பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாக இதன் மூலம் சர்கோசி பதிவாகியுள்ளார்.
இவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கவோ அல்லது சிறையில் அடைக்கப்படவோ கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
59 வயதாகும் இவர், கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹொலன்டேயிடம் தோல்வியைத் தழுவினார்.
இவருக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பொருட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment