பேருவளையில் இரண்டு நாட்களுக்கு முன்னா் எரியூட்டப்பட்ட முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான புத்தக நிலையத்தை அதன் உரிமையாளரே எரித்து இருப்பதாக பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்திருக்கிறதாம்.
இப்போது முஸ்லிம்களின் இழப்புகள் எல்லாம் அவா்களே செய்து கொண்டவைதான் என்ற தொனியில் பொலிஸ் ஊடக பெருச்சாலியும், சிங்கள ஊடகங்களும் சொல்லி வருகின்றன.
பொலிஸ் ஊடக பேச்சாளா் அஜித் ரோஹன பொய் சொல்லி சொல்லி நாறிக் கொண்டிருக்கும் தனது வாய்க்கு ஒரு தோழனை சோ்த்திருக்கின்றார் அதுதான் பொலிஸ் மோப்ப நாய்.
அஜித் ரோஹனவின் வாயும் அந்த நாயும் இனி முஸ்லிம்களை என்ன பாடுபடுத்துமோ?
கண்முன்னேயே கொலை, கொள்ளை தீவைப்பில் ஈடுபட்ட காடையா்கள கைது செய்யாமல் விட்டு விட்டு, இப்போது பொலிஸ்மோப்ப நாயை வைத்து புலன் விசாரணை செய்கின்றார்களாம்.
ஆச்சர்யம் என்னவென்றால் அந்த நான்கு கால் மோப்ப நாயும் முஸ்லிம்களையே குற்றவாளிகள் என்று குறி வைத்து காட்டுகின்றதாம்.
பொலிஸ் காரா்களே! பேசாமல் இந்த புலன் விசாரணை ஞானசாரவிடம் ஒப்படைத்து விடுங்கள்.
Post a Comment