பொலிவியா நாட்டில் ஹோட்டல் ஒன்று முற்று முழுதாக உப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் சுவர் முதல் தளபாடங்கள் வரை அனைத்தும் உப்பு கட்டிகளைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.
உப்பினால் வடிவமைக்கப்பட்ட மிகப் பெரிய ஹோட்டல் இதுவெனக் கூறப்படுகின்றது. இந்த ஹோட்டலினை 2 வருடங்கள் செலவு 35 சென்ரி மீற்;றர் அளவிலான ஒரு மில்லியன் உப்புக் கற்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது
16 அறைகளைக் கொண்டுள்ள உப்பு ஹோட்டலில் குளியலறை, சாப்பாட்டு அறை மற்றும் பார் உள்ளிட்ட வசதிகளும் உண்டு. இங்குள்ள தளபாடங்கள் கூட உப்பினாலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இவை உப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளதா என நாக்கினால் நாக்கிப் பார்க்க ஹோட்டல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Post a Comment