ஊவா மாகாண சபைக்காக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஊவா மாகாண சபைக்கு தேர்தல் மூலம் 32 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்காக அரசியல் கட்சியொன்றின் சார்பாக 21 உறுப்பினர்கள் வீதம் பெயரிடப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் இன்று பிற்பகல் அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் பதுளை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், மொனராகலை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் இம்முறை தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், கடந்த 11ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment