பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகேவின் தனிப்பட்ட பேஸ்புக் வலைத்தள கணக்கையும் பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது.
ஏற்கனவே பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே தடை செய்திருந்தது.
இனவாத ரீதியான பதிவுகளை திலந்த விதானகே தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியிருந்தன் காரணமாகவே அவரது கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் பேஸ்புக் வலைத்தளத்தில் கணக்குகளை கொண்டுள்ளவர்கள், இனவாத பதிவுகளை மேற்கொள்ளும் கணக்குகளுக்கு எதிராக தமது கணக்குகளில் பதிவுகளை செய்து வந்தனர்.
Post a Comment