கிழக்கு காஸாவில் உள்ள ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களை உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. கிழக்கு காஸாவிலும் கடும் வான் தாக்குதல்களை நடத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் ரெகோர்ட் செய்யப்பட்ட செய்திகள் மூலம் இன்று காலை 8 மணிக்கு முன்னர் (5.00 GMT) சுமார் 100,000 மக்களை காஸாவின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
எகிப்தின் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் மறுத்ததன் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 202 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் தாகுதல்களால் கொல்லப்பட்டுள்ளனர் என பலஸ்தீன் அறிவித்துள்ளது. அத்துடன் நேற்று ஹமாஸின் ஷெல் தாக்குதலால் இஸ்ரேலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹமாஸ் யுத்த நிறுத்தக் கோரிக்கையினை நிராகரித்த பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு "When there is no ceasefire, our answer is fire" (யுத்த நிறுத்தம் இல்லையெனின் எமது பதில் தாக்குதலே) என்ற கருத்தைக் கூறியுள்ளார்
Post a Comment