லண்டன்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று பெயர் வெளியிட விரும்பாத 16 வயது சிறுமி ஒருவர் அபார்ஷன் செய்வதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவரிடம் மருத்துவர் விசாரணை செய்ததில் இது தனக்கு ஐந்தாவது அபார்ஷன் என கூறியதை கேட்டு திடுக்கிட்டுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு வருடமும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாவது அதிகரித்து வருவதாக 'தி சன்' என்ற பத்திரிகை எடுத்த கருத்து கணிப்பில் தெரியவந்து உள்ளது.
சர்வேயின்படி கடந்த 2012-ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 2925 சிறுமிகள் அபார்ஷன் செய்துகொண்டனர் என்றும் இவர்களில் 84 பேர் ஒரே ஆண்டில் இரண்டு முறை அபார்ஷன் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுவே 2013-ஆம் ஆண்டு 2538 பேர் அபார்ஷன் செய்துகொண்டதாக கூறுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 185,331 பெண்கள் இங்கிலாந்தில் கருக்கலைப்பு செய்து உள்ளனர்.இவர்களில் 50 பேர் ஒன்பது முறை அபார்ஷன் செய்துகொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சமூகநல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, டீன் ஏஜ் சிறுமிகளுக்கு கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், பாதுகாப்பு முறைகள் குறித்த விபரம் தெரியாததாலும், டீன் ஏஜ் கர்ப்பம் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து பள்ளியில் விழிப்புணர்வு வகுப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம் என்று கூறுகிறார்.
Post a Comment