கொத்து கொத்தாய் கொன்றொழிக்கப் படும் பாலஸ்தீன முஸ்லிம்கள்! - ஈரமுள்ள உள்ளங்களுக்கு கண்ணீர் ததும்பும் காட்சிகள்


புனித ரமழானின் புண்ணியம் தேட நினைத்தவர்களை மண்ணுக்குள் புதைக்கும் அவலம்! ஆம்! பாலஸ்தீன இஸ்லாமிய தேசத்தின் முஸ்லிம் மைந்தர்களை கருவறுக்கும் காடைத்தனத்தில் தற்போது இஸ்ரேலிய விபச்சார அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத் தக்கது.

ஒட்டு மொத்த உலகத்தின் கவனமும் FIFA உதைப்பந்தாட்ட போட்டிகளிலும், ஈராக்கில் நிறுவப்பட்ட ISIS கலீபா ஆட்சிப் பிரகடனத்திலும் கூர்மையாக குவிமையப் படுத்தப் பட்டுள்ள தருணத்தில் இரகசியமாய் அதே சமயம் பகிரங்கமாய் பாலஸ்தீனை சுடுகாடாக்கும் நரித்தனத்தில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

உலக மக்களின் கண்களை உதைப் பந்தாட்டம், அபூபக்கர் பக்தாதி எனும் இரு திரைச் சீலைகளால் இறுக்கக் கட்டிவிட்டு இஸ்ரேல் தனது வழமையான அடாவடித்தனத்தை ஆரம்பித்துள்ளமை பாரிய திட்டமிட்ட செயற்பாடாகவே நோக்கப்படல் வேண்டும்.


இப்போதைக்கு காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை முழு பலஸ்தீனத்திற்கும் விஸ்தரிக்க போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது இஸ்ரேல்.

பலஸ்தீனியர்கள் தங்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை காணாமல் விடப்போவதில்லை என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Moshe Yaalon சூளுரைத்துள்ளா(ன்)ர்.

நேற்றைய தினம் இஸ்ரேலிய பாராளுமன்றம் இந்த தாக்குதலுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. மொத்தமாக 40,000 இஸ்ரேலிய ராணுவத்தினர், 1500 சிறப்பு இராணுவத்தினர், IDF’s special K-9 Unit, Sayeret Maglan Unit 212, Yamam Unit, போன்ற தாக்குதல் அணிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

2012-ல் இஸ்ரேலிய ஸியோனிஸ இராணுவம் இது போன்றே காஸாவில் உள்நுழைந்து 08 நாட்கள் சண்டையிட்டது. ஆனால் ஹமாஸ் போராளிகளின் அர்ப்பணம் நிறைந்த தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.

அப்போது முதலே அவர்கள் காஸா மீதான இன்னொரு இனவழிப்பு தாக்குதலை நிகழ்த்த சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருக்கின்றது.

2012ல் நடந்த சண்டையில் இஸ்ரேலியர்களின் விருப்பத்திற்குரியதும் அவர்களின் முழு பலமுமே தங்கியிருந்ததுமான அல் மர்க்கபா யுத்த டாங்கிகள் பலதை கஸ்ஸாம் போராளிகள் சிதறடித்திருந்தார்கள் அதனாலேதான் இஸ்ரேலியர்கள் பின்வாங்க நேரிட்டது. இப்போது ட்ரோன் விமானங்களை இஸ்ரேலியர்கள் உள் நுழைக்கிறார்கள்.





























































Post by ‎شهاب‎.

Post by ‎شهاب‎.

http://aje.me/U308jn
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger