பொது பல சேனாவின் பௌத்த சமய எழுச்சிக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை 20-07-2014 பி. ப 5.30 மணிக்கு குருநாகல் மாவத்தகம நகரில் சாமோதய மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.
அளுத்கமை சம்பவத்தின் மூலமான அதிர்ச்சியில் இருந்து முஸ்லிம்கள் இன்னும் முழுதாக மீளாத நிலையில் மீண்டும் இவ்வாறானதொரு கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முஸ்லிம்கள் பாதுகப்புத் தரப்பினர் மீதும் அரசாங்கம் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் பலவீனமடையச் செய்துள்ளது.
இந்நிகழ்வில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தெ ஞானசார தேரர் கலந்து கொள்ளவுள்ளார்.
அளுத்கமை இனக்கலவரத்தை தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும் பொருட்டு மத ரீதியான குரோத உணர்வை தூண்டும் ஆர்ப்பாட்டங்களுக்கு அரசு தடை விதித்திருந்தது. ஆனால், முஸ்லிம்களின் ஜனநாயக வழி ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்து விட்டு திரை மறைவில் பொது பல சேனாவிற்கு தனது நேசக் கரத்தை அரசு தொடர்ந்தும் வழங்கிய வன்னமே உள்ளது. அரம்பத்தில் “மன உறுதி பூஜை“ என்ற பெயரில் தலதா மாளிகையில் நடத்தப்பட்ட அனுஷ்டானத்திலும் குர்ஆனையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் வம்புக்கு இழுக்கும் விதமாகவே ஞான சார கருத்து தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கொழும்பிலே “தலைமைத்துவ பயிற்சி வழிகாட்டல்“ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை பொது பல சேனா நடாத்தியது. இதற்கும் அரச தரப்பு தனது பச்சை கொடியை காட்டத் தவறவில்லை.
தற்போது ஏலவே முறுகல் நிலை நீடிக்கும் குருநாகல் மாவத்தைகம பகுதியில் பொது பல சேனா தனது மூன்றாவது நிகழ்ச்சியை அதுவும் பொதுக் கூட்டமாக “சமய எழுச்சி கூட்டம்“ எனும் முகமூடி அணிந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் நியாயபூர்வமான உணர்வுகளை அடக்க முயற்சிக்கும் அரச தரப்பு பொதுபல சேனாவுக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கவதானது பொது பல சேனாவை இயக்கும் சக்தி “நடப்ப அரசே“ என்பது மென்மேலும் உறுதியாகிக் கொண்டே வருகிறது.
Post a Comment