அளுத்கம நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மக்களை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஞானசார தேரர் வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அவரது பேச்சு வன்முறைக்கு காரணமாக அமைந்ததாக என்பதை ஆராய்ந்து பார்ப்பதே இதன் நோக்கம் எனவும் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment