே விட்டு வைப்பதில்லை. அதில் ஆபிரிக்கர்களும் அடங்குவர். வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஆபிரிக்க கண்ட நீக்ரோய்ட்கள், வளமான வாழ்விற்காக ஐரோப்பிய தேசங்களிற்கு உயிரை பணயம் வைத்து கடல் கடந்து செல்வதும் நடுக்கடலில் விபத்துக்களில் சிக்கி இறப்பதும் வழமையான செய்திகள். முன்னர் அல்ஜீரியா, மொராக்கோ போன்ற தேசங்களிற்கு சென்று மத்திய தரைக்கடல் ஊடாக பிரான்ஸிற்கு அசைலம் கோரி சென்ற ஆபிரிக்கர்களிற்கு அது இப்போது முடியாமல் உள்ளது. பிரான்ஸ் மற்றும் வட ஆபிரிக்க நாடுகளின் கரையோர கண்காணிப்பு மிகத்தீவிரமாக உள்ளது.
ஆபிரிக்காவில் இருக்கும் யூதர்களை இனங்கண்டு தன்சானியா, சாட் போன்ற நாடுகளில் இருக்கும் மொஸாட்டின் ஏஜென்ட்கள் தங்களது முகவர்கள் மூலம் “இஸ்ரேலிற்கு சென்றால் செழிப்பான வாழ்க்கை வாழலாம்” எனும் கனவுகளை அவர்கள் மனங்களில் விதைப்பதன் ஊடாக அவர்களை இஸ்ரேலிற்குள் அசைலம் சீக்கர்ஸ் என்ற பெயரில் கடத்திக் கொண்டு வருவது கடந்த ஒரு தசாப்தமாக நிகழ்ந்து வரும் ஆட்கடத்தல் நடைமுறை.
கிழக்கைரோப்பிய யூதர்களையும், இலத்தீன் அமெரிக்க யூதர்களையும் இஸ்ரேலில் (ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன எல்லையோரங்களில்) குடியிருத்துவதற்கு இஸ்ரேல் எவ்வளவு முயன்றும் அது நடைமுறை சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. ஹமாஸின் ஒரு ரொக்கெட் வந்து வீழ்ந்து வெடித்தாலே அவர்கள் மூட்டை முடிச்சுக்களை மீண்டும் தயார் செய்து விடுகின்றனர். அரசு எவ்வளவு தான் இலவச வசதிகளை வழங்கியும் கூட அவர்கள் அதனை விடவும் பலஸ்தீனர்களின் ஒரு குண்டு வெடிப்பிற்கு அச்சம் கொள்கின்றனர். யூத இனம் மரணத்திற்கும் அதன் இழப்புகளிற்கும் மிகவும் பயந்தவர்கள் என்பது உலக வரலாறல்லவா?!!.
இப்போது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறது ஸியோனிஸம். முதலாவது எல்லையோரங்களில் கறுப்பின யூதர்களை குடியிருத்துவதன் மூலம் திட்டமிட்ட அகன்ற இஸ்ரேல் சாம்ராஜ்யத்திற்கான மக்கள் தொகையை அதிகரிப்பதும் பயந்து சொந்த நாடுகளிற்கு செல்லும் வெள்ளையின யூதர்களின் இடைவெளிகளை நிரப்புவதும். இரண்டாவது, இஸ்ரேலில் கூலித்தொழில் செய்ய இப்போது பலஸ்தீனர்கள் பெரிதாக எல்லை கடந்து வருவதில்லை. அவர்களை நம்பவும் முடியாது. அதனால் கறுப்பின யூதர்களிற்கு புகலிடம் வழங்குவதன் ஊடாக அவர்களை உயர் ஜாதி வெள்ளையின் யூதர்களிற்கு சேவகம் செய்யும், இரண்டாம் சமூதாயமாக கறுப்பின யூதர்களை பயன்படுத்துவது.
பல்லாயிரக்கணக்கான ஆபிரிக்காவின் கறுப்பு யூதர்கள் டெல்-அவிவின் தென்பிரதேசங்களில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம், இடைத்தங்கள் முகாம்கள் என்ற பெயரில் அவர்களிற்கு “ஸியோனிஸம்” பற்றியும், அரபுகளிற்கு எதிரான பயங்கரவாத சிந்தனைகள் பற்றியும் மூளைச்சலவைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் திருப்திகரமானவர்கள், தங்கள் கருத்தை உள்வாங்கியவர்கள் என இனங்காணப்பட்டவர்களிற்கு அரச வசதிகளுடன் செல்டரிங் ஸ்கீமில் வீடுகள் வழங்கப்படுவதுடன் அவர்கள் மேல்தட்டு யூதர்களிடம் சக்கிலியர்களாக தொழில் செய்யும் நிலைமைகள் உருவாக்கப்படுகின்றன.
கறுப்பர்களை பொருத்தவரை நல்ல சாப்பாடு, இலவச மருத்துவம், நீர் மற்றும் மின்சார விநியோகம், சிறந்த பாதைகள், கல்விக்கூடங்கள் என எல்லாமே கிடைக்கிறது. நல்ல சம்பளத்தில் தொழிலும் கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கன் பேக்கர் பன் கிடைக்கிறது. போதாதா. ஐரோப்பிய கனவுகளை தூக்கி வீசிவிட்டு யூத ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் தம்மையும் விரும்பியோ விரும்பாமலோ இணைத்து கொள்கின்றனர்.
இங்கே தான் வந்தது வினை. ஹமாஸின் கஸ்லாம் படையணியும், அல்-அக்ஸா பிரிக்கேட் என்ற பெயரில் ஹிஸ்புல்லாக்களும் ஏவும் ரொக்கெட்கள் வந்து இஸ்ரேலில் விழ ஆரம்பிக்கும் போது இவர்களிற்கான தற்காப்பு ஒழுங்குகளை இஸ்ரேல் செய்து கொடுக்கவில்லை. சைரன்கள் அலறியவுடன் எங்கு ஓடுவது எங்கு பதுங்குவது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறார்கள் இந்த யூத கறுப்பர்கள். அவர்கள் இதில் படுகாயப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, இஸ்ரேலிய அரசு அதனை இஸ்ரேலிய பொதுமக்களின் இழப்பாக உலகிற்கு காட்டுகிறது. கறுப்பர்கள் வறுமையின் காரணமாக கஸ்டங்களையும் இழப்புக்களையும் தாங்கிக் கொண்டு உணவிற்காகவும், பிற வசதிகளிற்காகவும் வாழவும் சாகவும் தயாரானவர்கள் என்ற மூலதனமே இஸ்ரேலின் இந்த மனித கேடய யுக்தி.
எம்-75 ரொக்கெட்கள் இப்போது புதிதாக வந்து விழ ஆரம்பித்த போது அவை டெல்-அவீவின் தென்பகுதிகளையே தாக்குகின்றன. அதன் வீச்செல்லை வரை அது வந்து வீழ்கிறது. இப்போது அங்குள்ள கறுப்பர்கள் ஆட்டு மந்தைகள் போல சிதறி ஓடுகிறார்கள். சைரன்கள் எச்சரிக்கை அபாய ஒலிகளை எழுப்பும் போது இவர்களிற்கு புகழிடம், காப்பரண் என்பது பதுங்கு குழிகளே. பொதுப்பதுங்கு குழிகள். பல மணி நேரம் மல சலம் கழிக்க முடியாமல் உயிரை கையில் பிடித்து கொண்டு அவர்கள் மேலே அண்ணாந்து பார்த்தவாறு தங்கள் குழந்தைகளை அணைத்துக்கொண்டு இருக்கும் அவலக்காட்சிகள் இவை.
இது இஸ்ரேல் காஸா சண்டைகளின் இன்னொரு முகம். ஸியோனிஸ தேசத்தின் சுயநலன்களிற்காக பலியாக்கப்படும் கறுப்பின யூதர்களின் இரத்தம் பற்றியது.....
http://khaibarthalam.blogspot.com/
Post a Comment