சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஸ்ணமூர்த்தி எதிர்வரும் மே 20ம் திகதி சவுதியை சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தகவலை தெரிவித்துள்ளதாக அராப் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேல் கிருஸ்ணமூர்த்தி முன்னர் இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றினார்.
ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்ட பிரச்சினை மற்றும் சேவை காலம் நிறைவு என்பவற்றை முன்னிட்டு இலங்கைக்கான சவுதி உயர்ஸ்தானிகர் ஜவாட் திருப்பி அழைக்கப்பட்டார்.
இதனை அடுத்து சவுதிக்கான புதிய உயர்ஸ்தானிகராக வடிவேல் கிருஸ்ணமூர்த்தி நியதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேல் கிருஸ்ணமூர்த்தி ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் ஆரம்ப கல்வியையும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் உயர்படிப்பையும் முடித்தவராவார்.
இவர் சவுதி செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment