பொதுபல சேனா குறித்து விவரணத் திரைப்படம்! இயக்குனருக்கு உயிர் அச்சுறுத்தல்


பொது பல சேனா தொடர்பான விவரணப்படமொன்றை தயாரிக்க முனைந்த இயக்குனர் சிரிமல் விஜேசிங்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சிரிமல் விஜேசிங்க எனும் சிங்களத் திரைப்பட இயக்குனருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவர் வேற்றுக்கிரக வாசிகளும், ஏழு சிறுவர்களும் (பிட்டசக்வல வெசியன் ஹா பெஞ்சொ ஹதய்) எனும் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

இந்நிலையில் பொது பல சேனாவின் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள இவர், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விவரணத் திரைப்படமொன்றை தயாரிக்க முற்பட்டுள்ளார்.

அதற்கான ஒரு கட்டப் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அவர் தனது குழுவினருடன் நெதர்லாந்து செல்வதற்காக அண்மையில் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.

இது குறித்து தெரிய வந்தது முதல் பொது பல சேனாவினர் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடத் தொடங்கியு்ள்ளனர்.

தற்போதைய நிலையில் அவருடைய குடும்பத்தினரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இயக்குனர் சிரிமல் விஜேசிங்க மற்றும் அவரது உறவினர் வீடுகளுக்குச் சென்றுள்ள புலனாய்வுப் பிரிவினர் அவர் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக இயக்குனர் சிரிமல் தற்போது தலைமறைவு வாழ்க்கையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger