நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே.கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு நீதிபதிகளிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பபேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அரச இரகசிய பாதுகாப்பு சட்ட பிரிவு 1955/32 கீழ் மங்கள சமரவீரவை கைது செய்ய நேற்று முதல் உயரமட்ட நீதிபதிகள் கொண்ட குழுவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட மேலும் பல உயரதிகாரிகளுடன் மங்களவை கைது செய்வது பற்றி கலந்தாலோசித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment