அளுத்கம, பேருவளை உறவுகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என பள்ளிவாயல்களில் அறிவித்த காத்தான்குடி சம்மேளனம்!


அளுத்கம, பேருவளை, தர்ஹா டவுன் உள்ளிட்ட தென்னிலங்கை முஸ்லிம் பிரதேசங்களில் ‘கறுப்பு ஜூன் – 2014′இனவன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதர உறவுகளுக்கு உதவும் வகையில்ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களால் காத்தான்குடியில் நிதி வசூல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது,காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதனைத் தடைசெய்யும் வகையில் கீழ்த்தரமான முறையில் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி பணம் கொடுக்க வேண்டாம் என அறிவித்தல் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.
SLTJ-Notice-1
கடந்த 03.07.2014 வியாழக்கிழமை இரவு காத்தான்குடி பிரதான வீதியில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளையினால் விநியோகிக்கப்பட்ட ‘SLTJ அறிவிப்புச் செய்திருந்த மாபெரும் வாழ்வுரிமைப் போராட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதா? ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா?’ எனும் தலைப்பிலான பிரசுரத்திலேயே காத்தான்குடியின் இருட்டறைத் தலைமையகமான பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் இக்கீழ்த்தரமான செயற்பாடு குறித்து பலத்த விமர்சனமும், குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் செய்த வருந்தத்தக்க செயல்’ எனும் உப தலைப்பில் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“SLTJ  காத்தான்குடிக் கிளையைச் சேர்ந்த நம் சகோதரர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி பிரதான வீதியில் நிவாரண வசூல் செய்து கடை கடையாகச் செல்லும் சந்தர்ப்பத்தில் உடனே அதைத் தடுக்கும் நோக்கம் கொண்டு மெத்தைப்பள்ளி மற்றும் மீரா பள்ளிவாயல்களின் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தி ஒரு கீழ்த்தரமான அறிவிப்பு மக்களுக்கு விடுக்கப்பட்டதையிட்டு நாம் மிகவும் வருத்தமடைகின்றோம்.

“இதை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமே செய்திருக்கன்றது. அதில் கூறப்பட்டதாவது:

anouncer
‘சம்மேளனத்தினால் ஒரு வீட்டுக்கு 300 ரூபாய் வசூலிப்பதாக சம்மேளனம் முடிவெடுத்துள்ளது. ஆகையால் சம்மேளனம் தவிர்ந்த எந்த அமைப்பினர் உங்களிடம் நிவாரண வசூலுக்காக வந்தாலும் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். இப்படிக்கு சம்மேளனம்’.

கண்டிப்பாக இது ஈமான் கொண்டவர்கள் செய்யக்கூடிய காரியமாக இருக்கவே முடியாது. உங்களின் இந்த அறிவிப்பைக் கேட்ட பலர்  SLTJயிற்கு பணம் கொடுக்க வேண்டாம் என சம்மேளனம் அறிவித்ததாகக் கூறி திருப்பியனுப்பியுள்ளனர்.”

”இவர்களின் இவ்வறிவிப்பால், பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவிருந்த ஒரு ரூபாய் பணம்தான் குறைந்திருந்திருந்தாலும் இதற்கு அழ்ழாஹ்விடமே பதில் சொல்லிக் கொள்வார்கள். 

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தனது பணிகளை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்திச் செய்கின்றது. நாட்டின் அனைத்துப் பாகத்திலும் SLTJயின் கிளை உறுப்பினர்கள் நிவாரண நிதி திரட்டலில் ஈடுபட்டு வரும் வேளையில் முன்மாதிரிமிக்க முஸ்லிம் ஊரான நமது ஊரிலுள்ள சம்மேளனம் என்ற அமைப்பினர் செய்திருக்கும் இந்தக் காரியத்தால் நாடளாவிய ரீதியில் சம்மேளனம் பெரும் ஏளனமாக மாறலாம் என்பதில் சந்தேகமில்லை! -” இவ்வாறு அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மேளனம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூல் செய்யத் திர்மானித்துள்ளது என்பதற்காக, ஏனைய அமைப்புக்கள் இந்த ஊரில் நிதி வசூல்களை மேற்கொள்ளக்கூடாது என பகிரங்கமாக அறிவிப்புச் செய்வதற்கு, ஊரின் ‘இருட்டுத் தலைகளின் கூட்டுத் தலமான சம்மேளனத்திற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? என ‘வார உரைகல்’ பகிரங்கமாகவே இதுதொடர்பில் கேள்வி எழுப்புகின்றது.

காலத்திற்கேற்ற வளர்ச்சியடையாத சிறு மூளைகள் சில, சம்மேளனம் எனும் இருட்டுக் குகைக்குள் குந்திக் கொண்டு சிந்திப்பதுபோல் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் இயக்கம் என்பதும் ‘குளறுபடிகளான’ வெறும் நூறு நபர்களைக் கொண்ட ஓர் சாம்பார் கூட்டல்ல. அது, சன்மார்க்கத்தின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கும், வாழ்வுரிமைக்குமாகப் போரடத் துணிந்துள்ள ஒரு பேரியக்கம் என்பதை இந்தக் குறுமதியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Sabeel-Naleemi
இந்தச் சம்மேளனத்தின் சகல செயற்பாடுகளையும் செயற்படுத்தும் அதிகாரமுடைய செயலாளராக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலாமாவினால் நியமிக்கப்பட்ட, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகர சபை உறுப்பினரான சபீல் நளீமி என்பவரே இருக்கின்றார். இவரும் சேர்ந்துதான் பாதிக்கப்பட்ட எமது முஸ்லிம் உறவுகளுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என அறிவிப்புச் செய்திருக்கின்றார்.

இத்தனைக்கும் இவர் சார்ந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற சமூக அரசியல் இயக்கங்களானது, தென்னிலங்கை அனர்த்தத்தை நேரில் சென்று பார்வையிட்டு அனுதாபக் கருத்துக்களையும், கண்டன அறிக்கைகளையும் பகிரங்கமாக வெளியிட்டன.

இந்த பேரினவாத இனவன்முறையில் இழக்கப்பட்ட நான்கு உயிர்களுக்குமான பெறுமதியை அழ்ழாஹ்வினால் மாத்திரமே கணக்கிட முடியும்.

bfds
கொள்ளையிடப்பட்ட, தீயிட்டும் அடித்து நொருக்கியும் அழிக்கப்பட்ட எமது உறவுகளின் சொத்துக்கள் 580 கோடிக்கும் மேல் எனவும், இழக்கப்பட்ட இந்தப் பொருளாதாரம் மீண்டும் சமநிலைக்குத் திரும்பி இம்மக்களின் வாழ்வு வளம்பெற ஏறத்தாள 40 – 50 ஆண்டுகளாகும் என்றும் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில்‘நல்லாட்சி’ புகழ் சபீல் நளீமியும் சேர்ந்த இச்சம்மேளனம், தாங்கள் மட்டுமே வீட்டுக்கு 300 ரூபா வசூலித்து இம்மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு உதவ வேண்டும் எனச் சிந்திப்பதும், ஆணை பிறப்பிப்பதும் எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்?

  • நகர சபையின் குப்பைத் திட்டத்திற்காக வீட்டுக்கு 500 ரூபா வீதம் வசூலித்த கணக்கறிக்கையை வெளியிடுமாறு ‘வார உரைகல்’ பல மாதகாலமாக வற்புறுத்தி எழுதியெழுதி அதன் தொல்லை பொறுக்க முடியாமல்தான் இந்தச் சம்மேளனம் அந்த வசூல் தொடர்பான கணக்கு விபரத்தை வெளியிட்டது என்பதும், அதிலும் ரஹ்மா பள்ளிவாசல் மஹல்லாவில் சேர்க்கப்பட்ட பாரிய பணத் தொகை முழுமையாக விடுபட்டிருந்ததை ‘வார உரைகல்’ சுட்டிக்காட்டிய பின்பே ஒட்டுமொத்தமான கணக்கு விபரம் ஊருக்குத் தெரிய வந்தது என்பதும் இந்த சம்மேளனத்தின் வரலாற்றிலுள்ள கறுப்புப் பக்கங்களாகும்.

இந்த யோக்கியதை கொண்ட சம்மேளனம், எந்த யோக்கியதையில் SLTJ நிவாரணப் பணிக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று அறிவிப்புச் செய்ய முடியும்?

  • rauff
    பாதுகாப்புத் தரப்பினருக்கு காத்தான்குடி மக்களின் சார்பாக நிதி சேகரித்துக் கொடுப்பதற்காக காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் இப்பிரதேச முஸ்லிம் வர்த்தகர்கள், சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களிடம் நிதிவசூல் செய்வதற்காக டிக்கட்டுக்களும் அடித்து நடைமுறைப்படுத்த முயன்றபோது, இந்தச் சம்மேளனக் கும்பல் அதற்குள்ளும் தலையைப் போட்டு சம்மேளனத்தினால் நிதி சேர்ப்போம் எனக் கூறி றவூப் ஹாஜியாரின் செயற்பாட்டை முடங்கச் செய்து சம்மேளனத்தினால் ஒரு குழுவும் அமைத்து இறுதியில் அக்குழுவை எதிர்பார்த்து றவூப் ஹாஜியார் ஏமார்ந்ததும், அக்குழு தலைமறைவானதும் சம்மேளனத்தின் நிதி வசூலிப்பு விவகார முயற்சிகளில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இன்னொரு கறுப்புப் பக்கமாகும்.

  • இதேபோல், பாதுகாப்புத் தரப்பினருக்கு விருந்தோம்பல் நடாத்துவதாகக் கூறி வர்த்தகர்களிடம் ஆயிரமாயிரமாக நிதி வசூலித்து கடைசியில் முன்னாள் முதலமைச்சருக்கும், கூட வந்த பிரதியமைச்சருக்கும் சாப்பாடு போட்டு செமிபாடடைந்தது இந்தச் சம்மேளனம்.

  • MLAM.-Hizbullah-150x150
    சுனாமித்தாக்கம் ஏற்பட்டபோது உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமாகப் பணம் திரட்டி அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கறைபடியாத கைகளில் 65 இலட்சம் ரூபாவைத் தூக்கிக் கொடுத்து காணிகள் வாங்கிய விவகாரத்தில் தசாப்த காலமாக இன்னமும்தான் விசாரணை நடாத்தி காலத்தைக் கடத்தும் உலக சாதனை படைத்த‘நம்பிக்கையிழந்த’ நிறுவனம்தான் இந்தச் சம்மேளனம்.

  • Ashabiya-Baseer
    கடந்த வருடம் சம்மேளனம் அழைத்துச் சென்ற ஹஜ் வழிகாட்டல் சேவைக்கு தலைவராகச் சென்ற அஷ்ஹாபியா பஷீர் ஹாஜியார், இன்று வரை 80 இலட்சம் ரூபாவுக்கான கணக்குகளை முறையாகக் கொடுக்காதிருக்கின்ற நிலையிலும், கடந்த மாதம் 22ம் திகதி அதன் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டத்தை நடாத்தி, சென்ற வருடக் கணக்கறிக்கையையும் அங்கிகரித்து புதிய தலைவர், செயலாளர், பொருளாளரையும் நியமித்து தனது ‘இருட்டறையை இரும்பாக்கி’ இவ்வாண்டிலும் நிறுவியுள்ளது இந்தச் சம ஏளனம்.

இப்படிப்பட்ட சம்மோளனம், எமது தென்னிலங்கை உறவுகளின் கண்ணீரைத் துடைக்க, பசியைப் போக்க, வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிந்தளவு தாருங்கள் எனக் கையேந்திச் சென்ற ஈமானியத் நிறைந்த இளைஞர்களின் கரங்களில் சில்லறைகளைத்தானும் கொடுக்காதீர்கள் என்று அழ்ழாஹ்வின் மாளிகையில் இருந்தே அதர்மமான முறையில் அராஜக அறிவிப்புச் செய்கிறது என்றால், இவர்களின் ஹிருதயம் உஹது மலைக் கல்லை விடவும் கடினமானது என்பது நிச்சயத்திலும் நிச்சயம்.

பச்சோந்திகள்! பள்ளிவாசல்களில் வாரந்தோறும் வாளிகள் வைத்து ”பாரிய நோய் நிதி வசூல்” என பணம் வசூலித்துக் கொண்டு, வைத்தி நிபுணர்களின் அறிக்கைகளுடன் ஏதோ ஒரு தொகை நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாடிச் செல்கின்ற மக்களை பல வாரங்கள் ‘இன்று போய் நாளை வா’ என அலைக்கழித்து விட்டு கடைசியில் கையில் கடிதமொன்றைக் கொடுத்து கடைத்தெருவில் போய் வசூலித்து வைத்தியம் செய்து கொள் என விரட்டி விடும் பன்னிகள்!

இப்படிப்பட்ட வக்கிரக்காரர்கள் இன்னுமொரு தடவை இப்படியானதொரு விசர்பிடித்த அறிவிப்பைச் செய்யட்டும்! அப்புறம் மீதியைப் பார்க்கலாம்.

https://vaarauraikal.wordpress.com
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger