இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கைக்கானதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய மத்திய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்று முதல் 100 நாட்கள் இந்தியாவிலேயே தங்கி இருப்பார்.
அதன்பின்னர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்து, நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கான விஜயத்தை மேற்கொள்ளதிட்டமிட்டிருப்பதாக குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்வாராக இருந்தால், அதற்கு முன்னதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கை வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விஜயத்துக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக அவர் இலங்கை வரலாம் என்று கூறப்படுகிறது.
சுஷ்மா சுவராஜ் கடந்த 2012ம் ஆண்டும் 12 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment