எனக்குத் தெரிந்த அளவில் நாட்டில் இரண்டேயிரண்டு சண்டியர்கள் இருந்தார்கள். ஒன்று பிரபாகரன் மற்றையது ரோஹன விஜேவீர. இந்த இரண்டு சண்டியர்களும் என்னைக் கொல்லப்பார்த்தார்கள் ஆனால் இறுதியில் அவர்கள் மடிந்து போனார்கள் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
அது போல தற்போது மூன்றாவதாக ஒரு சண்டியன் உருவாகியிருக்கிறான். அதைக் கண்டு நான் பயப்படவில்லை முன்னையவர்களுக்கு நேர்ந்த கதியே இவர்களுக்கும் எனவே நான் எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் என சூசகமாக கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
சில தினங்களுக்கு முன்பாக அளுத்கம விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசிய அமைச்சர், பொலிஸ் தரப்பையும் பொது பல சேனாவையும் நேரடியாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment