நாடுகள் மீது மேற்கொள்ளப்படும் தேவையற்ற தலையீடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாலைதீவு ஜனாதிபதி யாமீன் அப்துல் கையூம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தளத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் மாலைதீவு அரசாங்கம், இலங்கைக்காக குரல் கொடுக்கும் எனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை தொடர்ந்தும் பாதுகாத்து கொள்ள அர்ப்பணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒன்றாக இணைந்து செயற்படுதன் மூலம் பிராந்தியத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளை காணமுடியும் எனவும் மாலைதீவு ஜனாதிபதி கூறியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ பயணமாக மாலைதீவு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் யாமீன் அப்துல் கையூமுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போதே மாலைதீவு ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். சர்வதேச தளத்தில் மாலைதீவு இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதன் போது நன்றி தெரிவித்து கொண்டார்.
அத்துடன் மாலைதீவில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
Post a Comment